மேலும் அறிய

Rajinikanth: சங்கி கெட்ட வார்த்தைன்னு என் மகள் சொல்லல.. ஐஸ்வர்யாவுக்கு ஆதரவாக ரஜினி!

சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது லால் சலாம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் சங்கி என என் அப்பாவை சொல்லாதீர்கள் என மகள் ஐஸ்வர்யா சொன்னது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.

சங்கி என்பது கெட்ட வார்த்தை என ஐஸ்வர்யா பேசவில்லை என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 

சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது லால் சலாம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் சங்கி என என் அப்பாவை சொல்லாதீர்கள் என மகள் ஐஸ்வர்யா சொன்னது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ‘சங்கி என்பது கெட்டவார்த்தை என ஐஸ்வர்யா எங்கேயும் சொல்லவில்லை. அப்பா ஆன்மீகவாதி, எல்லா மதங்களையும் விரும்புகிறவர். அவரை ஏன் எப்படி சொல்றாங்கன்னு நினைக்கிறது அவருடைய பார்வை. இது லால் சலாம் படத்தின் ப்ரோமோஷனுக்காக பேசப்பட்டது இல்லை’ என ரஜினி தெரிவித்தார்.

நடந்தது என்ன? 

லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “லால் சலாம்”. இதில் விக்ராந்த், விஷ்ணு விஷால், நிரோஷா, ஜீவிதா, செந்தில், கே.எஸ்.ரவிகுமார், தம்பி ராமையா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.  கிரிக்கெட் விளையாட்டின் மத அரசியலை  மையப்படுத்திய இந்த படத்தில் ”மொய்தீன் பாய்” என்ற கேரக்டரில் சிறப்பு தோற்றத்தில்  ரஜினிகாந்த் நடித்துள்ளார். இதேபோல் முன்னாள் இந்திய அணியின் கேப்டன் கபில்தேவ் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள லால் சலாம் படம் பிப்ரவரி 9 ஆம் தேதி திரைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி 26 ஆம் தேதி லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் பேசிய ஐஸ்வர்யா, என்னோட அப்பா ரஜினிகாந்தை சங்கி என விமர்சிக்கிறார்கள். எனக்கு அதைக் கேட்டதும் ரொம்ப வருத்தமாக உள்ளது. ரஜினி ஒரு சங்கியாக இருந்திருந்தால் லால் சலாம் படத்தில் நடித்திருக்கவே மாட்டார். ஒரு சங்கியால் இந்த படம் பண்ண முடியாது. லால் சலாம் படத்தில் எங்க அப்பாவை தவிர யாரும் தைரியமாக நடித்திருக்க மாட்டார்கள். நீங்கள் எந்த மதமாக இருந்தாலும் சரி லால் சலாம் படம் நிச்சயம் உங்களை பெருமைப்படுத்தும். ரஜினிகாந்த நிச்சயமாக சங்கி இல்லை. இந்த படம் பார்த்தா உங்களுக்கே புரியும்” என தெரிவித்தார். மகளின் பேச்சை கேட்டு நடிகர் ரஜினிகாந்த் கண்கலங்கினார். 

ஐஸ்வர்யா பேசிய இந்த வீடியோ இணையத்தில் மிகப்பெரிய அளவில் பேசுபொருளாக மாறியது. இதனைத் தொடர்ந்து பேசிய ரஜினிகாந்த், நடிகர் விஜய்யை விமர்சித்து பேசியதாக கூறப்பட்ட காக்கா - கழுகு கதை குறித்து விளக்கமளித்து சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: மாட்டிக்கொண்ட மாயா, மகேஷ்.. உஷாரான கார்த்திக்! அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: மாட்டிக்கொண்ட மாயா, மகேஷ்.. உஷாரான கார்த்திக்! அடுத்து நடக்கப்போவது என்ன?
Actress Kasthuri: சகோதரரிடம் பேசுவதை கூட வக்கிரமாகச் சித்தரிப்பதா? - நெட்டிசன்களுக்கு கஸ்தூரி கடும் கண்டனம்!
Actress Kasthuri: சகோதரரிடம் பேசுவதை கூட வக்கிரமாகச் சித்தரிப்பதா? - நெட்டிசன்களுக்கு கஸ்தூரி கடும் கண்டனம்!
காவல் அதிகாரிகளுடன் தள்ளுமுள்ளு...காயங்களை காட்டி ஆமிர் கான் உறவினர் வெளியிட்ட வீடியோ வைரல்
காவல் அதிகாரிகளுடன் தள்ளுமுள்ளு...காயங்களை காட்டி ஆமிர் கான் உறவினர் வெளியிட்ட வீடியோ வைரல்
கற்பனை, ஹாரர், நகைச்சுவை கலந்த ‘டிரோன்ஸ்’ – அக்டோபர் 16-ம் தேதி வெளியீடு!
கற்பனை, ஹாரர், நகைச்சுவை கலந்த ‘டிரோன்ஸ்’ – அக்டோபர் 16-ம் தேதி வெளியீடு!

வீடியோ

Abhijeet Dipke : ”பாட்டி இறந்ததை சொல்லலயா?”பொய் சொன்னாரா அபிஜீத் திப்கேவீடியோ ஆதாரத்துடன் வந்த போலீஸ்
Car bike accident : மொத்தமாக பறந்த பைக்! நூலிழையில் தப்பிய இளைஞர்! பகீர் சிசிடிவி காட்சி
Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
’சத்துணவிற்கான கொண்டக்கடலை, பச்சை பயிறு கொள்முதலில் சுணக்கம்’ கேக் வாங்க டெண்டர் விட்ட தவெக அரசு..!
’சத்துணவிற்கான கொண்டக்கடலை கொள்முதலில் சுணக்கம்’ கேக் டெண்டருக்கு துரிதம்..!
திமுக தோத்ததுக்கு SIR காரணமில்ல.. ஸ்டாலினே சொல்லிட்டாரு.. வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
திமுக தோத்ததுக்கு SIR காரணமில்ல.. ஸ்டாலினே சொல்லிட்டாரு.. வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
13 வருடங்களில் ஒருமுறை கூட இதை செய்யாத பிரதமர் மோடி: பீட்டர் அல்போன்ஸ் சரமாரி தாக்குதல்!
13 வருடங்களில் ஒருமுறை கூட இதை செய்யாத பிரதமர் மோடி: பீட்டர் அல்போன்ஸ் சரமாரி தாக்குதல்!
Kerala Accident: 3 பேரை காரில் இடித்துக் கொன்ற இளைஞன்..! “இந்த விஷயத்தை அப்பா பார்த்துக்கொள்வார்” என பஞ்ச்
3 பேரை காரில் இடித்துக் கொன்ற இளைஞன்..! “இந்த விஷயத்தை அப்பா பார்த்துக்கொள்வார்” என பஞ்ச்
CNG Vehicles: சென்னையில் கிடுகிடுவென உயரும் சிஎன்ஜி வாகனங்கள்..! REFILL நிலையங்கள் பற்றாக்குறை - தீர்வு?
சென்னையில் கிடுகிடுவென உயரும் சிஎன்ஜி வாகனங்கள்..! REFILL நிலையங்கள் பற்றாக்குறை - தீர்வு?
TVK Vs EPS: ”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
Chennai Airport: 20 வருடங்களுக்கு தாங்கும்..! விமான நிலைய அப்க்ரேடிற்கு பக்கா ப்ளான் - ட்ராஃபிக்கை குறைக்க கூடுதல் வசதி
20 வருடங்களுக்கு தாங்கும்..! விமான நிலைய அப்க்ரேடிற்கு பக்கா ப்ளான் - ட்ராஃபிக்கை குறைக்க கூடுதல் வசதி
Embed widget