மேலும் அறிய

PS 2 Audio Launch: விரைவில் பொன்னியின் செல்வன் 2 இசை வெளியீட்டு விழா.. மீண்டும் முழுவீச்சில் களமிறங்கும் படக்குழு!

இந்தப் படத்தில் மூன்று பாடல்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பொன்னியின் செல்வன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் கல்கியின் ’பொன்னியின் செல்வன்’ நாவலை அடிப்படையாகக் கொண்டு வெளியாகி உலகம் முழுவதும் உள்ள தமிழ் ரசிகர்களைக் கவர்ந்து மெகா ஹிட் அடித்த படம் ’பொன்னியின் செல்வன்’. 

கோலிவுட்டில் எம்.ஜி.ஆர் தொடங்கி 50 ஆண்டுகளுக்கும் மேலாக பொன்னியின் செல்வனை படமாக்க பலரும் முயன்று தோற்ற நிலையில், மணிரத்னம் தன் கனவை சென்ற ஆண்டு நனவாக்கினார்.

தமிழ்,தெலுங்கு,இந்தி, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியான இந்தப் படம் சென்ற ஆண்டு தமிழில் மிகப்பெரும் வெற்றிப் படமாக அமைந்தது.

பெரும் பொருட்செலவில் லைகா நிறுவனம் இந்தப் படத்தை  தயாரித்த நிலையில்,   இப்படத்தின் பிரம்மாண்ட காட்சிகள், நட்சத்திரப் பட்டாளம் என அனைத்தும் ஹிட் அடித்து குழந்தைகள்,பெரியவர்கள் என அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து படம் ஹிட் அடித்தது.

கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி,  ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பார்த்திபன், சரத்குமார், ஐஸ்வர்யா லட்சுமி என மிகப்பெரும் நட்சத்திரப் பட்டாளமே திரையை ஆக்கிரமித்த நிலையில், 450 கோடிகளுக்கும் மேல் வசூலித்து சென்ற ஆண்டின் பிளாக்பஸ்டர் படமாக உருவெடுத்தது.

இந்நிலையில், இந்த ஆண்டு பொன்னியின் செல்வன் 2 வெளியாகும் என படம் வெற்றி பெற்ற சூட்டோடு சூடாக அறிவிப்பு வெளியான நிலையில், பொன்னியின் செல்வன் 2வை எதிர்பார்த்து கோலிவுட் ரசிகர்கள் காத்துள்ளனர்.

பொன்னியின் செல்வன் 2 ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக அறிவிப்பு வந்த நிலையில், இரண்டாம் பாகத்தின் இசை வெளியீட்டு விழா, ட்ரெய்லர் வெளியீடு எப்போது என ஒட்டுமொத்த கோலிவுட் ரசிகர்களும் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் ஒவ்வொரு பாடலும் பெருமளவு கேட்டு ரசித்து கொண்டாடப்பட்ட நிலையில், தற்போது இந்நிலையில் தற்போது பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் பாடல்களுக்கும் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

அதேபோல் பொன்னியின் செல்வன் முதல் பாகத்துக்கு கதாபாத்திர அறிமுகம் தொடங்கி, டீசர் வெளியீட்டு விழா, இசை வெளியீட்டு விழா என ஒவ்வொரு அப்டேட்டும் மிக பிரம்மாண்டமான முறையில் வழங்கப்பட்டு ரசிகர்களை மகிழ்வித்தது.

இந்நிலையில், பொன்னியின் செல்வன் 2 இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி, வரும் ஏப்ரல் 5ஆம் தேதி இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமான முறையில் நடைபெறும் என்றும், இந்தப் படத்தில் மூன்று பாடல்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

முதல் பாகம் அருண்மொழிவர்மனான ஜெயம் ரவி, வந்தியத்தேவன் கார்த்தி இருவரும் கடலில் மூழ்கும் வகையிலும், ஊமை ராணி அவர்களை காப்பாற்ற வரும் வகையிலும் முடிந்த நிலையில், இரண்டாம் பாகத்தில் நாவலின் இறுதி மூன்று பாகங்களின் கதை இடம்பெறும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் ஐஸ்வர்யா ராய் பச்சனின் மாமனாரும் பாலிவுட் சூப்பர் ஸ்டாருமான அமிதாப் பச்சன் வருகை தரலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. பொன்னியின் செல்வன் 2 படம் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

Vishal:
Vishal: "உதயநிதி பேசுனாருனு உள்ளே வச்சாங்க.. வெளிய நிறைய பேரு அப்படி இருக்காங்க.." நடிகர் விஷால் பேச்சு
Vishal:
Vishal: "2031ல் மாற்றம் வரலாம்.." அரசியல் என்ட்ரியை மறைமுகமாக அறிவித்தார் விஷால்
Suriya:
Suriya: "20 வயது இடைவெளி மனப்போராட்டமே விஸ்வநாத் அன் சன்ஸ்.." மனம் திறந்த நடிகர் சூர்யா
Karthigai Deepam: ரேவதிக்கு தெரிந்த உண்மை.. அதிர்ச்சியில் உறைந்த சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ரேவதிக்கு தெரிந்த உண்மை.. அதிர்ச்சியில் உறைந்த சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
New Bajaj Pulsar 150: போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
EV Subsidy: அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
Embed widget