மேலும் அறிய

Raayan Trailer: சிங்கமா? ஓநாயா? பேய் மாதிரி வந்த தனுஷ்! வெளியானது ராயன் பட ட்ரைலர்!

Raayan Trailer : சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் இயக்கி ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள ராயன் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது

தனுஷ் 

 இந்திய சினிமாவின் தனித்துவமான நடிகராக கருதப் படுபவர் தனுஷ் , நடிகர் , இயக்குநர் , பாடகர்  , பாடலாசிரியர் , தயாரிப்பாளர் என தனுஷ் தொட்டது எல்லாம் தங்கம் தான் . சிறந்த நடிகருக்கான தேசிய விருது , காக்கா முட்டை படத்தின் தயாரிப்பாளராக ஒரு தேசிய விருது என சின்ன வயதில் பெரிய அங்கீகாரங்களை தனுஷ் சேர்த்துள்ளார். தமிழ் ,இந்தி , ஹாலிவுட் என தனது நடிப்பாற்றலை சர்வதேச தளத்திற்கு கொண்டு சேர்த்துள்ளார் தனுஷ் .

ராயன்

துள்ளுவதோ இளமை படத்தில் நாயகனாக அறிமுகமான தனுஷின் 50 ஆவது படமாக உருவாகியுள்ளது ராயன். இப்படத்தை தனுஷே இயக்கி நாயகனாக நடித்துள்ளார். சந்தீப் கிஷன் , காலிதாஸ் ஜெயராமன் , துஷாரா விஜயன்  , எஸ்.ஜே.சூர்யா , செல்வராகவன் , பிரகாஷ் ராஜ் , அபர்ணா பாலமுரளி , வரலட்சுமி சரத்குமார் என ஏராளமான பிரபலங்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவும் , ஜாக்கி கலை வடிவமைப்பும்  செய்துள்ளார்கள்.

ராயன் திரைப்படத்தின் இசை வெளியீடு கடந்த ஜூலை 6 ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் தனுஷ் பேசியது ரசிகர்களை கவர்ந்தது . மேலும் படத்தில் நடித்த மற்ற நடிகர்கள் படம் பற்றி பேசியது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. ஜூலை 26 ஆம் தேதி படம்  வெளியாக இருக்கும் நிலையில் தற்போது இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இப்படத்தின் நடிகரும் இயக்குநருமான தனுஷ் தனது எக்ஸ் தளத்தில் ட்ரைலரை வெளியிட்டுள்ளார். 

ராயன் டிரைலர்

 

கடந்த 2017 ஆம் ஆண்டு தனுஷ் பவர் பாண்டி படத்தை இயக்கினார். இப்படத்தில் ராஜ்கிரண் , ரேவதி , மடோனா செபாஸ்டியன் உள்ளிட்டவர்கள் நடித்தார்கள் . ஷான் ரோல்டன் படத்திற்கு இசையமைத்தார். இப்படத்திற்கு பின் தனுஷ் படங்களை இயக்குவதில் இருந்து சிறிது காலம் இடைவெளி எடுத்துக் கொண்டார். தற்போது கிட்டதட்ட 7 ஆண்டுகளுக்கு பிறகு தனது 50 ஆவது படத்தை தானே இயக்கி அதில் நாயகனாக நடித்துள்ளார் தனுஷ். ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகி இருக்கும் ராயன் படத்தில் தனுஷின் நடிப்பு மற்றும் அவரது இயக்கத்தை பார்க்க ரசிகர்கள் மிக ஆர்வமாக காத்திருக்கிறார்கள். மேலும் இப்படத்தில் செல்வராகவன் , எஸ்.ஜே சூர்யா உள்ளிட்டவர்களின் கதாபாத்திரங்கள் பற்றிய எதிர்பார்ப்பும் பெரியளவில் இருந்து வருகிறது. 

 

தலைப்பு செய்திகள்

Azhagae Azhagu: தங்கராஜிடம் வசமாக மாட்டிய பெண்கள் குரூப்.. அழகே அழகு சீரியலில் இந்த வாரம் நடப்பது என்ன?
Azhagae Azhagu: தங்கராஜிடம் வசமாக மாட்டிய பெண்கள் குரூப்.. அழகே அழகு சீரியலில் இந்த வாரம் நடப்பது என்ன?
முதல் பாதியில் கேள்விகள்... 2-ஆம் பாதியில் அதிரடி திருப்பங்கள்: மிரட்ட வரும் 'கிட்டி'..
முதல் பாதியில் கேள்விகள்... 2-ஆம் பாதியில் அதிரடி திருப்பங்கள்: மிரட்ட வரும் 'கிட்டி'..
எவனோ முட்டாள் சொன்னானு சண்டைக்கு போகாதீங்க...ரசிகர்களுக்கு சூர்யா அறிவுரை
எவனோ முட்டாள் சொன்னானு சண்டைக்கு போகாதீங்க...ரசிகர்களுக்கு சூர்யா அறிவுரை
அந்த பையனுக்கு பயமில்ல...மீண்டும் தவெக ஆதரவாளர்களை சீண்டிய விஜய் சேதுபதி
அந்த பையனுக்கு பயமில்ல...மீண்டும் தவெக ஆதரவாளர்களை சீண்டிய விஜய் சேதுபதி

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RTI Act: இதுதான் விஜயின் வெளிப்படைத்தன்மையா? புதிய அரசாணையால் RTI ஆர்வலர்கள் ஆவேசம் - குவியும் எதிர்ப்பு
இதுதான் விஜயின் வெளிப்படைத்தன்மையா? புதிய அரசாணையால் RTI ஆர்வலர்கள் ஆவேசம் - குவியும் எதிர்ப்பு
CM Joseph Vijay: சொல்ல முடியாத சோகம்.. கரூர் சம்பவத்தின் ஓராண்டு.. வேதனையுடன் அஞ்சலி செலுத்திய விஜய்!
CM Joseph Vijay: சொல்ல முடியாத சோகம்.. கரூர் சம்பவத்தின் ஓராண்டு.. வேதனையுடன் அஞ்சலி செலுத்திய விஜய்!
Chennai Airport: போரூர் பைபாஸ் டூ சென்னை ஏர்போர்ட்டிற்கு நேரடி மேம்பால சாலை - அடையாறு ஆறின் மீது திட்டம்
போரூர் பைபாஸ் டூ சென்னை ஏர்போர்ட்டிற்கு நேரடி மேம்பால சாலை - அடையாறு ஆறின் மீது திட்டம்
Tasmac: 43 டாஸ்மாக் கடைகளை தூக்கியே ஆகனும்..! தலைமை செயலாளருக்கே லெட்டர் போட்ட ரயில்வே, ஏன்? எங்கே?
43 டாஸ்மாக் கடைகளை தூக்கியே ஆகனும்..! தலைமை செயலாளருக்கே லெட்டர் போட்ட ரயில்வே, ஏன்? எங்கே?
Maruti Hybrid: பெட்ரோல் பேக்கப்பில் மாருதியின் புதிய ஹைப்ரிட் கார்..! அசரவைக்கும் மைலேஜ் - எந்தெந்த மாடல்கள்?
பெட்ரோல் பேக்கப்பில் மாருதியின் புதிய ஹைப்ரிட் கார்..! அசரவைக்கும் மைலேஜ் - எந்தெந்த மாடல்கள்?
Araghchi Vs Trump: முன்மொழிவை நிராகரித்த ட்ரம்ப்; கோபமடைந்த ஈரான்; ‘காத்திருங்கள்‘ என கூறிய அராக்சி; என்ன நடக்கும்.?
முன்மொழிவை நிராகரித்த ட்ரம்ப்; கோபமடைந்த ஈரான்; ‘காத்திருங்கள்‘ என கூறிய அராக்சி; என்ன நடக்கும்.?
Trump on Iran Hormuz:
"ஈரான் திவாலாயிடுச்சு, அவங்களாலயே அவங்களுக்கு பிரச்னை“ ஹார்முஸ் குறித்து ட்ரம்ப் பேசியது என்ன.?
Chennai Power Cut: சென்னை மக்களே.! திங்கட்கிழமை (28.09.2026) நிறைய இடங்கள்ல பவர் கட் இருக்கு; உங்க எரியா இருக்கா.?
சென்னை மக்களே.! திங்கட்கிழமை (28.09.2026) நிறைய இடங்கள்ல பவர் கட் இருக்கு; உங்க எரியா இருக்கா.?
Embed widget