மேலும் அறிய

Kanchana 4: மீண்டும் காஞ்சனாவை கையில் எடுத்த ராகவா லாரன்ஸ்.. 4 ஆம் பாகம் ஷூட்டிங் எப்போ தெரியுமா?

காஞ்சனா 4 படம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ராகவா லாரன்ஸ் தயாரித்து இயக்கும் இப்படத்தின் ஷூட்டிங் செப்டம்பரில் தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்கி, நடிக்கவுள்ள “காஞ்சனா 4” படத்தின் ஷூட்டிங் செப்டம்பரில் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளார். 

அமர்க்களம் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ராகவா லாரன்ஸ். பல படங்களில் பாடல்களில் பின்னணியில் ஆடும் டான்ஸராக சினிமா பயணத்தை தொடங்கிய அவர் நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர், நடன இயக்குநர் என பன்முகம் கொண்டவராக வலம் வருகிறார்.2004 ஆம் ஆண்டு தெலுங்கில் நாகார்ஜூன் நடிப்பில் வெளியான மாஸ் படம் இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து ஸ்டைல் படத்தை இயக்கிய அவர், 2007 ஆம் ஆண்டு முனி என்ற பேய் படத்தை இயக்கினார். இப்படம் மிகப்பெரிய அளவில் ராகவா லாரன்ஸூக்கு திருப்புமுனையை கொடுத்தது. 

காஞ்சனா 

அந்த படத்தில் 2011 ஆம் ஆண்டு முனி படத்தின் 2ஆம் பாகத்தை “காஞ்சனா” என்ற பெயரில் எடுத்தார். இந்த படத்தில் கோவை சரளா, லட்சுமி ராய், தேவதர்ஷினி, ஸ்ரீமன் என பலரும் நடித்தனர். தமன் இசையமைத்த இந்த படத்தில் சரத்குமார் திருநங்கை வேடத்தில் நடித்து ஆச்சரியப்படுத்தினார். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றியைப் பெற்றது. 

காஞ்சனா 2

2015 ஆம் ஆண்டு காஞ்சனா படத்தின் 2ஆம் பாகம் வெளியானது. ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த இப்படத்தில் டாப்ஸி, நித்யா மேனன், கோவை சரளா, மயில் சாமி, ஸ்ரீமன், பூஜா ராமச்சந்திரன், ஜாங்கிரி மதுமிதா என பலரும் நடித்தனர். மாற்றுத்திறனாளியாக நித்யா மேனன் நடித்து பாராட்டைப் பெற்றார். இந்த படம் ஓரளவு வெற்றி பெற்ற நிலையில் வசூலை வாரி குவித்தது. 

காஞ்சனா 3

2019 ஆம் ஆண்டு காஞ்சனா 3 ஆம் பாகம் வெளியானது. இந்த படத்தில் ராகவா லாரன்ஸ், ஓவியா, வேதிகா, கோவை சரளா, தேவதர்ஷினி, சூரி, அனுபமா குமார் உள்ளிட்ட பலரும் நடித்தனர். இந்த படம் சுமாரான வெற்றியை பெற்ற நிலையில் வசூலை அள்ளியது. இதனைத் தொடர்ந்து காஞ்சனா படத்தின் முதல் பாகத்தை இந்தியில் அக்‌ஷய்குமாரை வைத்து லாரன்ஸ் இயக்கி வெற்றி கண்டார். அதேசமயம் ராகவா லாரன்ஸ் பல படங்களில் ஹீரோவாகவும் தன்னை நிலை நிறுத்தி வருகிறார். 

காஞ்சனா 4

இந்நிலையில் காஞ்சனா 4 படம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ராகவா லாரன்ஸ் தயாரித்து இயக்கும் இப்படத்தின் ஷூட்டிங் செப்டம்பரில் தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஹீரோயினாக மிருணாள் தாகூர் நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது. 

தலைப்பு செய்திகள்

கட்டாகுஸ்தி 2: வீட்டு வேலை செய்யும் கணவன் லூசரா? விஷ்ணு விஷால் அதிரடி!
கட்டாகுஸ்தி 2: வீட்டு வேலை செய்யும் கணவன் லூசரா? விஷ்ணு விஷால் அதிரடி!
புலி படத்தில் விஜய் நடித்ததற்கு இதுதான் காரணம்..நட்டி பகிர்ந்த தகவல்
புலி படத்தில் விஜய் நடித்ததற்கு இதுதான் காரணம்..நட்டி பகிர்ந்த தகவல்
ரெண்டே ரெண்டு பேருக்கு தான் போட்டியே..ஒரே நாளில் வெளியாகும் ஜனநாயகன் மற்றும் சிக்மா
ரெண்டே ரெண்டு பேருக்கு தான் போட்டியே..ஒரே நாளில் வெளியாகும் ஜனநாயகன் மற்றும் சிக்மா
நெகட்டிவ் விமர்சனங்களை பரப்பிவரும் விஜய் ரசிகர்கள்...டிக்கெட் புக்கிங்கில் மாஸ் காட்டும் கட்டா குஸ்தி 2
நெகட்டிவ் விமர்சனங்களை பரப்பிவரும் விஜய் ரசிகர்கள்...டிக்கெட் புக்கிங்கில் மாஸ் காட்டும் கட்டா குஸ்தி 2

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் கொடுத்த திடீர் எச்சரிக்கை!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!
PMK Arul: பாமக முன்னாள் MLA-வுக்கு தூது விட்ட தவெக.. விசுவாசத்தால் வாய்ப்பை மறுத்த அருள்!
PMK Arul: பாமக முன்னாள் MLA-வுக்கு தூது விட்ட தவெக.. விசுவாசத்தால் வாய்ப்பை மறுத்த அருள்!
​
​"நீயா, நானா?" மது வாங்குவதில் வந்த சண்டை.. நண்பனை சேற்றில் அமுக்கிக் கொன்ற வாலிபர்..!
திமுக - அதிமுக கூட்டணி பேச்சு உண்மை தான்.. EX MLA சத்யபாமா மீண்டும் குற்றச்சாட்டு.. நடந்தது என்ன?
திமுக - அதிமுக கூட்டணி பேச்சு உண்மை தான்.. EX MLA சத்யபாமா மீண்டும் குற்றச்சாட்டு.. நடந்தது என்ன?
Senthil Balaji: செந்தில் பாலாஜி கைது உறுதி.. வீட்டுக்கே சென்ற போலீஸ்.. லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு
Senthil Balaji: செந்தில் பாலாஜி கைது உறுதி.. வீட்டுக்கே சென்ற போலீஸ்.. லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு
CM Vijay: பனையூர் அலுவலகத்தில் விஜய்.. தவெகவில் இணைந்த திமுக எம்.பி. மகன்.. தொண்டர்கள் அதிர்ச்சி!
CM Vijay: பனையூர் அலுவலகத்தில் விஜய்.. தவெகவில் இணைந்த திமுக எம்.பி. மகன்.. தொண்டர்கள் அதிர்ச்சி!
TVK Government: தவெக அரசு குதிரை பேரம்.. ஒரே நேரத்தில் ஆளுநரை சந்தித்த திமுக - அதிமுக!
TVK Government: தவெக அரசு குதிரை பேரம்.. ஒரே நேரத்தில் ஆளுநரை சந்தித்த திமுக - அதிமுக!
Embed widget