மேலும் அறிய

Rajinikanth: ’என்னை பார்த்தாலே அந்த ஒரு நொடி ரஜினி பயப்படுவார்’ .. ராதிகா சொன்ன சீக்ரெட் என்ன தெரியுமா?

நடிகர் ரஜினிகாந்த், தன்னை பார்க்கும் போதெல்லாம் ஒரு விஷயத்தை தவறாமல் செய்வார் என நடிகை ராதிகா நேர்காணல் ஒன்றில் தெரிவித்த பழைய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 

நடிகர் ரஜினிகாந்த், தன்னை பார்க்கும் போதெல்லாம் ஒரு விஷயத்தை தவறாமல் செய்வார் என நடிகை ராதிகா நேர்காணல் ஒன்றில் தெரிவித்த பழைய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 

ரஜினி - ராதிகா காம்போ

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படுபவர் ரஜினிகாந்த். இதேபோல் சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை தனது  நடிப்பால் இன்றும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளவர் ராதிகா. இருவரும் இணைந்து போக்கிரி ராஜா, நல்லவனுக்கு நல்லவன், ரங்கா, ஊர்க்காவலன், மூன்று முகம் உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.

இதனிடையே சில ஆண்டுகளுக்கு முன் நடிகை சுஹாசினி தொகுத்து வழங்கிய நேர்காணல் ஒன்றில் சிறப்பு விருந்தினராக நடிகை ராதிகா பங்கேற்றார். அப்போது ரஜினியை போல் ஷூட்டிங்கில் நீங்கள் பேசிக்காட்டுவீர்கள் என சொன்னார்கள். அதேபோல் உங்கள் இருவருக்கும் இடையே ஒரு நல்ல புரிதல் உண்டு. அதைப்பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.

அந்த பயம் இருக்கணும்

அதற்கு பதிலளித்த ராதிகா, “நான் ரஜினியுடன் முதன்முதலாக போக்கிரி ராஜா படத்தில் தான் இணைந்து நடித்தேன். படப்பிடிப்பில் ரொம்ப அமைதியாக இருப்பார். அந்த படத்தில் ஒரு காட்சியில் அவர் முதுகின் மேல் ஏறி ஆட வேண்டும். புலியூர் சரோஜா தான் நடனம் அமைத்தார். முதுகில் டைவ் அடித்து உட்கார வேண்டுமென்பதால் சரியாக செய்யவில்லை என்றால் ரஜினி தன்னுடைய நடன அசைவை செய்ய முடியாது. ஷூட் செய்யும் போது ரஜினி எதுவுமே பேசவில்லை. ஆனால் எல்லா முடிந்து சாயங்காலம் வந்து அப்படியே ‘என்னால முடியல’ என படுத்தே விட்டார். 

ஒருநாள் நிகழ்ச்சி ஒன்றிற்கு வரும்போது ரப்பர் செருப்புடன் வந்திருந்தார். நான் அவரை அப்படியே பார்த்து விட்டு, ‘பெரிய நடிகர் தானே..சூப்பர் ஸ்டாருன்னு சொல்றாங்க’ என கேட்டேன். அவர் என்னவென்று விசாரிக்க, ‘என்னது இது செருப்பு’ என கூறினேன். அந்த நிகழ்வில் இருந்து எங்கே என்னை பார்த்தாலும் முதலில் குனிந்து அவர் காலை பார்த்து கொள்வார். சரியான காலணி அணிந்திருக்கிறாரா என செக் செய்வார். அந்த பயம் எப்பவும் இருக்கணும் சொல்வேன். அவர் மிகவும் சிறந்த மனிதர். 

நாங்கள் இருவரும் ஏவிஎம் தயாரிப்பில் தான் நடித்தோம்.அங்கே தமிழ் உச்சரிப்பு என்பது சரியாக இருக்க வேண்டும். நான் சரியாக ரஜினி டப்பிங் பேசும் போது சென்று விட்டால் அவருடன் ஒப்பிடும்போது என் தமிழ் தூய தமிழாக மாறிவிடும்” என ரஜினியுடன் பல நினைவுகளை அவர் பகிர்ந்து கொண்டார். 

அடுத்தடுத்து வெளியாகவுள்ள ரஜினி படங்கள் 

நடப்பாண்டில் ரஜினி நடிப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஜெயிலர் படம் வெளியாகி ரூ.600 கோடி வரை வசூலித்து சாதனைப் படைத்தது. தொடர்ந்து மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவாகியுள்ள லால் சலாம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் ரஜினி நடித்துள்ளார். மேலும் 170வது படமாக த.செ.ஞானவேல் இயக்கத்திலும், 171வது படமாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் ரஜினி அடுத்தடுத்து நடிக்கவுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். 

மேலும் படிக்க: ICC Cricket World Cup 2023: சென்னையில் இன்றும், நாளையும் பார்வைக்கு... காட்சியளிக்கும் உலகக் கோப்பை..! எங்கு தெரியுமா?

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ
சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வித்யா ராமராஜை நேரில் சந்தித்து வாழ்த்தி ரஜினி
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வித்யா ராமராஜை நேரில் சந்தித்து வாழ்த்தி ரஜினி
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?

வீடியோ

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK:
TVK vs DMK: "ஊழல் இல்லாத ஆட்சிக்கு டம்மி டாடி ஸ்டிக்கர் ஒட்ட முடியுமா?" திமுக-விற்கு தவெக கேள்வி
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
Elon MusK: “அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
“அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
​
​"2 நிமிட 'ரீல்ஸ்' எடுக்க தான் சட்டமன்றமா ?" – மேடையில் ஆவேசப்பட்ட கனிமொழி
Chennai Power Cut: சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
Embed widget