Dude Box Office : குவியும் கூட்டம் , கொட்டும் வசூல்..2 நாளில் டியூட் நடத்திய வசூல் வேட்டை
Dude Box Office. : பிரதீப் ரங்கநாதன் மமிதா பைஜூ நடித்துள்ள டியூட் படத்தின் இரண்டு நாள் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது

டிராகன் படத்தைத் தொடர்ந்து இந்த ஆண்டு இரண்டாவது ஹிட் படத்தை கொடுத்துள்ளார் பிரதீப் ரங்கநாதன். கடந்த அக்டோபர் 17 ஆம் தேதி வெளியான டியூட் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வசூலை குவித்து வருகிறது. அந்த வகையில் டியூட் திரைப்படத்தின் இரண்டு நாள் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
டியூட் பட 2 நாள் வசூல்
அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் , மமிதா பைஜூ நடித்துள்ள திரைப்படம் டியூட். மைத்ரி மூவி மேக்கர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. சாய் அப்யங்கர் இசையமைத்துள்ளார். முதல் நாளில் டியூட் திரைப்படம் உலகலவில் ரூ 22 கோடி வசூல் செய்தது. தொடர்ந்து இரண்டாவது நாளில் உலகளவில் ரூ 45 கோடி படம் வசூலித்துள்ளதாக படதயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டுள்ளது
DUDE DIWALI BLAST is unstoppable at the box office with massive love from the audience ❤️#Dude collects a gross of 45 CRORES WORLDWIDE in 2 days & going super strong ❤🔥
— Mythri Movie Distributors LLP (@MythriRelease) October 19, 2025
Book your tickets now and celebrate #DudeDiwali 🔥
🎟️ https://t.co/2snQsAfruv
🎟️ https://t.co/42C6tFIfDI… pic.twitter.com/Pb1a0p8MAk





















