மேலும் அறிய

Radhika on Manobala : பல தசாப்தங்களாக தொடர்ந்த நட்பு... மனோபாலா இழப்பை ஏற்றுக்கொள்ள முடியவில்லை... ராதிகா உருக்கமான ட்வீட் ! 

நீண்ட நாள் நண்பரான மனோபாலாவின் இறப்பை தாங்க முடியாத நடிகை ராதிகா உருக்கமான ட்வீட் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

இயக்குனர் மற்றும் குணச்சித்திர நடிகருமான மனோபாலா கல்லீரல் பாதிப்பு காரணமாக நேற்று காலமானார். இந்த துக்க செய்தி திரையுலகத்தினர் மற்றும் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. விவேக், பாண்டு, மயில்சாமி என தொடர்ச்சியாக தமிழ் சினிமா காமெடி கலைஞர்களை இழந்து வரும் இந்த சூழலில் மனோபாலாவின் இழப்பும் மிகுந்த வருத்தத்தை கொடுத்துள்ளது. திரை பிரபலங்கள் பலரும் மனோபாலாவின் இறப்புக்கு இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் மனோபாலாவின் நெருங்கிய தோழியும் நடிகையுமான நடிகை ராதிகா மிகவும் கனத்த மனதுடன் அவருக்கு அஞ்சலி செலுத்தினார். 

Radhika on Manobala : பல தசாப்தங்களாக தொடர்ந்த நட்பு... மனோபாலா இழப்பை ஏற்றுக்கொள்ள முடியவில்லை... ராதிகா உருக்கமான ட்வீட் ! 

ராதிகா - மனோபாலா நட்பு :

ராதிகா சரத்குமார் மற்றும் மனோபாலாவின் நட்பு பல ஆண்டுகாலமாக தொடர்ந்து வரும் ஒரு உறவு. மனோபாலா இயக்குநராக 40க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். அவர் இயக்கிய முதல் படமான பிள்ளை நிலா படத்தின் கதாநாயகி நடிகை ராதிகா. அதனை தொடர்ந்து அவர் இயக்கிய சிறை பறவை, தென்றல் சுடும், ஊர் காவலன், சிறகுகள் என பல படங்களில் ராதிகா தான் ஹீரோயினாக நடித்திருந்தார். அது மட்டுமின்றி விஜயகாந்த், ரேகா, சுஹாசினி நடிப்பில் மனோபாலா இயக்கிய 'என் புருஷன் எனக்கு மட்டும் தான்' திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடிகை ராதிகாவை நடிக்க வைத்தார். தொழில் ரீதியாக மட்டுமின்றி ராதிகா - மனோபாலா இடையே ஒரு நல்ல நட்பு பல தசாப்தங்களாக தொடர்ந்தது. இந்த நிலையில் தனது தோழனின் இறப்பு ராதிகாவை வெகுவாக பாதித்துள்ளது. அவரின் இறப்பை தாங்க முடியவில்லை என ராதிகா தெரிவித்துள்ளார். 

ராதிகா உருக்கமான ட்வீட் :

ராதிகா சரத்குமார் தனது ட்விட்டர் பக்கம் மூலம் மனோபாலாவின் இழப்புக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் உருக்கமான ட்வீட் ஒன்றை பகிர்ந்துள்ளார். "நான் மிகவும் மன வேதனை அடைந்தேன், இன்று காலை தான் போன் செய்து அவரை எங்கு சென்று அவரைப் பார்க்க வேண்டும் என்று விசாரித்தேன். நம்பமுடியாத அதிர்ச்சி. தொழில் ரீதியாகவும் தனிப்பட்ட அளவிலும் அவருடன் பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டோம், நாங்கள் இருவரும் கற்றுக்கொண்டோம், சிரித்தோம், சண்டையிட்டோம், ஒன்றாக சாப்பிட்டோம், பல விஷயங்களைப் பற்றி நீண்ட நேரம் உரையாடினோம், அவர் ஒரு திறமையான நபர், எல்லா சூழ்நிலைகளிலும் ஒத்துழைக்க கூடியவர். அவரை நான் மிஸ் செய்வேன்" என்ற பதிவுடன் பிளாஷ் பேக் புகைப்படங்கள் சிலவற்றையும் பகிர்ந்துள்ளார் ராதிகா. 

தலைப்பு செய்திகள்

Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
Hyundai Creta EV On EMI: 475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
iPhone 17 Pro Max Discount: ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
Embed widget