அந்தரங்க வீடியோ கசிந்ததால் 4 நாட்கள் வெளியே வரவில்லை...கபாலி பட நடிகை ராதிகா ஆப்தே பகிர்ந்த அதிர்ச்சி சம்பவம்
தான் நடித்த படத்திலிருந்து அந்தரங்க வீடியோ கசிந்ததால் 4 நாட்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியவில்லை என ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார்.

நடிகை ராதிகா ஆப்தே, திரையில் நெருக்கமான காட்சிகளில் நடிப்பதைவிட, அவை அனுமதியின்றி இணையத்தில் கசியும்போது ஒரு நடிகையின் தனிப்பட்ட வாழ்க்கை எந்த அளவுக்கு பாதிக்கப்படுகிறது என்பதை தனது சொந்த அனுபவத்தின் மூலம் பகிர்ந்துள்ளார். நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகியுள்ள Lust Stories 3 படத்தில் நடித்துள்ள அவர், இந்தியா டுடேவுக்கு அளித்த பேட்டியில் 2015-ல் எதிர்கொண்ட சம்பவத்தை நினைவுகூர்ந்துள்ளார்.
இணையத்தில் கசிந்த அந்தரங்க வீடியோ
2015 ஆம் ஆண்டு பார்ச்ட் திரைப்படத்தில் ராதிகா ஆப்தே நடித்த நெருக்கமான காட்சி ஒன்று இணையத்தில் கசிந்து பெரியளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து ராதிகா ஆப்தே பேசுகையில் " நாம் நெருக்கமான காட்சிகளில் நடிப்பது பற்றி பேசிக்கொண்டிருந்தோம். ஆனால் நான் நடித்த ஒரு காட்சி கசிந்த பிறகு, நான்கு நாட்கள் வீட்டை விட்டு வெளியே வரவே முடியவில்லை” என்று ராதிகா தெரிவித்துள்ளார். மேலும், “பிரச்சினை மிக விரைவாக வீட்டுக்கே வந்துவிடும். உங்கள் வீட்டு கதவு மணியை யாராவது அடிக்கலாம். நீங்கள் செய்த விஷயத்தால் கோபமடைந்த ஒருவர் உங்கள் வீட்டுக்கு வெளியே நிற்கலாம். அதனால் இது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை. மிகவும் சிக்கலானது” என்றும் அவர் கூறியுள்ளார்.
அந்த வீடியோ தனது சுற்றத்தினரிடமும் சென்றது குறித்து பேசிய ராதிகா, தனது ஸ்டைலிஸ்ட் தன்னிடம் கூறிய சம்பவத்தையும் குறிப்பிட்டுள்ளார். அவரது ஸ்டைலிஸ்ட்டின் டிரைவர் அந்த வீடியோவை தொடர்ந்து பார்த்துக்கொண்டிருந்ததுடன், “நீங்கள் அவருடைய வீட்டுக்குத்தான் செல்கிறீர்களா?” என்று கேட்டதாக ராதிகா தெரிவித்துள்ளார். தனது வாட்ச்மேனும் அந்த வீடியோவை பார்த்திருந்ததாகவும், அதன் பிறகு நிலைமையை சமாளிப்பது மிகவும் கடினமாக இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
நீங்கள் என்ன பாதுகாப்பீர்களா?
இதனால் தனது பாதுகாப்பு குறித்தும் ராதிகா அச்சமடைந்துள்ளார். அப்போது தனியாக ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்ததால், தனது டிரைவர் மற்றும் ஸ்பாட் தாதாவை அழைத்து, “ஒரு வீடியோ கசிந்திருக்கிறது. நீங்கள் அதைப் பார்த்தீர்களா? பார்த்திருந்தால் என்னை பாதுகாக்க வேண்டும். இல்லையென்றால் என்னுடன் வேலை செய்ய வேண்டாம்” என்று நேரடியாக பேசியதாக தெரிவித்துள்ளார். அதற்கு இருவரும், “நாங்கள் உங்களை பார்த்துக்கொள்வோம்” என்று உறுதியளித்ததாக ராதிகா கூறியுள்ளார்.
ராதிகா ஆப்தே நடித்த படங்கள்
பார்ச்சட், பத்லாபூர், மாஞ்சி: தி மவுண்டன் மேன், ஃபோபியா, அந்தாதுன், பேட் மேன், விக்ரம் வேதா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ராதிகா ஆப்தே, தமிழில் தோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றி செல்வன் மற்றும் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்த கபாலி ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். தற்போது லஸ்ட் ஸ்டோரீஸ் 3 படத்தில் நடித்துள்ள நிலையில், தனது கடந்தகால அனுபவத்தை அவர் வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















