மேலும் அறிய

Pattathu Arasan Trailer: 'பட்டத்து அரசன்' டிரெய்லர் ரிலீஸ்...! ராஜ்கிரண், அதர்வா ஆடும் கபடி எப்படி இருக்கு...?

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் சற்குணம் இயக்கத்தில் நடிகர் ராஜ்கிரண், அதர்வா முரளி நடித்துள்ள 'பட்டத்து அரசன்' படத்தின் டிரெய்லர் வெளியானது

களவாணி, வாகை சூடவா, சண்டி வீரன் என கிராமத்து பின்னணியில் பல ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் நடிகர் ராஜ்கிரண் மற்றும் நடிகர் அதர்வா முரளி முக்கிய கதாபாத்திரத்தில்  நடித்துள்ள திரைப்படம் 'பட்டத்து அரசன்'. லைகா நிறுவனத்தின் சார்பில் கே.சுபாஸ்கரன் தயாரிப்பில் மிகவும் பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரெய்லரை தற்போது வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர்.

 

Pattathu Arasan Trailer: 'பட்டத்து அரசன்' டிரெய்லர் ரிலீஸ்...! ராஜ்கிரண், அதர்வா ஆடும் கபடி எப்படி இருக்கு...?

கபடியை மையமாக வைத்து ஒரு படம் : 

நமது தமிழ்நாட்டின் விளையாட்டான கபடியை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் 'பட்டத்து அரசன்'. ஒரு ஊரை எதிர்த்து ஒரு குடும்பமே கபடி விளையாடுவது தான் இப்படத்தின் மையக்கரு. தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நடைபெற்ற ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

கபடி விளையாட்டோடு சேர்த்து காதல், சென்டிமென்ட், ஆக்ஷன் என ஒரு கலவையாக ஒரு முழுநீள எண்டர்டெயின்மெண்ட் திரைப்படமாக உருவாகியுள்ளது. நடிகர் அதர்வா முரளி ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார் கன்னட திரையுலகின் முன்னணி நடிகையான ஆஷிகா ரங்கநாத். நடிகை ராதிகா சரத்குமார், நடிகர் ஜெயபிரகாஷ், ஆர்.கே.சுரேஷ், சிங்கம்புலி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியுள்ளது. 

 

 

ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் :
 
லோகநாதன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் 'யாரோ யாரோ...' ஃபர்ஸ்ட் சிங்கிள் லிரிகள் பாடலும் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. ஒரு குடும்பம் சார்த்த திரைக்கதை என்பதால் இப்படம் அனைத்து வயதினரையும் கவரும் குடும்ப திரைப்படமாக இருக்கும். அதனை தொடர்ந்து பட்டத்து அரசன் படத்தின் டிரெய்லரும் வெளியாகியுள்ளதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு உச்சத்தை அடைந்துள்ளது. படத்தின் பணிகள் முழுவதும் முடிவடைந்த நிலையில் நவம்பர் 25ம் உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 

 

 

அதர்வா முரளி நடிப்பில் சமீபத்தில் வெளியான குருதி ஆட்டம் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதே சமயம் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ராஜ்கிரண். வழக்கம் போல தனது மண்வாசனை கலந்த நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். பட்டத்து அரசன் திரைப்படத்திலும் ஒரு கம்பீரமாக நடித்துள்ள ராஜ்கிரண் நடிப்பு வரவேற்பை பெரும். அவருடன் இணைந்து மிக சிறப்பாக நடித்துள்ளார் அதர்வா முரளி. அதர்வா முரளியின் திரைவாழ்வில் இப்படம் ஒரு திருப்புமுனையாக அமையும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு. 

தலைப்பு செய்திகள்

நூலிழையில் நெருப்பில் இருந்து தப்பிய சிவராஜ்குமார்.. உயிர் போய் உயிர் வந்த ரசிகர்கள்! நடந்தது என்ன?
நூலிழையில் நெருப்பில் இருந்து தப்பிய சிவராஜ்குமார்.. உயிர் போய் உயிர் வந்த ரசிகர்கள்! நடந்தது என்ன?
ஜெயிலர் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
ஜெயிலர் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
"எனக்கு தூக்கமே வரல.." பதற்றத்தின் உச்சிக்கே சென்ற நடிகர் மணிகண்டன்! எதற்காக தெரியுமா?
15 நிமிடங்கள் மூச்சை அடக்கிய வித்யுத் ஜம்வால்.. வைரலாகும் வீடியோ
15 நிமிடங்கள் மூச்சை அடக்கிய வித்யுத் ஜம்வால்.. வைரலாகும் வீடியோ

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
TN By Election 2026: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Toyota Glanza on EMI: டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
Durimurugan: துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
Embed widget