மேலும் அறிய

Salaar Movie: பிரபாஸின் 'சலார்' வெளியீட்டு உரிமையை பெற்ற ரெட் ஜெயண்ட் மூவீஸ்!

பிரபாஸ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சலார்’ படத்தின் தமிழ் விநியோக உரிமத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் பெற்றுள்ளது.

சலார்

‘சலார்’. கேஜிஎஃப் பாகங்களை இயக்கி கன்னட சினிமாவை தாண்டி ஒட்டுமொத்த இந்திய சினிமாவின் கவனத்தையும் ஈர்த்தவர் பிரஷாந்த் நீல். கன்னட சினிமாவின் மார்க்கெட்டையே அடுத்த தளத்துக்கு உயர்த்திய பிரஷாந்த் நீலின் அடுத்த படமான சலாரை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துள்ளனர்.

கேஜிஎஃப் பாகங்களைத் தொடர்ந்து மிகப்பெரும் பொருட்செலவில் இப்படம் உருவாகி வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது. பிரபாஸ் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தின் கிறிஸ்துமஸ் விடுமுறையைக் குறிவைத்து டிசம்பர் 22ஆம் தேதி வெளியாகிறது.  இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இப்படத்தில் மலையாள நடிகர் பிரித்விராஜ் வில்லனாக நடிக்க, நடிகை ஸ்ருதி ஹாசன் ஹீரோயினாக நடித்துள்ளார். ஜெகபதி பாபு முக்கியக் கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார்.

ஹோம்பாலே ஃபிலிம்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. சலார் திரைப்படம் டிசம்பர் 22ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் தற்போது இந்தப் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி வருகின்ற டிசம்பர் 1 ஆம் தேதி  சலார் படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் என தெரியவந்துள்ளது. இதனால் கேஜிஎஃப் மற்றும் பிரபாஸ் ரசிகர்கள் உற்சாகத்தில் காணப்படுகிறார்கள்.

சலார் அப்டேட்ஸ்

சலார் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து படத்தில் வில்லனாக நடித்திருக்கும் ப்ரித்விராஜின் ஃபர்ஸ்ட் லுக்கை அவரது பிறந்தநாளன்று படக்குழு வெளியிட்டது. 

தமிழ்நாடு ரிலீஸ்

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது சலார் திரைப்படம். இந்நிலையில் சலார் திரைப்படத்தை தமிழ்நாட்டில் வெளியிடும் உரிமத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இந்தத் தகவலை ரெட் ஜெயண்ட் மூவீஸ் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

பிரபாஸ் நடித்து வரும் படங்கள்

சலார் திரைப்படத்தைத் தவித்து பிரபாஸ் தற்போது நாக் அஸ்வின் இயக்கும் கல்கி 2898 படத்தில் நடித்து வருகிறார். ரானா டகுபடி, அமிதாப் பச்சன், கமல்ஹாசன் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்து வருகிறார்கள். சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்திற்கு இசையமைத்து வருகிறார். கமல்ஹாசன் இந்தப் படத்தில்  வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்திய புராணக் கதையை மையமாக வைத்து சைன்ஸ் ஃபிக்‌ஷனாக உருவாகும் இந்தப் படம் சுமார் 600 கோடி ரூபாய் பொருட்செலவில் உருவாகி வருகிறது.

தலைப்பு செய்திகள்

DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
"விஜய், அஜித், விக்னேஷ்னு இருந்துச்சு.. காலம் கைவிட்ருச்சு.." நொந்து பேசிய முன்னாள் ஹீரோ!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
Embed widget