மேலும் அறிய

Nagendra Prasad : 'வீட்டை கொடுத்து ஏமாந்துவிட்டேன்.. சினிமாக்காரன் என்பதால் கெட்ட பெயர்..' மன உளைச்சலில் பிரபுதேவா தம்பி!

Nagendra Prasad: நடிகர் மற்றும் நடன இயக்குனர் பிரபுதேவா தம்பி நாகேந்திர பிரசாத் வீட்டை வாடகைக்கு கொடுத்து ஏமாந்து நிற்கும் மிகுந்த மனவேதனையில் உள்ளார்.

தென்னிந்திய சினிமாவின் பிரபலமான நடன இயக்குநர் மறைந்த சுந்தரத்தின் மகனும், நடிகர் பிரபுதேவாவின் தம்பியுமான நடிகர் நாகேந்திர பிரசாத் திரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். பல திரைப்படங்களுக்கு நடன இயக்குநராக பணியாற்றியதுடன், நடிகராகவும் நடித்து பிரபலமானவர். குஷி, கில்லி, ஒன் டூ த்ரீ உள்ளிட்ட பல படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்தவர். நடிகர் நாகேந்திர பிரசாத் தற்போது ஒரு சர்ச்சையில் சிக்கி தவித்து வருகிறார். 

 

Nagendra Prasad : 'வீட்டை கொடுத்து ஏமாந்துவிட்டேன்.. சினிமாக்காரன் என்பதால் கெட்ட பெயர்..' மன உளைச்சலில் பிரபுதேவா தம்பி!

வீட்டை கொடுத்து ஏமாற்றம்:

நடிகர் நாகேந்திர பிரசாத்துக்கு சொந்தமான வீடு ஒன்று  தேனாம்பேட்டையில் உள்ளது. அந்த வீட்டினை எஸ்.டி.எஸ்.கே என்ற நிறுவனத்துக்கு 36,000 ரூபாய் மாத வாடகைக்கு கொடுத்துள்ளார். ஒவ்வொரு மாதமும் வாடகை பணம் கரெக்ட்டாக வந்து கொண்டு இருந்த நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக எஸ்.டி.எஸ்.கே நிறுவனத்திடம் இருந்து வாடகை பணம் வராமல் இருந்துள்ளது. அவர்களை தொடர்பு கொள்ளவும் முடியாத காரணத்தால் வீட்டை காலி செய்ய நோட்டீஸ் அனுப்பியும் பதிலும் வரவில்லை, வாடகையும் வரவில்லை என்பதால் நேரில் சென்று வீட்டில் வசிப்பவரை காலி செய்ய சொல்லி கேட்டுள்ளார் நாகேந்திர பிரசாத். 

அந்த சமயத்தில் தான் நாகேந்திர பிரசாத்துக்கு அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது. அதாவது அந்த வீட்டில் குடி இருப்பவர் வாடகைக்கு இருப்பவர் அல்ல என்றும் 25 லட்சம் எஸ்.டி.எஸ்.கே நிறுவனத்திடம் கொடுத்து லீசுக்கு வந்து இருப்பதும் தெரியவந்துள்ளது. ஷாக்கான நாகேந்திர பிரசாத் "நான் வீட்டை வாடகைக்காக தான் கொடுத்தேன் தவிர லீசுக்கு விடவில்லை. அது குறித்து எந்த ஒரு அக்ரிமென்ட்டும் போடவில்லை" என்றும் தெளிவு படுத்தியுள்ளார்.  எஸ்.டி.எஸ்.கே தலைமறைவாக இருப்பது தெரிந்து அந்த வீட்டில் வசிப்பவரிடம் காலி செய்ய சொல்லியுள்ளார். அவர்கள் இரண்டு மாதம் கால அவகாசம் கேட்டுள்ளனர். இரண்டு மாதங்களுக்கு பிறகும் காலி செய்யாததால், நேரில் சென்று விசாரித்த போது அவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்து இருப்பதாகவும் தீர்ப்பு வந்த பிறகு தான் காலி செய்வேன் என்றும் சொல்லி பிரச்சினை செய்துள்ளனர். 

 

Nagendra Prasad : 'வீட்டை கொடுத்து ஏமாந்துவிட்டேன்.. சினிமாக்காரன் என்பதால் கெட்ட பெயர்..' மன உளைச்சலில் பிரபுதேவா தம்பி!மன உளைச்சல்:

போலீசில் நாகேந்திர பிரசாத் புகார் அளித்தும் வீட்டில் குடி இருப்பவர்கள் பேச்சுவார்த்தைக்கு வராமல் எங்கேயோ எஸ்கேப்பாகி விடுவார்களாம். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இப்படி நடந்து வந்ததால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான நாகேந்திர பிரசாத் வீட்டில் குடி இருப்பவர்களை பேச்சுவார்த்தைக்கு வர வைக்க வேண்டும் என்பதற்காக வீட்டை வெல்டிங் வைத்து பூட்டியுள்ளார். ஆனால் வீட்டில் வசிப்பவர் வளர்க்கும் நாய் வீட்டில் இருப்பது தெரியாமல் வீட்டை பூட்டியது தெரிய வர பின்னர் அதை ரிமூவ் செய்துள்ளார் நாகேந்திர பிரசாத். 

தன்னுடைய பிரச்சினையை நினைத்து மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறார் நாகேந்திர பிரசாத். உண்மையிலேயே எஸ்.டி.எஸ்.கே நிறுவனத்திடம் வீட்டில் வசிப்பவர் லீசுக்கு 25 லட்சம் பணம் செலுத்தி ஏமாந்து போனாரா அல்லது அந்த நிறுவனத்துடன் சேர்ந்து தன்னை ஏமாற்றுகிறாரா என்பது புரியாமல் குழம்பி தவிக்கிறார். 

சினிமாவில் இருப்பதால் தன்னை தான் கெட்டவர் என இந்த சமூகம் பார்ப்பதாகவும் இதனால் தன்னுடைய குடும்பம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். வீட்டையும் இழந்து கெட்ட பெயரையும் பெற்று மிகுந்த மனவேதனையுடன் இந்த தகவல்களை தெரிவித்துள்ளார் நாகேந்திர பிரசாத். 

தலைப்பு செய்திகள்

Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Yamaha R2 Price Features: யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
Sierra Vs Seltos Diesel AT: டாடா சியராவா.? கியா செல்டோஸா.? டீசல் ஆட்டோமேட்டிக் பதிப்பில் Performance கிங் யார்.? இதோ ஒப்பீடு
டாடா சியராவா.? கியா செல்டோஸா.? டீசல் ஆட்டோமேட்டிக் பதிப்பில் Performance கிங் யார்.? இதோ ஒப்பீடு
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
Embed widget