மேலும் அறிய

Jailer 2: 8 CM பாத்தாச்சு.. ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் தான்.. ரஜினி ரசிகர்களின் போஸ்டர் அலப்பறைகள்!

ஜெயிலர் 2 படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர். டிக்கெட் விற்பனையும் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கும் நிலையில் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை வருவதால் வசூலை அள்ள படக்குழு திட்டமிட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் நடித்து ஜெயிலர் 2 படம் நாளை வெளியாகவுள்ள நிலையில் ஊரெங்கும் ரஜினி அரசிகர்களின் போஸ்டர் அலப்பறைகள் பலரையும் கவர்ந்துள்ளது. 

ஜெயிலர் 2 படம்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “ஜெயிலர் 2”. இப்படம் கடந்த 2023ம் ஆண்டு வெளியான ஜெயிலர் படத்தின் தொடர்ச்சியாகும். முதல் பாகத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்,  ரம்யா கிருஷ்ணன், தமன்னா, சுனில் குமார், விநாயகன், மிர்னா மேனன், வசந்த் ரவி, விடிவி கணேஷ், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அதேசமயம் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப் ஆகியோர் கேமியோ ரோல்களில் அசத்தியிருந்தனர். இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் ரூ.600 கோடி வரை வசூலித்து சாதனைப் படைத்தது. 

தற்போது இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. ஜெயிலர் முதல் பாகத்தில் பல இடங்களில் இரண்டாம் பாகம் எடுப்பதற்கான லீடை நெல்சன் வைத்திருந்ததால் இப்படம் உருவாகியுள்ளதாக ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இந்த ஜெயிலர் 2 படத்தில் எஸ்.ஜே.சூர்யா, மிதுன் சக்ரபோர்த்தி, சுராஜ் வெஞ்சரமூடு, வித்யா பாலன், பகவதி பெருமாள், சுஜித் ஷங்கர், கோட்டயம் நசீர், ஜடின் சர்னா, நமோ நாராயணா, அன்னா ராஜன் என மேலும் பல நட்சத்திரங்களோடு நெல்சன் களமிறங்கியிருக்கிறார். நடிகை ஷாம்னா காசிம் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். இந்த இரண்டு பாகங்களுக்கும் அனிருத் தான் இசையமைத்திருக்கிறார். 

ஆவலோடு காத்திருக்கும் ரசிகர்கள்

கடந்த ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியான கூலி படம் வசூலைப் பெற்றாலும் ரசிகர்களை கவரவில்லை. அதனால் ஜெயிலர் 2 படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர். டிக்கெட் விற்பனையும் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கும் நிலையில் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை வருவதால் வசூலை அள்ள படக்குழு திட்டமிட்டுள்ளது. கடந்த அக்டோபர் 5ம் தேதி படத்தின் ட்ரெய்லர் வெளியான நிலையில் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. 5 மொழிகளில் வெளியாகும் ஜெயிலர் படத்தை தியேட்டரில் சிறப்பாக கொண்டாட ரஜினி ரசிகர்கள் முடிவு செய்துள்ளனர். 

போஸ்டரில் காட்டப்பட்ட அலப்பறைகள்

அந்த வகையில் போஸ்டர், பேனர்கள், கட் அவுட்கள் என தியேட்டர்கள் திருவிழாக்கோலம் பூண்டுள்ளது. இந்த நிலையில் சென்னை மட்டுமல்லாது தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில், ‘எந்த எமனா இருந்தாலும் எங்க சிவனை தொட முடியாது’, ‘என் இதயத்தில் வாழும் ஈசனே’, ’12 PM..8 CM பார்த்தாச்சு.. என்றும் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார்.. அதனால் தான் அகிலமே சொல்லுது தலைவர் நிந்தரம்’, ’பழைய சாதனைகளை உடைக்க..புதிய சாதனைகளைப் படைக்க’, ’பல அரசாங்கத்தை பார்த்த ஆளுடா! தலைவர் வரலாறு எடுத்து பாருடா’  ஆகிய வாசகங்களோடு கூடிய போஸ்டர்கள் ஒட்டி அலப்பறை செய்துள்ளனர். 

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

விஜய் தேவரகொண்டா vs ரிஷிகாந்த்.. பெண்கள் பார்வையில் யார் Green Flag?
விஜய் தேவரகொண்டா vs ரிஷிகாந்த்.. பெண்கள் பார்வையில் யார் Green Flag?
தனுஷ் படத்தில் போலீஸ் வேடத்தில் சாய் பல்லவி..ஓம் பட க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியானது
தனுஷ் படத்தில் போலீஸ் வேடத்தில் சாய் பல்லவி..ஓம் பட க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியானது
ஆபாச வார்த்தையில் திட்டிய விஜய் தேவரகொண்டா...இவருக்கு வாய்ல தான் சனி
ஆபாச வார்த்தையில் திட்டிய விஜய் தேவரகொண்டா...இவருக்கு வாய்ல தான் சனி
" இதில் என்ன தவறு இருக்கிறது ?"கணவர் விஜய் தேவரகொண்டா குறித்த சர்ச்சைக்கு ராஷ்மிகா மந்தனா விளக்கம்!
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Aavin Price: பொதுமக்கள் ஷாக்..! ஆவின் பொருட்களின் விலை உயர்வு - நெய், இனிப்பு - எதற்கு எவ்வளவு தெரியுமா?
பொதுமக்கள் ஷாக்..! ஆவின் பொருட்களின் விலை உயர்வு - நெய், இனிப்பு - எதற்கு எவ்வளவு தெரியுமா?
Anbil Mahesh: அன்பில் மகேஷை விடுவிக்க போராடிய திமுக..! நவ.6 வரை சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவு - காரணம்?
அன்பில் மகேஷை விடுவிக்க போராடிய திமுக..! நவ.6 வரை சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவு - காரணம்?
வலிப்பு வந்தது போல் நடிப்பு.. சிதறி கிடந்த ரத்தம்.. சிறையில் இருந்து கைதிகள் தப்பியது எப்படி? பரபரப்பு தகவல்
வலிப்பு வந்தது போல் நடிப்பு.. சிதறி கிடந்த ரத்தம்.. சிறையில் இருந்து கைதிகள் தப்பியது எப்படி? பரபரப்பு தகவல்
E100 Ethanol: இனி பெட்ரோலே வேண்டாம்..! 100% எத்தனாலில் ஓடும் வாகனங்களுக்கு மத்திய அரசு அனுமதி - புதிய மாற்றம்
இனி பெட்ரோலே வேண்டாம்..! 100% எத்தனாலில் ஓடும் வாகனங்களுக்கு மத்திய அரசு அனுமதி - புதிய மாற்றம்
“யாருக்கு உறுத்தியது எனத் தெரியவில்லை” - லஞ்சப் புகாரில் கைதான அன்பில் மகேஸ் பரபரப்பு பேட்டி
“யாருக்கு உறுத்தியது எனத் தெரியவில்லை” - லஞ்சப் புகாரில் கைதான அன்பில் மகேஸ் பரபரப்பு பேட்டி
செம்பரம்பாக்கம் ஏரி பாதுகாப்பு: நீர் திறக்கும் முன் மக்களுக்கு எச்சரிக்கை - முதலமைச்சர் விஜய் உத்தரவு
செம்பரம்பாக்கம் ஏரி பாதுகாப்பு: நீர் திறக்கும் முன் மக்களுக்கு எச்சரிக்கை - முதலமைச்சர் விஜய் உத்தரவு
கியூபாவை கைப்பற்றப்போவதாக ட்ரம்ப் மிரட்டல் - 67 ஆண்டுகளாக நிறைவேறாத அமெரிக்காவின் ஆசை!
கியூபாவை கைப்பற்றப்போவதாக ட்ரம்ப் மிரட்டல் - 67 ஆண்டுகளாக நிறைவேறாத அமெரிக்காவின் ஆசை!
Anbil Mahesh Arrest: அன்பில் மகேஸ் கைது ஏன்? பின்னணியில் நடந்தது என்ன? பரபரப்பு வீடியோ
அன்பில் மகேஸ் கைது ஏன்? பின்னணியில் நடந்தது என்ன? பரபரப்பு வீடியோ
Embed widget