மேலும் அறிய

Rajinikanth Admitted In Kauvery Hospital | "அவருடன் நானும் இருக்கிறேன் ; வழக்கமான CheckUpதான்" - ABP நாடு செய்தி நிறுவனத்திற்கு லதா ரஜினிகாந்த் தகவல் 

முழு உடல் பரிசோதனை நடைபெற்று வருவதாகவும் அவர் நலமுடன் இருக்கிறார் என லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 

வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக நடிகர் ரஜினிகாந்த் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது மனைவி லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 

சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் நடிகர் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து  லதா ரஜினிகாந்த்திடம் இது தொடர்பாக கேட்டபோது ரெகுலர் மாஸ்டர் செக்கப்பிற்காகவே காவிரி மருத்துவமனைக்கு ரஜினி வந்திருக்கிறார் என ABP நாடு செய்தி நிறுவனத்திற்கு லதா ரஜினிகாந்த் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.  ரஜினிகாந்த்  நலமாக இருக்கிறார்  என்றும் லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். மேலும் ரஜினிக்கு ஒவ்வொரு ஆண்டும் முழு உடல் மருத்துவ பரிசோதனை செய்வது வழக்கம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தாதா சாகேப் பால்கே விருது பெற்றநிலையில் டெல்லியிலிருந்து தமிழகம் திரும்பினர் நடிகர் ரஜினிகாந்த். இந்நிலையில் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். 

முன்னதாக இன்று காலை குடும்பத்துடன் அண்ணாத்த படத்தை பார்த்ததாக தெரிவித்திருந்தார். தீபாவளி வெளியீடாக திரைக்கு வரவிருக்கும் அண்ணாத்த திரைப்படத்தின் விளம்பரப் பணிகள் நடந்து வருகிறது. பர்ஸ்ட் சிங்கிளில் தொடங்கி நேற்று வெளியான ட்ரெய்லர் வரை படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. இந்நிலையில் படத்தை தனது குடும்பத்துடன் பார்த்துள்ளார் ரஜினிகாந்த் . இது குறித்து ஹூட் செயலியில் பகிந்துள்ள ரஜினிகாந்த் “ நான் என் மகள்கள் , மருமகன் விஷால் , மனைவி, சம்பந்தி மற்றும் பேரன்களுடன்  அண்ணாத்த படத்தை பார்த்தோம். குறிப்பாக என் பக்கத்தில் உட்காந்து என பேரன் முதன் முறையாக படம் பார்த்தான். படம் பார்த்து முடித்தவுடன் எனது பேரன் என்னை விடவே இல்லை. கட்டிப்பிடித்து தாத்து தாத்து படம் வெரி நைஸ் என்றான்.அவன் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தால் என்னை தாத்து என அழைப்பது வழக்கம். படம் முடித்து வெளியே வந்த பிறகு கலாநிதி மாறன் திரையரங்கிற்கு வெளியே காத்திருந்தார்.  அதிர்ச்சியாக இருந்தது.. மணி 10க்கு மேல் இருக்கும்..அப்போது என்ன சார் இங்க என கேட்டேன்...இல்லை உங்களை பார்க்கணும் என்றார்.. பிஸியான ஆளாக இருப்பவர் , என்னை சந்திக்கனும் என்றார். எப்போதும் மேன் மக்கள் மேன் மக்களே!” என குறிப்பிட்டார். 


முழு உடல் பரிசோதனை நடைபெற்று வருவதாகவும் அவர் நலமுடன் இருக்கிறார் என லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ள காவேரி மருத்துவமனைக்கு அவரது மைத்துனர் ரவிச்சந்திரன் வருகை தந்துள்ளார். முழு உடல் பரிசோதனை முடித்த பிறகு இன்று இரவோ அல்லது நாளை காலையோ ரஜினிகாந்த் வீட்டிற்கு திரும்பச் செல்வார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

தலைப்பு செய்திகள்

ராம் சரணுக்கு கோவையில் நடந்த அறுவை சிகிச்சை... கங்கா மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன்?
ராம் சரணுக்கு கோவையில் நடந்த அறுவை சிகிச்சை... கங்கா மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன்?
"யூடியூப்பில் இருந்து இயக்குநராக வருவது எளிதல்ல"... பாரி இளவழகனை பாராட்டிய பரிதாபங்கள் கோபி!
"இந்தப் படத்தில் இருந்து விலகுங்கள்" என்ற ஆலோசனை... அதை மீறி வெற்றி கண்ட 'அன்பே டயானா'!
Dhanush : இதக்கூடவா காப்பி அடிப்பீங்க..மகனை வைத்து தனுஷ் சொன்ன குட்டி கதை இங்கிருந்து சுட்டதா!
Dhanush : இதக்கூடவா காப்பி அடிப்பீங்க..மகனை வைத்து தனுஷ் சொன்ன குட்டி கதை இங்கிருந்து சுட்டதா!

வீடியோ

இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE
கரூர் கூட்ட நெரிசல் அரசுப் பணி கொடுத்த விஜய்..ரத்து செய்த மதுரை நீதிமன்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
EPS Condemn Central Minister: மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
TVK - Congress Alliance : ‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
TamilNadu Power Shutdown: தமிழகத்தில் நாளை(29-07-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
TamilNadu Power Shutdown: தமிழகத்தில் நாளை(29-07-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
Skoda Slavia Facelift: ஹூண்டாய் வெர்னா, ஹோண்டா சிட்டிக்கு செக்.! ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்டை இறக்கும் ஸ்கோடா; விலை, அம்சங்கள் என்ன.?
ஹூண்டாய் வெர்னா, ஹோண்டா சிட்டிக்கு செக்.! ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்டை இறக்கும் ஸ்கோடா; விலை, அம்சங்கள் என்ன.?
Tata Mini Sierra: ‘குட்டித் தம்பி‘யை களமிறக்கும் டாடா.! க்யூட்டாக வரப்போகும் மினி சியரா.? போட்டிக்கு ரெடியான மஹிந்திரா
‘குட்டித் தம்பி‘யை களமிறக்கும் டாடா.! க்யூட்டாக வரப்போகும் மினி சியரா.? போட்டிக்கு ரெடியான மஹிந்திரா
Avore EX Electric Bike: ஒரே சார்ஜில் 260 கிமீ ரேஞ்ச்; ஓலா, ரிவோல்ட்-க்கு ரிவிட்.! Avore EX EV பைக் அறிமுகம்; விலை இவ்ளோ தானா.?
ஒரே சார்ஜில் 260 கிமீ ரேஞ்ச்; ஓலா, ரிவோல்ட்-க்கு ரிவிட்.! Avore EX EV பைக் அறிமுகம்; விலை இவ்ளோ தானா.?
Embed widget