ரஜினி முதல் ஹாரிசன் ஃபோர்டு வரை...வயசானாலும் ஸ்டைல் மாறாத நடிகர்கள்
75 வயதிலும் ஜெயிலர் 2 மூலம் வசூல் சாதனை படைத்த ரஜினிகாந்த் முதல் டாம் குரூஸ், அர்னால்ட் வரை வயதான காலத்திலும் ஆக்ஷன் படங்களில் ரசிகர்களைக் கவரும் நட்சத்திரங்கள்.

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர் 2’ திரைப்படம் நான்கு நாட்களில் உலகளவில் ரூ.424.25 கோடி வசூலித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 75 வயதைக் கடந்த நிலையிலும் ரஜினிகாந்த் படத்திற்குக் கிடைத்துள்ள ரசிகர்களின் வரவேற்பும், உலகளாவிய வசூலும் பல மூத்த ஹாலிவுட் நடிகர்களோடு ஒப்பிடத் தகுதியானது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர் 2’ அக்டோபர் 15ஆம் தேதி வெளியானது. வெளியான நான்கு நாட்களில் இப்படம் உலகளவில் ரூ.424 கோடியைக் கடந்துள்ளது. இதில் இந்தியாவில் ரூ.234.25 கோடி வசூலும், வெளிநாடுகளில் ரூ.190 கோடி வசூலும் அடங்கும்.
தனது 75 வயதிலும் ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்று தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக திகழ்ந்து வருகிறார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். இந்திய சினிமாவின் வரலாற்றில் இந்த வயதில் இவ்வளவு பெரிய ரசிகர் பலத்தையும் வசூல் செல்வாக்கையும் பெற்றிருந்த வேறு நடிகர் இல்லை என்று தாராளமாக சொல்லலாம். ரஜினியின் சாதனையை ஹாலிவுட்டின் பல மூத்த நட்சத்திரங்களோடு ஒப்பிட்டலாம்.
டாம் குரூஸ் முதல் சில்வெஸ்டர் ஸ்டாலோன் வரை
ஹாலிவுட்டைப் பொறுத்தவரை, வயதான காலத்திலும் ஆக்ஷன் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற நடிகர்கள் பலர் உள்ளனர். அவர்களில் டாம் குரூஸ் முக்கியமானவர். தனது 60 வயதைக் கடந்த பிறகும் அவர் ‘மிஷன்: இம்பாசிபிள்’ திரைப்படத் தொடரில் தொடர்ந்து நடித்து வருகிறார். ஆபத்தான சண்டைக் காட்சிகளிலும் சாகசங்களிலும் அவரே ஈடுபடுவது அவரது ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்றுள்ளது.

அதேபோல், ஹாரிசன் ஃபோர்டு தனது 80 வயதைக் கடந்த பின்னரும் ‘இண்டியானா ஜோன்ஸ்’ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 2023ஆம் ஆண்டு வெளியான ‘இண்டியானா ஜோன்ஸ் அண்ட் த டயல் ஆஃப் டெஸ்டினி’ திரைப்படத்தில் அவர் மீண்டும் அந்தக் கதாபாத்திரத்தில் தோன்றினார்.

ஹாலிவுட்டின் மற்றொரு முக்கிய ஆக்ஷன் நட்சத்திரமான அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர், 2003ஆம் ஆண்டு வெளியான ‘டெர்மினேட்டர் 3: ரைஸ் ஆஃப் தி மெஷின்ஸ்’ திரைப்படத்தில் நடித்தபோது அவருக்கு 57 வயது.

இதேபோல், சில்வெஸ்டர் ஸ்டாலோன் 2008ஆம் ஆண்டு வெளியான ‘ராம்போ 4’ திரைப்படத்தில் நடித்தபோது அவருக்கு 62 வயது. ராம்போ கதாபாத்திரத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பை மையமாகக் கொண்டு வெளியான இப்படம், அவரது ஆக்ஷன் ஹீரோ அடையாளத்தைத் தொடர்ந்து நிலைநிறுத்தியது.
ஜெயிலர்
ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ள இப்படத்தில் ரஜினிகாந்துடன் ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சிவராஜ்குமார், யோகி பாபு, எஸ்.ஜே. சூர்யா, வித்யா பாலன், மிதுன் சக்ரவர்த்தி, ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















