மேலும் அறிய

Rachitha Mahalakshmi: பிக் பாஸ் ரச்சிதாவுக்கு என்னாச்சு..? தெரப்பிஸ்டை பார்க்க போறங்கலாமே... ஆறுதல் கூறும் ரசிகர்கள்..! 

பிக் பாஸ் மூலம் பிரபலமான சீரியல் நடிகை ரச்சிதா மகாலட்சுமியின் லேட்டஸ்ட் இன்ஸ்டா போஸ்ட் அவரின் ரசிகர்களுக்கு கவலை அளித்திருக்கிறது.

விஜய் டிவியில் 2011 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தவர் ரச்சிதா மகாலட்சுமி. அதன் மூலம் சின்னத்திரை ரசிகர்களின் கவனம் பெற்ற ரச்சிதா தொடர்ந்து இளவரசி, சரவணன் மீனாட்சி 2, சரவணன் மீனாட்சி 3, நாச்சியார்புரம், நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 2 உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்திருந்தார். 

Rachitha Mahalakshmi: பிக் பாஸ் ரச்சிதாவுக்கு என்னாச்சு..? தெரப்பிஸ்டை பார்க்க போறங்கலாமே... ஆறுதல் கூறும் ரசிகர்கள்..! 

பிக்பாஸ் பிரபலம்:

இதில் சரவணன் மீனாட்சி சீரியல் அவருக்கு தமிழில் ஏராளமான ரசிகர்களை பெற்றுக் கொடுத்தது. விஜய் டிவி மட்டுமின்றி சன் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான தொடர்களிலும் நடித்து வந்தார். சின்னத்திரை மூலம் பிரபலமான ஒரு செலிபிரிட்டியாக இருந்த ரச்சிதாவுக்கு கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற சக போட்டியாளரான ராபர்ட் மாஸ்டர் அவரை சுற்றி சுற்றி வந்தது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. அவர்களின் வீடியோக்கள் சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங்காக இருந்ததது. ஏற்கனவே ஏராளமான ரசிகர்களை பெற்றிருந்த ரச்சிதாவுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு  எக்கு தப்பாக உயர்ந்தது. பெரிய அளவில் ரீச் பெற்ற ரச்சிதாவுக்கு வெள்ளித்திரையில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பும் கிடைத்துள்ளது. 'மெய்நிகரே' என்ற படத்தின் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ரச்சிதா என கூறப்படுகிறது. 

ரச்சிதா திருமண வாழ்க்கை:

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகையாக இருந்து இப்போது வெள்ளித்திரையில் அடியெடுத்து வைக்கும் அளவிற்கு வளர்ந்துள்ள ரச்சிதாவுக்கு ஏனோ திருமண வாழ்க்கை அத்தனை இனிமையாக அமையவில்லை. தான் நடித்த பிரிவோம் சந்திப்போம் சீரியலில் ரீல் ஜோடியாக இருந்த நடிகர் தினேஷ் அன்பவரியை கடந்த 2015ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஒரு சில ஆண்டுகள் சந்தோஷமாக அமைந்த அவர்களின் திருமண வாழ்க்கையில் போக போக ஏகப்பட்ட கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு அதனால் மனக்கசப்பு உண்டாகி பிரிந்து தனித்தனியே வாழ்ந்து வந்தனர். 

 

Rachitha Mahalakshmi: பிக் பாஸ் ரச்சிதாவுக்கு என்னாச்சு..? தெரப்பிஸ்டை பார்க்க போறங்கலாமே... ஆறுதல் கூறும் ரசிகர்கள்..! 


பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ரச்சிதாவுக்கு வாழ்த்துக்களை எல்லாம் தெரிவித்து இருந்தார் தினேஷ். அதனால் ரச்சிதா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு மனக்கசப்பு மறந்து இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ்வார்கள் என அவரின் ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் நடந்தது என்னவோ நினைத்ததற்கு நேர்மாறாக இருந்தது. தினேஷ் தன்னை ஆபாசமாக பேசி, மெசேஜ் அனுப்பி வருகிறார், மிரட்டுகிறார் என தினேஷ் மீது ரச்சிதா காவல் நிலையத்தில் சமீபத்தில்  புகார் அளித்து இருந்தார். இவர்களுக்கு இடையே இருந்த விரிசல் அதிகமாகி கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது. 

இந்த நிலையில் ரச்சிதாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் போஸ்ட் ஒன்று அவரின் ரசிகர்களை கவலையடைய செய்துள்ளது. "என்னை குணப்படுத்தும் பயணத்தில் இருக்கிறேன். எனது தெரப்பிஸ்டை சந்திக்க செல்கிறேன்" என அவர் பயணம் மேற்கொள்ளும் புகைப்படம் ஒன்றையும் "என்னுடைய ஒரே தெரபிஸ்ட்" என கூறி தனது  செல்ல பூனைக்குட்டியை கொஞ்சும் வீடியோ ஒன்றையும் போஸ்ட் செய்துள்ளார். அவரின் இந்த போஸ்டை பார்த்த ரசிகர்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள் என கமெண்ட் மூலம் ஆறுதல் கூறி வருகிறார்கள். 

தலைப்பு செய்திகள்

Vishal:
Vishal: "உதயநிதி பேசுனாருனு உள்ளே வச்சாங்க.. வெளிய நிறைய பேரு அப்படி இருக்காங்க.." நடிகர் விஷால் பேச்சு
Vishal:
Vishal: "2031ல் மாற்றம் வரலாம்.." அரசியல் என்ட்ரியை மறைமுகமாக அறிவித்தார் விஷால்
Suriya:
Suriya: "20 வயது இடைவெளி மனப்போராட்டமே விஸ்வநாத் அன் சன்ஸ்.." மனம் திறந்த நடிகர் சூர்யா
Karthigai Deepam: ரேவதிக்கு தெரிந்த உண்மை.. அதிர்ச்சியில் உறைந்த சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ரேவதிக்கு தெரிந்த உண்மை.. அதிர்ச்சியில் உறைந்த சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
New Bajaj Pulsar 150: போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
EV Subsidy: அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
Embed widget