மேலும் அறிய

அவரு கடவுள்சார்..! கலைப்புலி தாணு வியந்து பாராட்டிய இயக்குனர் யார் தெரியுமா?

பிரபல இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் கடவுள் என்று பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகின் பிரபல இ்யக்குனராக உலா வந்தவர் எஸ்.பி.முத்துராமன். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து அதிக படங்கள் இயக்கியவர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் எஸ்பி முத்துராமன். இவர் 1988ம் ஆண்டு நல்லவன் என்ற படத்தை இயக்கினார். 

நல்லவன்:

விஜயகாந்த், ராதிகா, எம்.என்.நம்பியார் ஆகியோர் நடித்த இந்த படத்தை தயாரித்தது மட்டுமின்றி இந்த படத்திற்கு கதை, திரைக்கதை மற்றும் வசனம் எழுதியவர் கலைப்புலி எஸ்.தாணு. இந்த படத்தின்போது நடந்த சுவாரஸ்யமான சம்பவத்தை தயாரிப்பாளர் தாணு பகிர்ந்துள்ளார்.

அவர் கூறியதாவது, நானே கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதின படம் நல்லவன். அந்த படத்தில் கதாநாயகி ராதிகா. படத்தில் அவங்க கலெக்டர். கலெக்டருக்கு மணவறையில தாலி கட்ட வேண்டிய சூழ்நிலையில வரும்போது, நான் 18 ஆயிரம் ரூபாய்க்கு நல்லி சில்க்ஸ்-ல இருந்து பட்டுப்புடவை வாங்கி கொடுத்துட்டேன். 

அவரு கடவுள்:

எஸ்பி முத்துராமனை சொல்லனும். அவரு கடவுள். அவரு புடவை பாத்துட்டு பில்ல பாத்துட்டு 18 ஆயிரம் யார்? யார்? வாங்குனதுனு கேட்டாரு. புரொடியூசர் தான் வாங்குனாருனு சொல்லவும் கூப்பிடு அவரைனு கூப்பிட்டாங்க. தாணு சார் என்ன 18 ஆயிரத்துக்கு புடவை வாங்கிருக்கீங்க? கலெக்டர் பெரிய பணக்கார வீட்டுப் பொண்ணு.

பணக்கார வீட்டுப் பொண்ணு உங்க கதையில. நீங்க படத்துல பண்ணும்போது போப்பா 400 ரூபாய்க்கு புடவை வாங்கிட்டு வாப்பா. 400 ரூபாய்க்க புடவை எடுத்துட்டு வந்து அந்த ஷாட்டை காமிக்கும்போது தாணு சார் உங்க 18 ஆயிரம் புடவை எப்படி இருக்குதுனு கேட்டாரு. சோ ஒரு புரொடியூசரை எவ்வளவு மிச்சம் பண்றாரு பாருங்க. அதனால்தான் அவருக்கு மனிதரில் புனிதர்னு பட்டம் கொடுத்தேன். 

இவ்வாறு அவர் பேசினார். 

தமிழ் சினிமாவின் ஜாம்பவன்களாக திகழும் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த் ஆகியோர் மட்டுமின்றி பழம்பெரும் நடிகர்களான எஸ்.பி.முத்துராமன், ஜெய்சங்கர், சிவகுமார், ஸ்ரீகாந்த் ஆகியோரையும் கார்த்தி, பிரபு, ரகுவரன் , ராம்கி ஆகியோரையும் நாயகனாக இயக்கியுள்ளார். ஏவிஎம் நிறுவனத்திற்காக ஏராளமான வெற்றிப்படங்களை ரஜினி மற்றும் கமல்ஹாசனை வைத்து இயக்கியுள்ள எஸ்பி முத்துராமன் தற்போது அந்த நிறுவனத்தில் முக்கிய பொறுப்பு வகிக்கிறார். 

ரஜினிகாந்தின் ஆறில் இருந்து அறுபது வரை, போக்கிரி ராஜா, நான் மகான் அல்ல, அடுத்த வாரிசு, பாயும்புலி,  மிஸ்டர் பாரத், வேலைக்காரன், பாண்டியன் ஆகிய படங்களையும், கமல்ஹாசனின் சகலகலா வல்லவன், எனக்குள் ஒருவன், தூங்காதே தம்பி தூங்காதே, உயர்ந்த உள்ளம் ஆகிய படங்களையும் இயக்கியுள்ளார். 

தலைப்பு செய்திகள்

"முடிந்தால் இதைச் செய்து காட்டுங்கள்!"... சவால்விட்ட சிவாஜி... எம்ஜிஆர் கொடுத்த பதில்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
Sasikumar:
Sasikumar: "விஜய் முதலமைச்சரானதில் ஒரே ஒரு வருத்தம்தான்.." இயக்குனர் சசிகுமார் சொன்னது ஏன்?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
Minister Nirmal Kumar: “தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
“தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
US to Attack Iran: “வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
“வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
Royal Enfield Shotgun 650: 3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
Embed widget