Rocketry Simran : "மாறல.. எதுவுமே மாறல" மாதவனை புகழ்ந்து ஸ்வீட் சீக்ரெட் சொன்ன சிம்ரன்..
மாதவனுடன் பார்த்தாலே பரவசத்தில் நடித்தது முதல் ராக்கெட்ரியில் நடித்தது வரை எதுவுமே மாறவில்லை என்று நடிகை சிம்ரன் கூறியுள்ளார்.
![Rocketry Simran : parthale paravasam to rocketry nothing changed actress simran praises actor madhavan Rocketry Simran :](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/01/98aa6133617485ed7ee4a6381c01ffc8_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மாதவனுடன் பார்த்தாலே பரவசத்தில் நடித்தது முதல் ராக்கெட்ரியில் நடித்தது வரை எதுவுமே மாறவில்லை என்று நடிகை சிம்ரன் கூறியுள்ளார்.
நம்பி நாராயணனாக மாதவன்:
முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானியும், விகாஸ் எஞ்சினை கண்டுபிடித்தவருமான நம்பி நாராயணின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட். இப்படத்தில் விஞ்ஞானி நம்பி நாராயணனாக மாதவன் நடித்திருக்கிறார். இப்படத்தின் கதை, வசனம், இயக்கம், நடிப்பு எல்லாவற்றையும் மாதவனே செய்திருக்கிறார். நம்பிநாராயணனாக நடித்துள்ள மாதவனுடன், மாதவனின் மனைவி மீனா நாராயணாக சிம்ரன் நடித்துள்ளார். இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார். ஸ்ரீஷா ரே ஒளிப்பதிவு செய்ய பிஜித் பாலா எடிட்டிங் செய்திருக்கிறார்.
மாதவனுடன் சிம்ரன்:
இப்படத்திற்கான அறிவிப்பு 2018ம் ஆண்டே வெளியாகிவிட்ட நிலையில், பல்வேறு காரணங்களால் தள்ளிப்போனது. இத்திரைப்படத்தில், விக்ரம் சாராபாய், அருணன், கீதா நாராயணன், எபிஜே அப்துல்கலாம் உள்ளிட்ட பல விஞ்ஞானிகளின் கதாப்பாத்திரங்கள் இடம்பெற்றிருந்ததால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. இந்நிலையில், இப்படம் ஒருவழியாக திரையரங்குகளில் இன்று வெளியாகி விட்டது. திரைப்படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்துவரும் நிலையில் மாதவனுடன் நடித்தது குறித்து நடிகை சிம்ரன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
சிம்ரன் ட்வீட்:
அந்த பதிவில், “பார்த்தாலே பரவசத்தில் சிமி மற்றும் டாக்டர் மாதவன் முதல், கன்னத்தில் முத்தமிட்டாலில் இந்திரா மற்றும் திரு மற்றும் மிஸ்டர் மற்றும் மிசஸ் நம்பி நாராயணனாக நடித்தது வரை எதுவும் மாறவில்லை. நீங்கள் இயக்குநராக அறிமுகமாகும் உங்களது திரைப்படத்தில், 20 ஆண்டுகளுக்குப் பிறகு உங்களுடன் இணைந்து வேலை பார்த்தது மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கிறது. நீங்கள் தான் சிறந்தவர் மேடி” என்று கூறியுள்ளார்.
From playing Simi & Dr. Madhava in Paarthale Paravasam to Indira & Thiru in Kannathil Muthamittal, to playing Mr. and Mrs. Nambi Narayanan, nothing much has changed 😉 !! pic.twitter.com/rdE5MiPrOP
— Simran (@SimranbaggaOffc) June 30, 2022
It was wonderful to work on your directorial debut in addition to sharing the screen with you after 20 long years! You are the BEST, Maddy @Madhavan!
— Simran (@SimranbaggaOffc) June 30, 2022
இத்திரைப்படம் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)