Rakhi Sawant: குடும்ப சண்டையால் திணறும் பாலிவுட்.. ரசிகர்களை டென்ஷனாக்கும் ராக்கி சாவந்த்...
பாலிவுட் திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வரும் ராக்கி சாவந்த் மற்றும் அவரது கணவர் இடையேயான குடும்ப சண்டை ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலிவுட் திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வரும் ராக்கி சாவந்த் மற்றும் அவரது கணவர் இடையேயான குடும்ப சண்டை ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தி திரையுலகில் பிரபல கவர்ச்சி நடிகையாக வலம் வரும் ராக்கி சாவந்த், கடந்த 2019 ஆம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் ரித்தேஷ் என்பவரை திருமணம் செய்து பின்னர் சில மாதங்களில் பிரிந்தார். இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு தொடக்கத்தில் இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் அடில் கானை இரண்டாவது திருமணம் செய்ததை உறுதிப்படுத்தினார்.
திருமணமாகி ஒரு மாதம் கூட முடியாத நிலையில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக தங்கள் பிரிவை அறிவித்தனர். அடில்கான் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும், பணத்தை பறித்துக் கொண்டதாகவும் மும்பை போலீசாரிடம் ராக்கி சாவந்த் புகாரளிக்க கணவர் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து மைசூர் சிறையில் அடைக்கப்பட்ட அவர் சில நாட்களுக்கு முன்பு ஜாமினில் வெளியே வந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அடில் கான், ராக்கி சாவந்த் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
அதன்படி, ராக்கி என்னிடம் முதல் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று விட்டதாக சொன்னார். ஆனால் இருவரும் தொடர்ந்து தொடர்பில் இருந்தார்கள். ராக்கி சாவந்தை நான் தாக்கியதாக சொன்னார். உண்மையில் அவர் தான் என்னை பலமுறை தாக்கியுள்ளார். எனக்கு போதை மருந்து கொடுத்து நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து மிரட்டுகிறார். என்னுடைய பெயரை கெடுத்து, தன் பாலின ஈர்ப்பாளர் என முத்திரைக் கொடுக்க முயற்சி செய்கிறார் என தெரிவிக்க ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதற்கு பதிலடியாக பேட்டியளித்துள்ள ராக்கி சாவந்த், அடில் கான் எனது நிர்வாண வீடியோக்களை ரூ.47 லட்சத்திற்கு துபாயில் விற்பனை செய்து உள்ளார். மேலும் நான் குளியலறையில் இருந்தபோது அதனை வீடியோ எடுத்துள்ளார். நான் அமைதியாக இருந்தேன். அவர் என்னை வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்தார். என் நிர்வாணத்தை உலகமே பார்த்தால் என்ன செய்வது, விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள வேண்டுமா? என கேட்டார்.
இந்நிலையில் ராக்கி சாவந்த் மீது அவரின் நெருங்கிய தோழியான ராஜ்ஸ்ரீ தன்னை மிரட்டுவதாக போலீசில் புகார் அளித்துள்ளார். இதற்கு கருத்து தெரிவித்துள்ள ராக்கி, ‘இந்தச் செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன். எனது மோசமான காலங்களில் நீ எப்போதும் என்னுடன் நின்றிருக்கிறாய். அவளுடைய மோசமான காலங்களில் நான் நின்றேன். அவள் எப்போதும் என் தோழியாகவே இருப்பாள். நான் அதிர்ச்சியடைந்தேன் என் வாழ்க்கையில் என்ன தவறு நடக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை” என தெரிவித்துள்ளார்.