மேலும் அறிய

Manirathnam birthday : தமிழ் சினிமாவில் ஒரு முன்னோடி.. சினிமாவின் செல்வன் மணிரத்னத்துக்கு பிறந்தநாள்..

இயக்குனர் மணிரத்னத்தின் 67-வது பிறந்தநாள் இன்று.. தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனித்த அடையாளத்தைக் கொண்டவர் மனிரத்னம்.

பிரெஞ்சு  திரைப்பட இயக்குனர் கோதார் தனது 91 வயதில் மரணிக்கும் வரை படங்களை இயக்கி வந்தார்..தற்போது மார்ட்டின் ஸ்கார்சிஸ் தனது 80 வயதில் இயக்கியிருக்கும் படம் சர்வதேச கான் திரைப்பட விழாவில் பாராட்டுக்களை குவித்தது. இதனைத் தொடர்ந்து அடுத்ததாக இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையை படமாக எடுக்கவிருக்கிறாராம். ஏன் தமிழ் சினிமாவில் ஒரு குறிப்பிட்ட வயதிற்குமேல் நடிகர்கள் மட்டுமில்லை இயக்குநர்களும் கூட மறைந்துவிடுகிறார்கள் என யோசித்து பார்த்திருக்கிறீர்களா?

சினிமாவின் மேல் தீராத காதல் கொண்டிருந்த இயக்குநர் பாலுமகேந்திரா தனது இறுதிகாலத்தில் தனக்கு பிடித்த மாதிரி வெறும் இரண்டு படங்களை மட்டுமே தன்னால் எடுக்க முடிந்ததாக தொடர்ந்து சொல்லிவந்தார். இயக்குனர் மகேந்திரன் தனது இறுதிகாலங்களில் சொல்லிக்கொள்ளும்படி எந்த படமும் எடுக்கவில்லை. இயக்குநர்  பாரதிராஜா தற்போது மாடர்ன் லவ் சீரிஸில் ஒரு படம் எடுத்திருக்கிறார்.

மணிரத்னம்

 கலைஞர்கள் எத்தனை நல்ல படைப்புகளை எடுத்தாலும்  எல்லா காலத்திலும் ஏற்புடையவர்களாக இருப்பது கடினம். அந்த வகையில்  எல்லா காலத்து ரசிகர்களுக்கும் முக்கியமான இயக்குனராக இருந்து வருபவர் மணிரத்னம். தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு  தனி அழகியலை திரைப்படங்களில் உருவாக்கியவர் மனிரத்னம். இந்தியத் திரைப்படங்களின் மிகப்பெரிய அங்கமான பாடல்கள், நாடகீய காட்சிகளை பண்பாட்டு நீட்சியாக கடத்தி வருபவர் . மணிரத்னத்தை ஒரு க்ளாசிக் இயக்குநர் என்று ஏன் சொல்கிறார்கள், எதன் காரணத்தினால் மற்ற இயக்குனர்களிடமிருந்து அவர் வேறுபடுகிறார் என்பதற்கு சில உதாரணங்கள்

கதைச்சூழல்

மணிரத்னம் எடுக்கும் ஒவ்வொரு காட்சிகளும் ஏன் இந்த அளவிற்கு பாராட்டப்படுகின்றன என்றால் கதைகளில் சூழலுக்கு அவர் கொடுக்கும் முக்கியத்துவம். எந்தப் படத்திலும் காரணமில்லாமல் அல்லது ஆடம்பரத்திற்காக ஒரு லோகேஷனைத் தேர்வு செய்ததில்லை மணிரத்னம்.

வசனங்கள்

இன்று ஒருவர் சற்று குரலைத் தாழ்த்திப் பேசினால் என்ன மணிரத்னம் கேரக்டர் மாதிரி பேச ட்ரை பன்றியா? என்று நம்மை கேட்கும் அளவிற்கு மணிரத்னத்தின் வசனங்கள் தமிழ் சினிமா ரசிகர்களிடம் தாக்கம் ஏற்படுத்தி இருக்கிறது. மனிதர்கள் உணர்ச்சிவசப்படும் போது  மிக சத்தமாக உரத்து பேசுவது தானே வழக்கம் ஆனால் ஏன் கடும் துயரத்தில் அல்லது கோபத்தில் இருக்கும்போது மணிரத்னத்தின் கதாபாத்திரங்கள் குரலை தாழ்த்தி பேசுகிறார்கள். இந்த கதாபாத்திரங்கள் தங்களது உணர்வுகளை கட்டுப்படுத்த முயற்சிக்கிறார்கள். உடைந்து சிதறிவிடக்கூடாது என்பதற்காக தங்களது  குரலை தாழ்த்திக்கொள்கிறார்கள் . இந்த அழகியல் கூறினை மணிரத்னத்தின் பல படங்களில் நாம் காணலாம்.

பாடல் காட்சிகள்

மற்ற மொழிப் படங்களைக் காட்டிலும் இந்திய சினிமாவிற்கு பெரிய சாதகமான அதே நேரத்தில் பாதகமான ஒரு அம்சம் என்றால் பாடல்தான். சாதகமான அம்சத்தை மட்டும் இங்கு பேசலாம். ஒரு கதையின் உணர்வை கவித்துவமான நடையில் சொல்வதற்கு பாடல்களை சரியாக பயன்படுத்துவது அவசியம். அதனை மிகச் சரியான வகையில் செய்தவர் மனிரத்னம். கவித்துவம் என்பது எந்த ஒரு கலை  வடிவத்திற்கும் மிக அவசியமானது. திரைப்படங்களில் கவித்துவத்தை உருவாக்கியவர் மனிரத்னம்.

இன்று தனது 67 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் மனிரத்னம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தான் ஒரு முன்னோடி என்பதை நிரூபித்துள்ளார். அவர் மேலும் நிறையப் படங்களை இயக்க வேண்டும். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மணிரத்னம்.

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே படத்தின் ஒரு டிக்கெட் ரூ.4,000! அதிர்ச்சியில் ரசிகர்கள்
அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே படத்தின் ஒரு டிக்கெட் ரூ.4,000! அதிர்ச்சியில் ரசிகர்கள்
திருநெல்வேலியில் த்ரிஷா நற்பணி இயக்கம் தொடக்கம்...விஜயுடன் இணைந்து போட்டியிட விருப்பம்
திருநெல்வேலியில் த்ரிஷா நற்பணி இயக்கம் தொடக்கம்...விஜயுடன் இணைந்து போட்டியிட விருப்பம்
இயக்குநர் நெல்சனின் தந்தை யார் தெரியுமா?சீரியல் நடிகர் வின்சண்ட் ராய் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்
இயக்குநர் நெல்சனின் தந்தை யார் தெரியுமா?சீரியல் நடிகர் வின்சண்ட் ராய் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்
அர்ஜூன் மகள் ஐஸ்வர்யா பற்றி அவதூறு பேச்சு! பயில்வான் ரங்கநாதனிடம் சைபர் கிரைம் போலீஸ் விசாரணை
அர்ஜூன் மகள் ஐஸ்வர்யா பற்றி அவதூறு பேச்சு! பயில்வான் ரங்கநாதனிடம் சைபர் கிரைம் போலீஸ் விசாரணை

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சர்ச்சைக்கு பின் மீண்டும் தேடிவந்த தலைமைப்பதவி - Nvidia தலைவர், சி.இ.ஓவாக ஜென்சன் ஹுவாங் மீண்டும் நியமனம்!
சர்ச்சைக்கு பின் மீண்டும் தேடிவந்த தலைமைப்பதவி - Nvidia தலைவர், சி.இ.ஓவாக ஜென்சன் ஹுவாங் மீண்டும் நியமனம்!
ஐயப்ப பக்தர்களுக்கு முக்கிய எச்சரிக்கை! பம்பையில் ஆடைகளை வீசினால் கடும் நடவடிக்கை!
ஐயப்ப பக்தர்களுக்கு முக்கிய எச்சரிக்கை! பம்பையில் ஆடைகளை வீசினால் கடும் நடவடிக்கை!
Tamilnadu Power Cut: தமிழகத்தில் நாளை (24-11-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது ? - மின் வாரியம் வெளியிட்ட முழு லிஸ்ட்
தமிழகத்தில் நாளை (24-11-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது ? - மின் வாரியம் வெளியிட்ட முழு லிஸ்ட்
”சாதி சீன்களால் பல பிரச்சனைகள்” கமலுக்கு எதிராக மாபெரும் ஆர்ப்பாட்டம் - போலீஸ் அனுமதி வழங்குமா?
”சாதி சீன்களால் பல பிரச்சனைகள்” கமலுக்கு எதிராக மாபெரும் ஆர்ப்பாட்டம் - போலீஸ் அனுமதி வழங்குமா?
சபரிமலையில் அதிர்ச்சி! கடந்த ஆண்டை விட அரவணை விற்பனை கடும் சரிவு!
சபரிமலையில் அதிர்ச்சி! கடந்த ஆண்டை விட அரவணை விற்பனை கடும் சரிவு!
இரவு 10 மணிவரை பொளக்கப்போகும் மழை! - நாளை எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை?
இரவு 10 மணிவரை பொளக்கப்போகும் மழை! - நாளை எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை?
திருநெல்வேலியில் த்ரிஷா நற்பணி இயக்கம் தொடக்கம்...விஜயுடன் இணைந்து போட்டியிட விருப்பம்
திருநெல்வேலியில் த்ரிஷா நற்பணி இயக்கம் தொடக்கம்...விஜயுடன் இணைந்து போட்டியிட விருப்பம்
திருப்பரங்குன்றம் மலைத்தூணில் தீபம் ஏற்றப்படுமா? - பாதுகாப்பு பணிகள் தீவிரம்!
திருப்பரங்குன்றம் மலைத்தூணில் தீபம் ஏற்றப்படுமா? - பாதுகாப்பு பணிகள் தீவிரம்!
Embed widget