Pavani Reddy: 2 வது கல்யாணம் பண்ணுவீங்களா... ப்ளீஸ்.. லைவ்வில் எமோஷனல் ஆன பாவனி ரெட்டி..
அப்போது ராஜூ நேர்காணலில் உங்களை பற்றி நெகட்டிவ்வாக பேசியிருக்கிறாரே என்று கேட்ட போது, அவர் என்ன பேசியிருக்கிறார் என்று எனக்கு தெரிய வில்லை.
பிக்பாஸ் பிரபலம் பாவனி தனது லைவ் நிகழ்ச்சியில் ரசிகர் ஒருவர் 2வது திருமணம் செய்துகொள்வீர்களா என்று கேட்ட கேள்விக்கு எமோஷனலாக பதிலளித்துள்ளார்.
லைவ்வில் அவர் பேசியதாவது, “ நான் ஹைதாராபாத்தில் இருக்கிறேன். பிக்பாஸ் வீட்டிற்கு சென்றதால் இந்த உலகத்தை எப்படி எதிர்கொள்ளணும் போன்ற விஷயங்களை நிறையவே கற்றுக்கொண்டேன்.
பிரியங்கா பற்றி..?
பிரியங்காவிற்கு சோறுதான் முக்கியம். எப்போது சாப்ட்டுக்கிட்டே இருப்பார். நிரூப் ஒரு ஹேன்சம் ஹங்க். அவன் ஒரு குழந்தை. கேம் விளையாடுறதுக்காக அவன் பக்காவா ப்ளான் பண்ணுவான்.
அப்போது ராஜூ நேர்காணலில் உங்களை பற்றி நெகட்டிவ்வாக பேசியிருக்கிறாரே என்று கேட்ட போது, அவர் என்ன பேசியிருக்கிறார் என்று எனக்கு தெரிய வில்லை. ஆனால், பொதுவாக நான் எதிர்மறையான விமர்சனங்களை பெரிதாக கண்டு கொள்வதில்லை. அப்படி அவர் சொல்லியிருக்கிறார் என்றால் அந்த அளவு, அவரது வாழ்கையில் எனக்கு முக்கியத்துவதும் கொடுத்திருக்கிறார். அதற்கு அவருக்கு எனது நன்றி. ஆனால் ராஜூ ஒரு நல்ல ஸ்டோரி டெல்லர். பக்கா ஜென்டில் மேன்.
மறுபடியும் மேரேஜ் பண்ற ஐடியா இருக்கா?
ப்ளிஸ் வேணாம்.. இனி கரியர் மேல கவனம் செலுத்தலாம்.
View this post on Instagram
பாவனி ரெட்டி, விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னத்தம்பி சீரியலில் கதாநாயகியாக நடித்ததின் மூலம் பிரபலமானார். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு பிரதீப் என்ற நடிகரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் எதிர்பாராத விதமாக பிரதீப் தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து ஒரு சிறிய இடைவெளி எடுத்துக்கொண்ட பாவனி தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றதன் மூலம் லைம் லைட்டுக்கு வந்திருக்கிறார்.
முந்தைய லைவ் வீடியோ சுட்டி கீழே: -
View this post on Instagram