மேலும் அறிய

Pathu Thala First Single: “பத்து தல” படத்தின் முதல் பாடல் ரிலீஸ் .. வெளியாகும் நேரத்தை அறிவித்த ஏ.ஆர்.ரஹ்மான்..!

சிம்புவின் பிறந்த நாள் பிப்ரவரி 3 ஆம் தேதி வருகிறது. இதனை முன்னிட்டு பத்து தல படத்தின் முதல் பாடலாக ”நம்ம சத்தம்” என தொடங்கும் பாடல் வெளியாகும் என நேற்று வெளியான அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது.

நடிகர் சிலம்பரசன் நடித்துள்ள பத்து தல படத்தின் முதல் பாடல் வெளியாகும் நேரத்தை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அறிவித்துள்ளார். 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள சிலம்பரசன் தற்போது பத்து தல படத்தில் நடித்து வருகிறார். சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய கிருஷ்ணா இப்படத்தை இயக்குகிறார். இந்த படம் கன்னட படமான மஃப்டியின் ரீமேக் ஆகும். மேலும் இந்த படத்தில் கௌதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர் ஆகியோர் நடிக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஏற்கனவே இப்படம் கடந்த டிசம்பர் 14 அன்று வெளியாகும் என ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தெரிவித்த நிலையில் மார்ச் மாதம் 30 ஆம் தேதிக்கு ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது. 

View this post on Instagram
 
A post shared by Studio Green (@studiogreen_official)

இதனிடையே சிம்புவின் பிறந்த நாள் பிப்ரவரி 3 ஆம் தேதி வருகிறது. இதனை முன்னிட்டு பத்து தல படத்தின் முதல் பாடலாக ”நம்ம சத்தம்” என தொடங்கும் பாடல் வெளியாகும் என நேற்று வெளியான அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது. பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ள இந்த பாடலை இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் பாடியுள்ளார்.  ஆனால் பாடல் வெளியாகும் நேரம் தெரிவிக்கப்படாததால் ரசிகர்கள் குழப்பமடைந்தனர். 

இந்நிலையில் தற்போது இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில், பத்து தல படத்தின் முதல் பாடலான ”நம்ம சத்தம்” என தொடங்கும் பாடல் பிப்ரவரி 3 ஆம் தேதி நண்பகல் 12.06 மணிக்கு வெளியாகும் என தெரிவித்துள்ளார். இதனால் சிம்பு ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

கம்பேக் கொடுத்த சிம்பு 

நீண்ட இடைவெளிக்குப் பின் நடிகர் சிலம்பரசன் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பரில் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு படம் வெளியானது. இதனையடுத்து, கடந்தாண்டு ஹன்சிகா முதன்மை வேடத்தில் நடித்த மஹா படத்தில் சிறப்பு தோற்றத்திலும், இதனை தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் ஹீரோவாகவும் சிம்பு நடித்திருந்தார். இதில் வெந்து தணிந்தது காடு படம் சிம்புவுக்கு சிறப்பான வெற்றியை கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

பென்ஸ் திரைப்படத்தில் இடம்பெறும் LCU கதாப்பாத்திரங்கள் - நிவின் பாலி சொன்ன சீக்ரெட்...
பென்ஸ் திரைப்படத்தில் இடம்பெறும் LCU கதாப்பாத்திரங்கள் - நிவின் பாலி சொன்ன சீக்ரெட்...
Jailer 2 : அந்த ஒரு காட்சியை நீக்க சொன்ன சென்சார் போர்ட்..முடியாது என்ற நெல்சன்..ஆர்டர் போட்டர் ரஜினி
Jailer 2 : அந்த ஒரு காட்சியை நீக்க சொன்ன சென்சார் போர்ட்..முடியாது என்ற நெல்சன்..ஆர்டர் போட்டர் ரஜினி
Karthik Subbaraj: விக்ரமுடன் மீண்டும் இணையும் கார்த்திக் சுப்பராஜ்.. இந்த முறை தியேட்டர் தான்.. அதுவும் இந்த படம் தான்!
Karthik Subbaraj: விக்ரமுடன் மீண்டும் இணையும் கார்த்திக் சுப்பராஜ்.. இந்த முறை தியேட்டர் தான்.. அதுவும் இந்த படம் தான்!
இயக்குநராக அறிமுகமாகும் ஜேசன் சஞ்சய்..அட்லீ தயாரிப்பில் விஜய் சேதுபதி..நாளை வெளியாகும் 3 படங்கள்
இயக்குநராக அறிமுகமாகும் ஜேசன் சஞ்சய்..அட்லீ தயாரிப்பில் விஜய் சேதுபதி..நாளை வெளியாகும் 3 படங்கள்

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Dharapuram By Election: என்னை கேவலமா பேசுறாங்க.. நான் எந்த தப்பும் பண்ணல.. விஜய் முன்னால் கண்ணீர் விட்ட சத்யபாமா!
Dharapuram By Election: என்னை கேவலமா பேசுறாங்க.. நான் எந்த தப்பும் பண்ணல.. விஜய் முன்னால் கண்ணீர் விட்ட சத்யபாமா!
TVK: கூட்டணி சேர்ந்து கத்தினாலும், கதறினாலும் ஒன்னும் நடக்காது.. திமுக, அதிமுகவை வெளுத்து வாங்கிய தவெக!
TVK: கூட்டணி சேர்ந்து கத்தினாலும், கதறினாலும் ஒன்னும் நடக்காது.. திமுக, அதிமுகவை வெளுத்து வாங்கிய தவெக!
TN Weather News: கனமழை பொளக்க போகுது..! இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - சென்னை? தமிழக வானிலை
கனமழை பொளக்க போகுது..! இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - சென்னை? தமிழக வானிலை
Dengue: தமிழ்நாட்டை அச்சுறுத்தும் டெங்கு.. தூங்குகிறதா சுகாதாரத்துறை? ஸ்பீட் ஏத்துங்க அருண்ராஜ் சார்!
Dengue: தமிழ்நாட்டை அச்சுறுத்தும் டெங்கு.. தூங்குகிறதா சுகாதாரத்துறை? ஸ்பீட் ஏத்துங்க அருண்ராஜ் சார்!
ஆசிய விளையாட்டு போட்டியில் ஒரே நாளில் 4 தங்க பதக்கங்கள்... புள்ளி பட்டியலில் வேகமாக முன்னேறும் இந்தியா...
ஆசிய விளையாட்டு போட்டியில் ஒரே நாளில் 4 தங்க பதக்கங்கள்... புள்ளி பட்டியலில் வேகமாக முன்னேறும் இந்தியா...
Bank Holidays: குவியும் பண்டிகைகள்..! அக்டோபர் மாதத்தில் 16 நாட்கள் வங்கிகள் இயங்காது - விடுமுறை பட்டியல் இதோ..!
குவியும் பண்டிகைகள்..! அக்டோபர் மாதத்தில் 16 நாட்கள் வங்கிகள் இயங்காது - விடுமுறை பட்டியல் இதோ..!
தவெக-விற்கு சவால் தரும் தாராபுரம்! 3 மாதங்களுக்கு முன்பு நடந்தது என்ன? என்ன செய்வார் விஜய்?
தவெக-விற்கு சவால் தரும் தாராபுரம்! 3 மாதங்களுக்கு முன்பு நடந்தது என்ன? என்ன செய்வார் விஜய்?
Skoda Price: இருக்குற 4 கார்களுக்கும் விலையையேற்றம்..! ஸ்கோடா கொடுத்த ஷாக் - எந்த மாடலுக்கு எவ்வளவு தெரியுமா?
இருக்குற 4 கார்களுக்கும் விலையையேற்றம்..! ஸ்கோடா கொடுத்த ஷாக் - எந்த மாடலுக்கு எவ்வளவு தெரியுமா?
Embed widget