மேலும் அறிய

பவிஷ் நாராயணின் நடித்துள்ள 'லவ் ஓ லவ்’ டீசர் வெளியீட்டு விழா!

மகேஷ் ராஜேந்திரன் இயக்கத்தில் பவிஷ் நாராயணன் நடித்துள்ள லவ் ஓ லவ் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது

காதல் நகைச்சுவை திரைப்படங்களுக்கு தமிழ் சினிமாவில் எப்போதும் தனி ரசிகர் பட்டாளம் உண்டு. வயது வித்தியாசமின்றி அனைத்து தரப்பினரையும் கவரும் இந்த வகை படங்கள், சமீப காலங்களில் தொடர்ந்து வெற்றிப் படங்களாக உருவெடுத்து வருகின்றன. அந்த வரிசையில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள புதிய திரைப்படம் ‘லவ் ஓ லவ்’. ஜினிமா மீடியா அண்ட் என்டர்டெயின்மென்ட் லிமிடெட் சார்பில் தினேஷ் ராஜ் மற்றும் கிரியேட்டிவ் என்டர்டெய்னர்ஸ் & டிஸ்ட்ரிப்யூட்டர்ஸ் சார்பில் ஜி. தனஞ்ஜெயன் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை மகேஷ் ராஜேந்திரன் எழுதி இயக்கியுள்ளார்.

இன்று நடைபெற்ற இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் சுப்பிரமணிய சிவா, நடிகர் தர்ஷன் மற்றும் நடிகர் கேபிஒய் பாலா ஆகியோர் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.

இப்படத்தில் பவிஷ் நாராயண், நாகா துர்கா, இயக்குநர் செல்வராகவன், இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார், வனிதா விஜயகுமார், ரம்யா, ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இன்று வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. வெறும் 80 வினாடிகளில் காதல், நகைச்சுவை, இளமைத் துள்ளல் மற்றும் சுவாரஸ்யமான சம்பவங்களின் கலவையை அழகாக பதிவு செய்திருக்கும் இந்த டீசர், சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
உறவுகள் மீது அதிக ஈடுபாடு கொண்ட ஒரு இளைஞனின் வாழ்க்கையில் நிகழும் எதிர்பாராத திருப்பங்களையும், அதனால் உருவாகும் நகைச்சுவை மற்றும் உணர்ச்சிகரமான தருணங்களையும் படத்தின் டீசர் சுவாரஸ்யமாக வெளிப்படுத்துகிறது. மேலும், ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் வழங்கப்பட்டுள்ள தனித்துவமான அறிமுகம் டீசரின் பலமாக அமைந்துள்ளது.
குறிப்பாக இயக்குநர் செல்வராகவன் ஏற்றுள்ள நகைச்சுவை கலந்த கதாபாத்திரம் ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது. அவரது இயல்பான நடிப்பும், வித்தியாசமான திரைப்பிரசன்னமும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.
சென்னை நகரின் பல்வேறு அழகிய இடங்களில் பெரும்பாலும் படமாக்கப்பட்டுள்ள இப்படம், நகர்ப்புற காதல் கதைக்கு ஏற்ற தனித்துவமான காட்சியமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் சில முக்கிய காட்சிகள் ஊட்டியிலும் படமாக்கப்பட்டுள்ளன. படம் வெளியாகும் முன்பே அதன் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை அமேசான் பிரைம் வீடியோ நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. படத்தின் உள்ளடக்கம் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களில் நம்பிக்கை கொண்டு இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், இசைத்துறையின் முன்னணி நிறுவனமான திங்க் மியூசிக் இப்படத்தின் இசை வெளியீட்டு நிறுவனமாக இணைந்துள்ளது. ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற பவிஷ் நாராயண், தமிழில் அறிமுகமாகும் பிரபல தெலுங்கு யூடியூப் நட்சத்திரமான நாகா துர்காவுடன் ஜோடி சேர்ந்துள்ளார்.

படத்திற்கு இசையமைத்திருப்பவர்கள் வடசென்னையைச் சேர்ந்த இளம் இசையமைப்பாளர் ஜோடியான FOXn (பிரதீப் பி.ஜே. – வேய்ன் பேவி). இவர்களின் இசையில் உருவான பாடல்கள் விரைவில் வெளியாக உள்ளன. ஒளிப்பதிவாளர் பி.ஜி. முத்தையா, தேசிய விருது பெற்ற படத்தொகுப்பாளர் என்.பி. ஸ்ரீகாந்த், கலை இயக்குநர் பா. மகேந்திரன் ஆகியோர் இடம்பெற்றுள்ள தொழில்நுட்பக் குழுவும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது. இறுதிக்கட்ட பின்னணிப் பணிகளில் இருக்கும் ‘லவ் ஓ லவ்’, ஜூலை 2026-ல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இளைய தலைமுறையின் காதல், உறவுகள் மற்றும் வாழ்க்கையை நகைச்சுவையுடன் சொல்லும் இந்த திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் என்ற நம்பிக்கையில் படக்குழு உள்ளது.

 

Advertisement

தலைப்பு செய்திகள்

Bigg Boss Commonman: சாமானியன் என்றால் கேவலமா? பிக்பாசை கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்கள்!
Bigg Boss Commonman: சாமானியன் என்றால் கேவலமா? பிக்பாசை கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்கள்!
Ajithkumar: நண்பன் விஜய்க்காக கட்டப்பாவை கழட்டிவிட்டாரா டேர்டெவில் அஜித்?
Ajithkumar: நண்பன் விஜய்க்காக கட்டப்பாவை கழட்டிவிட்டாரா டேர்டெவில் அஜித்?
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
"செம மாஸ் படம்!" - 'DC' படத்தை தலையில் தூக்கி வைத்துக்கொண்ட தெலுங்கு சூப்பர் ஸ்டார்கள் - யார் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
டாடா கர்வ், மஹிந்திரா BE 6e, க்ரெட்டா EV: டாப் எலெக்ட்ரிக் எஸ்யுவி எது? முழு ஒப்பீடு!
டாடா கர்வ், மஹிந்திரா BE 6e, க்ரெட்டா EV: டாப் எலெக்ட்ரிக் எஸ்யுவி எது? முழு ஒப்பீடு!
Embed widget