மேலும் அறிய

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்..ஃபீல் குட் முதல் டார்க் காமெடி வரை எல்லாம் இருக்கு

இந்த வாரம் பல்வேறு ஓடிடி தளங்களில் வெளியாக இருக்கும் தமிழ் மற்றும் பிற மொழி திரைப்படங்கள் குறித்த விபரங்களைப் பார்க்கலாம்

இந்த வாரம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என பல்வேறு மொழிகளைச் சேர்ந்த படங்கள் முன்னணி ஓடிடி தளங்களில் வெளியாக இருக்கின்றன. 

பெட்டி (Peddi) – நெட்ஃப்ளிக்ஸ்ஜூலை 9

 

புச்சி பாபு சனா இயக்கத்தில் ராம் சரண் நடித்து ஸ்போர்ட்ஸ் டிராமா திரைப்படமாக உருவாகிய படம் பெட்டி. ஜான்வி கபூர், சிவ ராஜ்குமார், ஜெகபதி பாபு, திவ்யேந்து, போமன் இரானி, ரவி கிஷன், விஜி சந்திரசேகர், ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளார்கள். ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். கடந்த ஜூன் 4 ஆம் தேதி திரையரங்கில் வெளியான பெட்டி ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தற்போது இன்று ஜூலை 9 ஆம் தேதி முதல் பெட்டி திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீம் ஆக இருக்கிறது. 

பால்டி (Balti) – சோனி லைவ்ஜூலை 11

கபடியை மையப்படுத்திய ஸ்போர்ட்ஸ் டிராமா மலையாள திரைப்படம் பல்டி. ஷேன் நிகம், சாந்தனு பாக்யராஜ், ப்ரீத்தி அஸ்ரானி, அல்போன்ஸ் புத்ரன், செல்வராகவன், சிவ ஹரிஹரன், ஜெக்சன் ஜான்சன், அக்‌ஷய் ராதாகிருஷ்ணன், பூர்ணிமா இந்திரஜித் ஆகியோர் படத்தில் நடித்துள்ளார்கள். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதமே திரையரங்கில் வெளியானபோதும் படத்தின் ஓடிடி ரிலீஸ் தாமதமானது. ஜூலை 10 ஆம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது பல்டி

பரிமளா & கோ - zee5 - ஜூலை 10 

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் ஊர்வசி , ஜெயராம் , சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி , அனந்திகா சனில்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் பரிமளா & கோ. காமெடி த்ரில்லர் கலந்து உருவான இப்பாம் கடந்த மாதம் திரையரங்கில் வெளியாகி சுமாரான வரவேற்பையே பெற்றது.  இப்படம் ஜூலை 11 முதல் ZEE5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

சிங் கீதம் (Sing Geetam) – நெட்ஃப்ளிக்ஸ்ஜூலை 11

இசையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள தெலுங்கு திரைப்படமான சிங் கீதம், கனவுகளுக்காக போராடும் இளைஞர்களின் வாழ்க்கையை சுவாரஸ்யமாக பதிவு செய்கிறது. இசை மற்றும் உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் இப்படம் ஜூலை 11 முதல் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.

பதி பத்னி ஔர் வோ தோ (Pati Patni Aur Woh Do) – நெட்ஃப்ளிக்ஸ்ஜூலை 11

இந்தியில் உருவாகியுள்ள பதி பத்னி ஔர் வோ தோ திரைப்படம் காதல், குடும்பம் மற்றும் நகைச்சுவையை மையமாகக் கொண்ட பொழுதுபோக்கு படமாகும். இலகுவான திரைக்கதையுடன் உருவாகியுள்ள இப்படம் ஜூலை 11 முதல் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

ஸ்போர்ட்ஸ் டிராமா , டார்க் காமெடி த்ரில்லர் மற்றும் ஃபீல் குட் என வெவ்வேறு ரசிகர்களுக்கு ஏற்ற விதமான படங்களை ரசிகர்கள் இந்த வாரம்  பார்த்து மகிழலாம் 

Advertisement

தலைப்பு செய்திகள்

Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
Agriculture Budget : வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
Kia Carens: ஆகஸ்ட் அதிரடி- கியா கேரன்ஸ் கிளாவிஸ், EV-க்கு ரூ.1.2 லட்சம் சலுகைகள்!
Kia Carens: ஆகஸ்ட் அதிரடி- கியா கேரன்ஸ் கிளாவிஸ், EV-க்கு ரூ.1.2 லட்சம் சலுகைகள்!
Gold and silver rate today : சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
பட்ஜெட் விலையில் பிரீமியம் பைக்குகள்: அட்டகாச லுக்கில் மிடில் கிளாஸுக்கு ஏத்த மாஸ் பைக்ஸ் என்ன?
பட்ஜெட் விலையில் பிரீமியம் பைக்குகள்: அட்டகாச லுக்கில் மிடில் கிளாஸுக்கு ஏத்த மாஸ் பைக்ஸ் என்ன?
Viral Video: வீடியோ காலில் தந்தையின் இறுதிச்சடங்கு..! “எப்ப முடியும்? குளிச்சிட்டு, சாப்டனும்” மகள்களின் வீடியோ
வீடியோ காலில் தந்தையின் இறுதிச்சடங்கு..! “எப்ப முடியும்? குளிச்சிட்டு,சாப்டனும்” மகள்களின் வீடியோ
TN Govt Debt: தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
Embed widget