மேலும் அறிய

PS 2 First Single: யாரது யாரது புன்னகை கோர்ப்பது... ’பொன்னியின் செல்வன் 2’ முதல் பாடல் வெளியானது!

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இளங்கோ கிருஷ்ணன் எழுதியுள்ள இந்தப் பாடலை சக்தி ஸ்ரீ கோபாலன் பாடியுள்ளார்.

பொன்னியின் செல்வன் 2 படத்தில் முதல் பாடலான ’அகநக’ பாடல் வெளியானது.

பொன்னியின் செல்வன் 2 படம் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகும் நிலையில், இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான ‘அகநக’ முழு நீளப் பாடல் இன்று வெளியாகியுள்ளது

கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை அடிப்படையாகக் கொண்டு மணிரத்னம் இயக்கத்தில் சென்ற ஆண்டு வெளியான படம் ‘பொன்னியின் செல்வன்’ 

2 பாகங்களாக பொன்னியின் செல்வன் படம் உருவாகியுள்ள நிலையில், முதல் பாகம் சென்ற ஆண்டு செப்டெம்பர் 30ஆம் தேதி வெளியாகி 500 கோடி வசூலை வார்க் குவித்து பெரும் வெற்றி பெற்றது.

பொன்னியின் செல்வன் மேக் அப், காலண்டர் என படத்தின் ஒரு ஒரு கதாபாத்திரமும் ரசிகர்கள் மத்தியில் ஆழப் பதிந்து பேசுபொருளாக மாறி இணையத்தை இப்படம் குறித்த தகவல்கள் ஆக்கிரமித்தன.

விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, கார்த்தி, ஜெயம் ரவி எனப் பெரும் நட்சத்திரப் பட்டாளமே  இந்தப் படத்தில் நடித்திருந்த நிலையில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரிடமும் இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

மேலும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் இந்தப் படத்தின் ஒவ்வொரு பாடலும் ஹிட் அடித்து சென்ற ஆண்டு ரசிகர்களின் ஃபேவரைட் ஆல்பமான பொன்னியின் செல்வன் மாறிப்போனது.

பாடல்கள் தாண்டி ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஒரு ஒரு கதாபாத்திரத்துகென கம்போஸ் செய்யப்பட்ட பிஜிஎம்களும் படத்தின் பின்னணி இசையும் பெரும் பாராட்டுகளைப் பெற்றது.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெற்றி பெற்ற சூட்டோடு சூடாக இரண்டாம் பாகம் சம்மர் ஸ்பெஷலாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

இரண்டாம் பாகம் ஏற்கெனவே படமாக்கப்பட்டு விட்ட நிலையில், முதல் பாக வெற்றிக்குப் பிறகு படத்தின் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் துரிதகதியில் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

இந்நிலையில் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி படம் வெளியாக உள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்டதுடன் முதல் பாடல் இன்று வெளியாகும் எனவும் கூறப்பட்டது.

பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் இடம்பெற்ற 'அகநக' பாடல் ஏற்கெனவே சூப்பர் ஹிட் அடித்த நிலையில், இதன் முழுநீள பாடலாக இந்தப் பாடல் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.

 

அதன்படி இந்தப் பாடல் தற்போது பெரும் எதிர்ப்பார்ப்புகளுக்கிடையே வெளியாகியுள்ளது. இளங்கோ கிருஷ்ணன் எழுதியுள்ள இந்தப் பாடலை சக்தி ஸ்ரீ கோபாலன் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

’பொன்னியின் செல்வன் 2’ படத்தில் மொத்தம் மூன்று  பாடல்கள் இடம்பெற்றிருக்கும் என முன்னதாகத் தகவல்கள் வெளியான நிலையில் தற்போது இந்தப் பாடல் வெளியாகி ரசிகர்களை ஈர்த்து, இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
TN Budget 2026: தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
TN Budget 2026 : ‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் விஜயின் வாக்குறுதிகள் என்னென்ன இடம்பெறவில்லை..?
‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் இடம்பெறாத தவெக வாக்குறுதிகள்..!
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: குடிநீர், மழைநீர், போக்குவரத்து..! சென்னையின் வளர்ச்சி & மேம்பாட்டிற்கான பட்ஜெட் அறிவிப்புகள்
குடிநீர், மழைநீர், போக்குவரத்து..! சென்னையின் வளர்ச்சி & மேம்பாட்டிற்கான பட்ஜெட் அறிவிப்புகள்
Tamil Nadu Budget 2026 Highlights: தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026: நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
Embed widget