மேலும் அறிய

Shah Rukh Khan Tweet: இது 57 வயது நபரின் அறிவுரை... பதான் இமாலய வெற்றிக்குப் பின் ஷாருக் ட்வீட்.. நெகிழ்ச்சியில் ரசிகர்கள்!

2017ஆம் ஆண்டு ரயீஸ் பட வெற்றிக்குப் பிறகு சரியாக ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு பதான் மூலம் வெற்றியை சுவைத்துள்ளார் ஷாருக். இரண்டே நாள்களில் இப்படம் உலகம் முழுவதும் 219.60 கோடி வசூலித்துள்ளது.

பாலிவுட்டில் பலகட்ட பிரச்னைகளைத் தாண்டி நேற்று முன் தினம் வெளியான ஷாருக்கின் பதான் படம் இந்திய சினிமா வரலாற்றில் பல பாக்ஸ் ஆஃபிஸ் ரெக்கார்ட்களை அடித்து நொறுக்கி சாதனை புரிந்து வருகிறது.

தடைகளைத் தாண்டி வந்த ஷாருக்

ஒட்டுமொத்த பாலிவுட் சினிமாவும் கடந்த 2 ஆண்டுகளாக இறங்குமுகத்தில் பயணித்த நிலையில், பாலிவுட்டின் பாட்ஷாவாகக் கொண்டாடப்படும் நடிகர் ஷாருக்கானின் படம் மூலம் பாலிவுட் தற்போது மீண்டெழுந்துள்ளதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.

2018ஆம் ஆண்டு வெளியான ’ஜீரோ’ படத்தின் வணிக ரீதியான தோல்வி ஏற்படுத்திய பாதிப்பில்,  இருந்த ஷாருக்கான்  சிறிது காலம் இடைவெளி எடுத்து படங்களை பார்த்துப் பார்த்து தேர்வு செய்து வந்தார்.

இதனிடையே 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடக்கத்தில் சொகுசு கப்பலில் போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் ஷாருக்கின் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்டது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

ஆதரவாகத் திரண்ட பாலிவுட்

நடிகர் ஷாருக்கானை பெரும் மன உளைச்சலில் இச்சம்பவம் தள்ளிய நிலையில், ஒட்டுமொத்த பாலிவுட் திரையுலகமும் அவருக்கு ஆறுதலாகவும் ஆதரவாகவும் திரண்டன.

தொடர்ந்து மும்பை சிறையில் அடைக்கப்பட்ட ஆர்யன் கான், 2022ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி இவ்வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். மேலும் ஆர்யன் கானை கைது செய்த அலுவலர் சமீர் வான்கடே தான் தற்போது என்.சி.பியில் இல்லை என்றும் இது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றும் கருத்து கூற மறுத்துவிட்டார். 

இந்நிலையில் முன்னதாக பதான் படத்துக்கு வழக்கம்போல் பாய்காட் பாலிவுட் பிரச்சினைகள் தலைத்தூக்கிய நிலையில், இப்படத்தின் பாடலில் தீபிகாவின் காவி நிற உடை எதிர்ப்புக்களை சம்பாதித்து இந்து அமைப்புகளின் கோபத்துக்கு ஆளானது.

பதான் மூலம் கம்பேக்

 

இவற்றையெல்லாம் கடந்து ஒரு வழியாக நேற்று முன் தினம் வெளியான பதான் படம் ஷாருக்கானுக்கு சிறப்பான கம் பேக் படமாக அமைந்து இரண்டே நாள்களில் உலகம் முழுவதும் 219.60 கோடி வசூலித்துள்ளது.

மேலும் நாடு முழுவதும் முதல் நாளில் 70 கோடி வசூலித்த முதல் படம் எனும் சாதனையையும் பதான் படம் படைத்துள்ளது.

ஷாருக்கின் இந்த இமாலய வெற்றியை உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்து வரும் நிலையில், தன் ரசிகர்களுக்காக க்யூட்டான மெசேஜ் ஒன்றை ஷாருக்கான் பகிர்ந்துள்ளார்.

ஆறு ஆண்டுகளுக்குப் பின் வெற்றி!

2017ஆம் ஆண்டு ரயீஸ் பட வெற்றிக்குப் பிறகு சரியாக ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு வெற்றியை சுவைத்துள்ள ஷாருக், தன் ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது:

“புறப்பட்ட இடத்துக்கு மீண்டும் திரும்ப நான் எந்த ஆற்றலையும் சேமித்து வைத்ததில்லை.

வாழ்க்கையும் அப்படித்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்...நீங்கள் திரும்பி வருவதைத் திட்டமிடத் தேவையில்லை ... முன்னோக்கி நகர்தலையே மனதில் கொள்ள வேண்டும்.  ஆரம்பித்ததை முடிக்க முயலுங்கள். இது ஒரு 57 வயது நபரின் அறிவுரை” எனக் கூறியுள்ளார்.

 

தன் ரசிகர்களுக்காக ஷாருக்கான் வழங்கியுள்ள இந்த க்யூட்டான அறிவுரை அவரது ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
TN Budget 2026: தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
TN Budget 2026 : ‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் விஜயின் வாக்குறுதிகள் என்னென்ன இடம்பெறவில்லை..?
‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் இடம்பெறாத தவெக வாக்குறுதிகள்..!
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
Trump on Iran War: “போரே வேணாம்டா சாமி, என்ன விட்டுடுங்க.!“ என்ன விலை கொடுத்தாவது ஈரானுடன் ஒப்பந்தம்; ட்ரம்ப் முனைப்பு
“போரே வேணாம்டா சாமி, என்ன விட்டுடுங்க.!“ என்ன விலை கொடுத்தாவது ஈரானுடன் ஒப்பந்தம்; ட்ரம்ப் முனைப்பு
MG Hector Hawk: 530 கிமீ ரேஞ்ச்.! மஹிந்திரா XUV 7XO-க்கு சங்கு ஊதுமா MG Hector Hawk; பிளக்-இன் ஹைப்ரிட், EV பதிப்புகளில் அறிமுகம்
530 கிமீ ரேஞ்ச்.! மஹிந்திரா XUV 7XO-க்கு சங்கு ஊதுமா MG Hector Hawk; பிளக்-இன் ஹைப்ரிட், EV பதிப்புகளில் அறிமுகம்
Gold Rate Today Aug.5th: அடப்பாவமே.! தங்கம் விலை ஒரே நாள்ல இவ்ளோ உயர்ந்துடுச்சே.! இப்போ விலை எவ்ளோ தெரியுமா.?
அடப்பாவமே.! தங்கம் விலை ஒரே நாள்ல இவ்ளோ உயர்ந்துடுச்சே.! இப்போ விலை எவ்ளோ தெரியுமா.?
Embed widget