மேலும் அறிய

The Kerala Story: சர்ச்சை மேல் சர்ச்சை: தி கேரளா ஸ்டோரி படத்தை வாங்க முன்வராத ஓடிடி நிறுவனங்கள்!

தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வசூலைக் குவித்தபோதும் முன்னணி ஓடிடி நிறுவனங்கள் எதுவும் முன்வரவில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபத்தில் வெளியாகி சர்ச்சைகளைக் கிளப்பிய தி கேரள ஸ்டோரி படத்தை எந்த ஓடிடி நிறுவனமும் வாங்க முன்வரவில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகி பெரும் சர்ச்சைகளைக் கிளப்பிய திரைப்படம் ‘தி கேரளா ஸ்டோரி’.  இஸ்லாமிய மதத்திற்கு எதிரான வெறுப்பு பிரச்சாரங்கள் மேலோங்கி இருப்பதாக இப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது முதலே விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. தொடர்ந்து மே 5ஆம் தேதி வெளியான இப்படம் கடும் விமர்சனங்களைப் பெற்று சர்ச்சைகளைக் கிளப்பியது.

இந்தியில் உருவான இப்படம் பான் இந்தியா திரைப்படமாக தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்ட நிலையில், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் தி கேரளா ஸ்டோரி படம் தடைசெய்யப்பட்டது.

பல மாநிலங்களில் இப்படத்துக்கு எதிராக போராட்டங்கள் வெடித்த நிலையில், தமிழ்நாட்டில் போதிய வரவேற்பு இல்லாததால் இப்படம் திரையிடப்பட மாட்டாது என மல்டிப்ளெக்ஸ் திரையரங்கங்கள் தெரிவித்து படத்தினை திரையிடுவதை நிறுத்திக் கொண்டன.

மற்றொருபுறம் பாஜக ஆளும் உத்தரப் பிரதேசம், ஹரியானா, மத்திய பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் இப்படத்துக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டது. இந்த விமர்சனங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டு தி கேரளா ஸ்டோரி திரைப்படம் திரையரங்குகளில் 240 கோடிகளுக்கு மேல் இப்படம் வசூலைக் குவித்தது.

இந்நிலையில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வசூலைக் குவித்தபோதும் முன்னணி ஓடிடி நிறுவனங்கள் எதுவும் முன்வரவில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக தனியார் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த  தி கேரளா ஸ்டோரி இயக்குநர் சுதிப்தோ சென், எந்த ஓடிடி தளங்களும் தங்களை அணுகவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

இதுவரை, நாங்கள் பரிசீலிக்கத் தகுந்த எந்த சலுகையும் வரவில்லை. எங்களை  தண்டிக்க திரைப்படத் துறையினர் ஒன்றுகூடி உள்ளனர். எங்கள் பாக்ஸ் ஆபிஸ் வெற்றி திரைப்படத் துறையின் பல பிரிவினரை எரிச்சலடையச் செய்துள்ளது. 

எங்கள் வெற்றிக்காக எங்களை தண்டிக்க பொழுதுபோக்குத் துறையின் ஒரு பகுதி ஒன்றிணைந்ததாக நாங்கள் உணர்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக தி கேரளா ஸ்டோரி படத்துக்கு கேரளா, தமிழ்நாடு அரசுகள் தடை கோரிய நிலையில், “மதச்சார்பின்மை மாநிலமான கேரளாவில், மத தீவிரவாதத்தின் மையமாக தன்னை நிலைநிறுத்திக் கொண்ட சங்பரிவார், இப்படத்தின் மூலம் பிரச்சாரத்தை பரப்ப முயற்சிக்கிறது” என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடுமையாக சாடியிருந்தார். 

இதேபோல் சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற உலகநாயகன் கமல்ஹாசன் தி கேரளா ஸ்டோரி ஒரு பிரச்சாரத் திரைப்படம் என்றும், தான் பிரச்சாரத் திரைப்படங்களுக்கு முற்றிலும் எதிரானவர் என்றும் கருத்துத் தெரிவித்தைருந்தது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
Maruti Brezza Vs Renault Kiger: மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
Maruti XL6 Facelift: செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
Innova Hycross on EMI: ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
Embed widget