மேலும் அறிய

Ponniyin Selvan 2 Trailer: முரசுகள் கொட்ட.. சோழ தேசம் குளிர.. 29-ந் தேதி ரிலீசாகிறது பொன்னியின் செல்வன் 2 ட்ரெயிலர்..!

பொன்னியின் செல்வன் படத்தின் 2ம் பாகத்தின் ட்ரெயிலர் வரும் 29-ந் தேதி ரிலீசாகிறது.

Ponniyin Selvan 2 Trailer: பொன்னியின் செல்வன் ஏப்ரல் 28-ந் தேதி வெளியாக உள்ள நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் 2ம் பாகத்தின் ட்ரெயிலர் வரும் 29-ந் தேதி ரிலீசாக உள்ளது.

கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவலை அடிப்படையாகக் கொண்டு கடந்த ஆண்டு வெளியாகி தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்த படம் தான்‘பொன்னியின் செல்வன்’.

பொன்னியின் செல்வன் 2

பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாக உள்ளது. இதற்கான அப்டேட்கள் வந்துக் கொண்டே இருக்கும் நிலையில், தற்போது ட்ரெய்லர் தேதியை படக் குழு அறிவித்துள்ளது. 

சமீபத்தில் பொன்னியின் செல்வன் 2 படத்தில் இடம்பெற்றிருக்கும் 'அக நக’ என்ற முதல் சிங்கிள் பாடல் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. அதனை தொடர்ந்து, தற்போது  படத்தின் ட்ரெய்லர் தேதியை போஸ்டர் ஒன்று வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த ட்ரெய்லர் ஆனது 3 நிமிடங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது. தற்போது வெளியான போஸ்டர் சமூக வலைதளத்தில் லைக்ஸ்களை அள்ளி வருகிறது.

ஹிட் அடித்த முதல் பாகம்

சென்ற ஆண்டு செப்டெம்பர் மாதம் 30ஆம் தேதி பான் இந்தியா திரைப்படமாக வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் அனைத்துக் கதாபாத்திரங்களும்  ரசிகர்கள் மனங்களைக் கவர்ந்து பேசுபொருளாக மாறி சமூக வலைதளங்களை ஆக்கிரமித்தன. 

ஐஸ்வர்யா ராய்,விக்ரம், கார்த்தி,  த்ரிஷா, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா லெஷ்மி, ஷோபிதா, சரத்குமார், பார்த்திபன், பிரபு என மிகப்பெரும் நட்சத்திரப் பட்டாளமே  இந்தப் படத்தில் நடித்திருந்தனர். இந்நிலையில், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த படத்திற்கு என்று தனிப்பட்டாலமே உள்ளது.

அதேபோல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பொன்னி நதி பார்க்கணுமே, ராட்சஷ மாமனே, சோழா சோழா, தேவராளன் ஆட்டம், அலைக்கடல், சொல் என அனைத்து பாடல்களும் ஹிட் அடித்து சென்ற ஆண்டின் ஹிட் ஆல்பமாக பொன்னியின் செல்வன் உருவெடுத்தது. அதேபோல் படத்தின் பின்னணி இசையும் ரசிகர்களைக் கவர்ந்து  பாராட்டுகளைப் பெற்றது.

ரூ.500 கோடி வசூல்

ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்துக்கு இசையமைத்த நிலையில், ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்திருந்தார். ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் செய்ய, மெட்ராஸ் டாக்கீஸ் - லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரித்திருந்தது. விக்ரம்,ஐஸ்வர்யா ராய், கார்த்தி, த்ரிஷா, ஜெயம் ரவி சரத்குமார், ஐஸ்வர்யா லெஷமி, பார்த்திபன் என பெரும் நடிகர் பட்டாளமே நடித்திருந்த இப்படம் 500 கோடிகளுக்கும் மேல் வாரிக்குவித்தது. மேலும் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்திலும் வெளியாகி பொன்னியின் செல்வன் முதல் பாகம் படம் வரவேற்பைப் பெற்றது.

பொன்னியின் செல்வம் முதல் பாகத்தை போன்று இரண்டாம் பாகத்திற்கும் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். அந்த வகையில், பொன்னியின் செல்வன் 2 குறித்த பல சுவாரஸ்யத் தகவல்களும் இணையத்தில் பகிரப்பட்டு சென்ற ஆண்டைப் போலவே லைக்ஸ் அள்ளி வருகின்றன. அதன்படி தற்போது பொன்னியன் செல்வன் இரண்டாம் பாக்கத்தின் ட்ரெய்லர் ஏப்ரல் 29ஆம் தேதி வெளியாக உள்ளதாக படக் குழு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
TN Weather News: சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
TN MTC Job: தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Skoda Slavia: 8 ஸ்பீட் AT ட்ரன்ஸ்மிஷன், மசாஜ் இருக்கைகள், AI அசிஸ்ட், பெரிய ஸ்க்ரீன்கள் - புது ஸ்லாவியா எப்படி இருக்கு?
8 ஸ்பீட் AT ட்ரன்ஸ்மிஷன், மசாஜ் இருக்கைகள், AI அசிஸ்ட், பெரிய ஸ்க்ரீன்கள் - புது ஸ்லாவியா எப்படி இருக்கு?
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
Embed widget