மேலும் அறிய

'சிரிக்கும் ரோஜா சைக்கோ ராஜா' - விரைவில் வெளியாகும் பஹிரா ஃபர்ஸ்ட் சிங்கிள்..

பிரபு தேவாவின் நடிப்பில் உருவாகியுள்ள 'பஹிரா' படம் குறித்த முக்கிய அப்டேட் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

பிரபு தேவாவின் நடிப்பில் உருவாகியுள்ள 'பஹிரா' படம் குறித்த முக்கிய அப்டேட் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் 2015-ஆம் ஆண்டு வெளியான 'த்ரிஷா இல்லன்னா நயன்தாரா' படத்தின் மூலம் திரையுலகில் இயக்குநராக களமிறங்கினார் ஆதிக் ரவிச்சந்திரன். இதுவரை சிம்புவின் அன்பானவன் அசாராதவன் அடங்காதவன் உள்பட இரண்டு படங்களை அவர் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் பிரபல நடிகர் பிரபுதேவா நடிப்பில் உருவாகி உள்ள 'பஹிரா' படத்தில் இருந்து 'சிரிக்கும் ரோஜா சைக்கோ ராஜா' என்ற முதல் சிங்கள் பாடல் வரும் மே மாதம் 6-ஆம் தேதி வெளியாகவுள்ளது. ஜி.வி.பிரகாஷ் இந்த பாடலை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சைக்கோ த்ரில்லர் படமான பஹிராவில், பஹிரா முரளிதரன் என்ற கதாபாத்திரத்தில் மனநல காப்பகத்தில் இருக்கும் ஒரு நபரின் கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார் பிரபு தேவா. மேலும் இந்த படத்தில் சோனியா அகர்வால், அமைரா டஸ்ட்டர், ஜனனி ஐயர், சஞ்சிதா ஷெட்டி, சாக்ஷி அகர்வால், ரம்யா நம்பீசன் மற்றும் காயத்ரி சங்கர் என்று 6 கதாநாயகிகள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். 

பிரபுதேவாவும் தனது தந்தையை போல முதலில் குரூப் டான்சராகத்தான் திரையுலகில் அறிமுகமானார். 1986-ஆம் ஆண்டு பிரபல இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான மௌன ராகம் என்ற படத்தில் வரும் பனிவிழும் மலர்வலம் என்ற பாடலில் தான் பிரபுதேவா குரூப் டான்சராக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.


சிரிக்கும் ரோஜா சைக்கோ ராஜா' - விரைவில் வெளியாகும் பஹிரா ஃபர்ஸ்ட் சிங்கிள்..

அதன் பிறகு 1994-ஆம் ஆண்டு பவித்ரன் இயக்கத்தில் வெளியான இந்து என்ற படத்தில் நாயகனாக களமிறங்கினர். அந்த படத்தில் பிரபுதேவாவிற்கு டப்பிங் பேசியது சீயான் விக்ரம் என்பது நினைவுகூரத்தக்கது. அதனை தொடர்ந்து சங்கரின் காதலன், ஆர். கண்ணனின் ராசையா, பி.வசுவின் லவ் போர்ட்ஸ் உள்ளிட்ட பல படங்கள் தொடர்ந்து ஹிட்டான நிலையில் பிரபுதேவா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக மாறினார். தமிழ் தெலுங்கு மற்றும் கன்னடம் என்று கலக்கிய பிரபுதேவா பாலிவுட் உலகிலும் பல படங்களில் நடித்தும் இயக்கியும் வருகின்றார். இறுதியாக தமிழில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான சார்லி சாப்ளின் 2 மற்றும் தேவி 2 ஆகிய படங்களில் நடித்த நிலையில் தற்போது பகீரா மற்றும் பொன் மாணிக்கவேல் உள்பட 6 படங்களில் நடித்து வருகிறார் பிரபுதேவா. பகீரா திரைப்படத்தின் முதல் சிங்கிள் சிரிக்கும் ரோஜா சைக்கோ ராஜா மே 6-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் விரைவில் திரைப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

10 லட்சம் மதிப்புள்ள வாட்ச் பரிசளித்த சூர்யா...சீன் நடிகர் நஸ்லென் பகிர்ந்த தகவல்
10 லட்சம் மதிப்புள்ள வாட்ச் பரிசளித்த சூர்யா...சீன் நடிகர் நஸ்லென் பகிர்ந்த தகவல்
OM Prebooking : தனுஷ் நடித்துள்ள ஓம் படத்தின் முன்பதிவு தொடக்கம்..சிறப்புக் காட்சிகள் இருக்கா?
OM Prebooking : தனுஷ் நடித்துள்ள ஓம் படத்தின் முன்பதிவு தொடக்கம்..சிறப்புக் காட்சிகள் இருக்கா?
மேரேஜ் ஸ்டோரி படத்தின் டீசர் வெளியீடு
மேரேஜ் ஸ்டோரி படத்தின் டீசர் வெளியீடு
கரை சேர்ந்ததா கலையரசனின் காதல் கதை...டைட்டானிக் திரைப்பட விமர்சனம்
கரை சேர்ந்ததா கலையரசனின் காதல் கதை...டைட்டானிக் திரைப்பட விமர்சனம்

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பெண்களுக்கு சூப்பர் அறிவிப்பு! அண்ணன் சீர் திட்டம்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? இதோ முழு விவரம்
பெண்களுக்கு சூப்பர் அறிவிப்பு! அண்ணன் சீர் திட்டம்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? இதோ முழு விவரம்
TVK: இனி யாராவது ஓவராக ஆட்டம் போட்டால் பதவி காலி.. அதுமட்டுமல்ல.. தவெக பொதுச்செயலாளர் எச்சரிக்கை
TVK: இனி யாராவது ஓவராக ஆட்டம் போட்டால் பதவி காலி.. அதுமட்டுமல்ல.. தவெக பொதுச்செயலாளர் எச்சரிக்கை
MS Dhoni Retirement: ரசிகர்களுக்கு இடியை இறக்கிய சிஎஸ்கே!.....ஐபிஎல்லில் இருந்து ஓய்வுபெற்றார் தோனி!
MS Dhoni Retirement: ரசிகர்களுக்கு இடியை இறக்கிய சிஎஸ்கே!.....ஐபிஎல்லில் இருந்து ஓய்வுபெற்றார் தோனி!
ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெறும் தோனி - திமுக தலைவர் ஸ்டாலின் உருக்கம்!
ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெறும் தோனி - திமுக தலைவர் ஸ்டாலின் உருக்கம்!
TVK vs DMK:
TVK vs DMK: "ரீபோஸ்ட் நிதி.. சீனியர் அபுயூசர்.. பெண்களை மதிக்கத் தெரியாத கட்சி திமுக.." சரமாரியாக விமர்சித்த தவெக
Gold Rate: 11 மாத காத்திருப்பு..! ரூ.1 லட்சத்திற்கும் கீழ் சரிந்த தங்கம் விலை - ஒரு சவரன், கிராம் எவ்வளவு தெரியுமா?
11 மாத காத்திருப்பு..! ரூ.1 லட்சத்திற்கும் கீழ் சரிந்த தங்கம் விலை - ஒரு சவரன், கிராம் எவ்வளவு தெரியுமா?
"முதலமைச்சருக்கு அரோகராவா? ஒழுங்கு மரியாதையா மன்னிப்பு கேளுங்க" - சீமான் விடுத்த கடும் எச்சரிக்கை
திருமணத்திற்கு மறுத்த பெண்.. சதி செய்த நாற்பது வயது ரோமியோ! போக்சோவில் சிக்கிய அப்பாவி இளைஞன்!
திருமணத்திற்கு மறுத்த பெண்.. சதி செய்த நாற்பது வயது ரோமியோ! போக்சோவில் சிக்கிய அப்பாவி இளைஞன்!
Embed widget