மேலும் அறிய

Prabhas : காமன்வெல்த் விளையாட்டில் பதக்கங்கள்: வெற்றியாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்த பிரபாஸ் !

விளையாட்டு வீரர்களை வாழ்த்தும் பான் இந்தியா சூப்பர் ஸ்டார் பிரபாஸ்

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 22 ஆவது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்று, பதக்கங்களை வென்றெடுத்த வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு பான் இந்திய சூப்பர் ஸ்டாரான நடிகர் பிரபாஸ் வாழ்த்துகளுடன் பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்திருக்கிறார்.

'பாகுபலி' படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமாகி, பான் இந்திய சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை பெற்றவர் ' டார்லிங்' நடிகர் பிரபாஸ். சமூக வலைதளங்களில் தீவிரமாக இயங்கி வரும் இவரை கோடிக் கணக்கிலான பார்வையாளர்கள் பின் தொடர்கிறார்கள். சமூக முன்னேற்றம், சமூக நல்லிணக்கம், தேச பக்தி, தேசப்பற்று போன்ற விசயங்களில் தன்னுடைய முதன்மையான நேர்மறை விமர்சனத்தை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில் இவர், இங்கிலாந்து நாட்டில் உள்ள பர்மிங்ஹாம் எனும் இடத்தில் நடைபெறும் 70-க்கும் மேற்பட்ட காமன்வெல்த் நாடுகள் கலந்து கொண்ட 22 வது காமன்வெல்த் போட்டிகளில், இந்தியா சார்பில் இடம்பெற்ற வீரர் வீராங்கனைகளில், தங்கப்பதக்கம், வெள்ளி பதக்கம், வெண்கலம் பதக்கம் வென்ற அறுபதுக்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகளின் பதக்க பட்டியலின் புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு, அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது...
'' எங்களை பெருமைப்படுத்தியதற்காகவும், நமது தேசத்திற்கு பெருமை சேர்த்ததற்காகவும் அனைத்து சாம்பியன்களுக்கும் வாழ்த்துக்கள். உங்களுடைய அர்ப்பணிப்பிற்கும், உழைப்பிற்கும் நன்றி!!'' என பதிவிட்டிருக்கிறார்.


Prabhas : காமன்வெல்த் விளையாட்டில் பதக்கங்கள்: வெற்றியாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்த பிரபாஸ் !

விளையாட்டு போட்டிகளில் பதக்கங்களை வென்ற வீரர்களுக்கு பான் இந்தியா சூப்பர் ஸ்டார் பிரபாஸ் நன்றி தெரிவித்து வாழ்த்தியிருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனிடையே அண்மையில் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் வெளியான தேசபக்தியை மையப்படுத்திய ' ஹர் கர் திரங்கா..' எனத் தொடங்கும் பாடலில் விளையாட்டுத்துறை மற்றும் திரையுலக துறையிலிருந்து ஏராளமான ஆளுமைகள் இடம்பெற்றனர். அதில் பிரபாசும் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பான் இந்திய சூப்பர் ஸ்டாரான பிரபாஸ் தற்போது இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் 'ப்ராஜெக்ட் கே' எனும் படத்திலும், இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் 'ஆதி புருஷ்' எனும் படத்திலும், 'கே ஜி எஃப்' பட புகழ் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் 'சலார்' எனும் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்தப் படங்கள் அனைத்தும் இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளிலும் தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து தீபிகா படுகோன் விலகியது ஏன்? தயாரிப்பாளர் பிரணய் ரெட்டி வங்கா கூறிய காரணங்கள்
‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து தீபிகா படுகோன் விலகியது ஏன்? தயாரிப்பாளர் பிரணய் ரெட்டி வங்கா கூறிய காரணங்கள்
கிணத்துக்கடவு தொகுதியில் சீட் கேட்டேனா? லோகேஷ் கனகராஜ் விளக்கம்
கிணத்துக்கடவு தொகுதியில் சீட் கேட்டேனா? லோகேஷ் கனகராஜ் விளக்கம்
நெல்சன் மேஜிக் எங்கே? ‘ஜெயிலர் 2’ ப்ரோமோவில் ரசிகர்களுக்கு ஏமாற்றம்!
நெல்சன் மேஜிக் எங்கே? ‘ஜெயிலர் 2’ ப்ரோமோவில் ரசிகர்களுக்கு ஏமாற்றம்!
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: விஜய் அறிவித்த கார் தேவையில்லை.. உதயநிதி பேச்சால் சட்டசபையில் கடும் வாக்குவாதம்!
Udhayanidhi Stalin: விஜய் அறிவித்த கார் தேவையில்லை.. உதயநிதி பேச்சால் சட்டசபையில் கடும் வாக்குவாதம்!
Udhayanidhi Stalin: ”இந்த உருட்டல் மிரட்டல் வேண்டாம்.! FILE-ஐ ஓபன் பண்ணுங்க சிஎம்” - சட்டசபையில் சீறிய உதயநிதி
”இந்த உருட்டல் மிரட்டல் வேண்டாம்.! FILE-ஐ ஓபன் பண்ணுங்க சிஎம்” - சட்டசபையில் சீறிய உதயநிதி
Udhayanidhi vs Nirmal Kumar: வார்த்தையை விட்ட நிர்மல் குமார்.. கொந்தளித்த உதயநிதி.. சட்டசபையில் தவெக - திமுக மோதல்!
Udhayanidhi vs Nirmal Kumar: வார்த்தையை விட்ட நிர்மல் குமார்.. கொந்தளித்த உதயநிதி.. சட்டசபையில் தவெக - திமுக மோதல்!
TASMAC Holiday: மதுப்பிரியர்களே அலர்ட்.! ஆகஸ்ட் 26-ல் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைக்கு விடுமுறை- வெளியான அறிவிப்பு
மதுப்பிரியர்களே அலர்ட்.! ஆகஸ்ட் 26-ல் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைக்கு விடுமுறை- வெளியான அறிவிப்பு
Viral Video: ஹோம் வொர்க் எங்கே? அறைந்த ஆசிரியை, மடியில் விழுந்து மரணித்த 6 வயது சிறுவன் - வகுப்பறை கொடூரம்
ஹோம் வொர்க் எங்கே? அறைந்த ஆசிரியை, மடியில் விழுந்து மரணித்த 6 வயது சிறுவன் - வகுப்பறை கொடூரம்
Volkswagen Cheapest SUV: நெக்ஸான், பிரெஸ்ஸா-க்கு நெருக்கடி.! புதிய கவர்ச்சிகரமான மலிவு விலை SUV-ஐ களமிறக்கும் ஃபோக்ஸ்வேகன்
நெக்ஸான், பிரெஸ்ஸா-க்கு நெருக்கடி.! புதிய கவர்ச்சிகரமான மலிவு விலை SUV-ஐ களமிறக்கும் ஃபோக்ஸ்வேகன்
Education Scheme: கடனில்லை, ரூ.36 லட்சம் வரை நிதியுதவி - கல்வி திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள்
கடனில்லை, ரூ.36 லட்சம் வரை நிதியுதவி - கல்வி திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள்
DMK vs TVK: களேபரமான விவாதம் - அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர்? நாஞ்சில் சம்பத் மீது சேர் தூக்கியடிப்பு
களேபரமான விவாதம் - அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர்? நாஞ்சில் சம்பத் மீது சேர் தூக்கியடிப்பு
Embed widget