மேலும் அறிய

Rajini Kamal Reunion: இணையும் கமல்-ரஜினி; ரெட் ஜெயண்ட் வெளியிட்ட வெயிட்டான அப்டேட்; 45 ஆண்டுகளுக்குப் பின் சம்பவம்

Rajinikanth Kamal Haasan Reunion: தமிழ் திரையுலகில் 45 ஆண்டுகளுக்குப் பின் ஒரு மிகப்பெரிய சம்பவம் அரங்கேற இருக்கிறது. ஆம், அதற்கான ஒரு அறிவிப்பை ரெட் ஜெயண்ட் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அது என்ன தெரியுமா.?

தமிழ் திரையுலகின் அசைக்க முடியாத இரு துருவங்களாக இருப்பவர்கள், கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த். ஒருவர் நடிப்பு அரக்கன். ஒருவர் ஸ்டைல் அரக்கன். இவர்கள் இணையும் படம் குறித்துதான் தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரிக்கும் அந்த படத்தை நெல்சன் இயக்குகிறார். ரெட் ஜெயண்ட்டின் அறிவிப்பு குறித்து இப்போது பார்க்கலாம்.

ரெட் ஜெயண்ட் வெளியிட்ட அசத்தலான அறிவிப்பு

தமிழ் திரையுலகில், நீண்ட காலமாகவே ரஜினிகாந்த்தும் கமல்ஹாசனும் இணைந்து நடிப்பது பற்றி பேச்சுக்கள் இருந்துகொண்டே தான் இருக்கிறது. சரியான கதை கிடைத்தால் இருவரும் சேர்ந்து நடிப்பது குறித்து யோசிக்கலாம் என்று இருவருமே பல சந்தர்ப்பங்களில் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் தான், தற்போது ரெட் ஜெயண்ட் நிறுவனத்தில் அசத்தலான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இணைந்து நடிக்க உள்ளனர். இது குறித்த நிறுவனத்தின் அறிவிப்பில், இரு ஜாம்பவான்கள் ஒரு பிரேமில் என்று குறிப்பிட்டு, KHxRK என்று குறிப்பிட்டுள்ளனர். அது கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் என்பதுதான். இதன் மூலம், கமல் மற்றும் ரஜினி இணைவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் 17-வது படமாக தயாரிக்கப்படுகிறது.

45 ஆண்டுகளுக்குப் பின் இணையும் கமல்-ரஜினி

திரை உலகில் அசைக்க முடியாத இடத்தை பிடித்திருக்கும் உலக நாயகன் கமல்ஹாசனும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும், 1975-ம் ஆண்டு வெளியான அபூர்வ ராகங்கள் படத்தில் தான் முதன் முதலாக இணைந்து நடித்தனர். இணைந்து என்று சொல்வதைவிட, ரஜினிகாந்த்திற்கு அது தான் முதல் படம். இந்த படத்தில் கமல்ஹாசன் தான் ஹீரோ.

அதன்பின், அதற்கு அடுத்த வருடமே, அதாவது 1976-ம் ஆண்டு கே. பாலசந்தரின் இயக்கத்தில் வெளியான மூன்று முடிச்சு படத்தில் அவர்கள் இணைந்து நடித்திருந்தனர். இதில் ரஜினிகாந்த் நெகட்டீவ் ஷேடில் நடித்திருப்பார். அதன்பின், 1977-ம் ஆண்டு இருவரும் இரண்டு படங்களில் சேர்ந்து நடித்தனர்.

அந்த படங்கள் ‘அவர்கள்‘ மற்றும் ‘16 வயதினிலே‘. இந்த படங்கள் மிகவும் பேசப்பட்ட படங்களாக அமைந்தன. தொடர்ந்து, 1978-ம் ஆண்டு, இளமை ஊஞ்சலாடுகிறது திரைப்படத்தில் அவர்கள் மீண்டும் இணைந்து நடித்தனர். அதைத் தொடர்ந்து, 1979-ம் ஆண்டு, சூப்பர் டூப்பர் ஹிட் படமான ‘நினைத்தாலே இனிக்கும்‘ படத்தல் இணைந்து நடித்திருந்தனர்.

அதன் பிறகு, 1981-ம் ஆண்டு வெளியான தில்லு முல்லு திரைப்படத்தில் ரஜினிகாந்த் லீட் ரோலில் நடித்திருந்தார். படத்தின் இறுதியில் முக்கியமான கெஸ்ட் ரோலில் கமல்ஹாசன் நடித்திருந்தார். இந்த திரைப்படம் தான் தமிழில் அவர்கள் இணைந்து நடித்த கடைசி படம். அதன் பிறகு, இருவரும் தனித்தனி ஹீரோக்களாக கோலோச்சத் தொடங்கி, இன்று அசைக்க முடியாத இடத்தை பிடித்துள்ளனர்.

தமிழ் மொழியில் 7 படங்களில் மட்டுமே அவர்கள் இணைந்து நடித்திருந்தாலும், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மொழிகளில் சேர்த்து மொத்தம் 21 படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.

அவர்கள் மீண்டும் இணைய வேண்டும் என்று ரசிகர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த நிலையில், தற்போது ரெட் ஜெயண்ட் நிறுவனம் அந்த ஆசையை நிறைவேற்றுகிறது.

 

 

தலைப்பு செய்திகள்

Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
Gold and silver rate today : சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
TN Govt Debt: தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
Ration Card : ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
TN Weather News: 12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
Sheikh Hasina: இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
Ather Konarc Electric Scooter: 120KM ரேஞ்ச்..! குடும்பங்களுக்கான ஏதரின் புதிய மின்சார ஸ்கூட்டர் - பட்ஜெட், அம்சங்கள், வசதிகள் எப்படி?
120KM ரேஞ்ச்..! குடும்பங்களுக்கான ஏதரின் புதிய மின்சார ஸ்கூட்டர் - பட்ஜெட், அம்சங்கள், வசதிகள் எப்படி?
Embed widget