Jailer 2 : 15 லட்சம் டிக்கெட்கள் விற்பனை...ரிலீஸ் முன்பே 100 கோடி வசூலை நெருங்கும் ஜெயிலர் 2
Jailer 2 : ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் 2 திரைப்படத்திற்கு உலகம் முழுவதும் இதுவரை 15 லட்சம் டிக்கெட்கள் விற்பனை ஆகியுள்ளது

நெல்சன் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் 2 திரைப்படம் நாளை அக்டோபர் 15 வெளியாக இருக்கிறது. ரிலிஸூக்கு முன்பே படத்திற்கு 15 லட்சம் டிக்கெட்கள் விற்பனையாகியுள்ள நிலையில் படம் இந்தியாவில் ரூ57 கோடியும் வெளிநாடுகளில் 25 கோடியும் வசூல் செய்துள்ளது.
ஜெயிலர் 2 முன்பதிவு வசூல்
ஜெயிலர் 2 திரைப்படத்தின் முதல் நாள் காட்சிகளுக்காக 14.47 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டு, ரூ.30.90 கோடி வசூலாகியுள்ளது.
அக்டோபர் 16ஆம் தேதி இரண்டாம் நாள் காட்சிகளுக்கு 4.49 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகி ரூ.7.88 கோடியும், அக்டோபர் 17ஆம் தேதி மூன்றாம் நாள் காட்சிகளுக்கு 4.34 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகி ரூ.7.59 கோடியும் வசூலாகியுள்ளது.
அக்டோபர் 18ஆம் தேதி நான்காம் நாள் காட்சிகளுக்கு 4.06 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகி ரூ.7.08 கோடியும், அக்டோபர் 19ஆம் தேதி ஐந்தாம் நாள் காட்சிகளுக்கு 1.71 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகி ரூ.2.88 கோடியும் வசூலாகியுள்ளது.
வெளியீட்டுக்கு முந்தைய நாள் காலை நிலவரப்படி, இந்தியா முழுவதும் 31,812 திரைகளில் 29.69 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டு, மொத்தம் ரூ.57.30 கோடி வசூலாகியுள்ளது.
தமிழ்நாடு வசூல்
தமிழ்நாட்டில் முதல் நாள் முன்பதிவு மூலம் ரூ.10 கோடி வசூலாகியுள்ளது. மாநிலம் முழுவதும் 3,300-க்கும் மேற்பட்ட காட்சிகள் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், 500-க்கும் மேற்பட்ட காட்சிகள் முழுமையாக முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் 1,000-க்கும் மேற்பட்ட காட்சிகள் மூலம் ரூ.4.80 கோடி வசூலாகியுள்ளது.
முதலிடத்தில் கூலி
முதல் நாள் முன்பதிவில் ரூ.30.90 கோடி வசூலித்துள்ள ஜெயிலர் 2, ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படத்தின் முதல் நாள் முன்பதிவு வசூலான ரூ.23.25 கோடியைத் தாண்டியுள்ளது. ரஜினிகாந்த் படங்களில் கூலி திரைப்படம் ரூ.46.36 கோடி வசூலுடன் முதலிடத்தில் உள்ளது. ஜெயிலர் 2 இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
100 கோடி வசூல்
ஜெயிலர் முதல் பாகம் உலகளவில் ரூ650 கோடி வசூல் செய்தது. ஜெயிலர் 2 திரைப்படம் முதல் நாளில் ரூ100 கோடி வசூலை கடக்கும் என உறுதியாக நம்பப்படுகிறது. படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைக்கும் பட்சத்தில் உலகளவில் ஜெயிலர் 2 திரைப்படம் 1000 கோடி வசூலை எட்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள்
Veramaari entertainment from tomorrow in theatres near you! 💥🤩 @rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial @vidya_balan @iam_SJSuryah #MithunChakraborty #SurajVenjaramoodu @meramyakrishnan @iYogiBabu @mirnaaofficial @vijaykartikdop @Nirmalcuts @ChethanDsouza @AlwaysJani @KiranDrk @sunilreddy22 #PallaviSingh @valentino_suren @Alagiakoothan #SantoshRaju @kabilanchelliah @kuchirayar73 @RIAZtheboss #Jailer2FromOct15
— Sun Pictures (@sunpictures) October 14, 2026
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















