மேலும் அறிய

நிவின் பாலி நடிக்கும் 'பெத்லகேம் குடும்ப யூனிட்: பட பத்திரிகையாளர் சந்திப்பு

கடந்த ஆகஸ்ட் மாதம் 21 ஆம் தேதி முதல் மலையாள மொழியில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றியை பெற்ற 'பெத்லகேம் குடும்ப யூனிட்' தமிழிலும் வெளியாக உள்ளது

பாவனா ஸ்டுடியோஸ் (Bhavana Studios)  நிறுவனத்தின் தயாரிப்பில் கிரீஷ் ஏ. டி. இயக்கத்தில் நிவின்பாலி- மமீதா பைஜூ நடிப்பில் ப்ரீமார்க் புரொடக்ஷன்( Primark Productions ) மற்றும் பியூச்சர் ரன்னர் அப் பிலிம்ஸ் (Future Run Up )Films   ஆகிய நிறுவனங்கள் இணைந்து வழங்கும் 'பெத்லகேம் குடும்ப யூனிட்' திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 21 ஆம் தேதி முதல் மலையாள மொழியில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றியை பெற்ற 'பெத்லகேம் குடும்ப யூனிட்' திரைப்படத்தை  ப்ரீமார்க் புரொடக்ஷன் மற்றும் பியூச்சர் ரன்னர் அப் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தின் தமிழ் பதிப்பை செப்டம்பர் நான்காம் தேதி முதல் தமிழக முழுவதும் திரையரங்குகளில் வெளியிடுகின்றன..

'பெத்லகேம் குடும்ப யூனிட்' திரைப்படத்தினை தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில் படக்குழுவினர் கலந்து கொண்ட பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில்  தயாரிப்பாளர்கள் பஹத் பாஸில்- உன்னி மாயா பிரசாத்- இயக்குநர் கிரீஷ் ஏ டி- ஆகியோர் கலந்து கொண்டனர்.

இயக்குநர் கிரீஷ் ஏ டி- பேசுகையில் : ''எனக்கு கூட்டத்தின் முன்பு எப்படி பேச வேண்டும் என்பது தெரியாது. செப்டம்பர் நான்காம் தேதி வெளியாகும் 'பெத்லகேம் குடும்ப யூனிட்' திரைப்படத்தை திரையரங்குகளுக்கு சென்று குடும்பத்தினருடன் பாருங்கள். உங்கள் அனைவருக்கும் இந்த படம் பிடிக்கும் என்று நம்புகிறேன்.

'பெத்லகேம் குடும்ப யூனிட்' என்றால்.., கேரளாவில் தேவாலயங்களில் அருகே உள்ளவர்களை இப்படி வகைப்படுத்தி இருப்பார்கள். இப்படத்தில் இடம் பிடித்திருக்கும் சில கதாபாத்திரங்கள் நிஜ வாழ்க்கையில் இருந்து உருவாக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தின் கதையின் நாயகனான ஜஸ்டின் கதாபாத்திரம் எனக்கு நன்கு அறிமுகமான ஒருவரின் வாழ்வியல் இருந்து உருவான கேரக்டர்'' என்றார்.

தயாரிப்பாளர் பஹத் பாசில் பேசுகையில் : ''படத்தின் நாயகனான நிவின்பாலி மற்றும் மமீதா பைஜூ ஆகிய இருவரும் தவிர்க்க முடியாத காரணத்தினால் இங்கு வர இயலவில்லை.

'பெத்லகேம் குடும்ப யூனிட்' திரைப்படம்- எனக்கு மிகவும் ஸ்பெஷலானது. நான்- தினேஷ்- ஷியாம் -ஆகிய மூவரும் இணைந்து தயாரித்திருக்கிறோம். எங்களுடைய நட்பு 2018 ஆம் ஆண்டிலிருந்து தொடங்கி அற்புதமாக தொடர்கிறது. எங்கள் இதயத்திற்கு நெருக்கமான கதைகளை தேர்வு செய்து நாங்கள் தொடர்ந்து திரைப்படங்களை தயாரிக்க உள்ளோம். இந்த அழகான திரைப்படத்தை வழங்கியதற்காக இயக்குநர் கிரிஷ் ஏடி உள்ளிட்டஇந்த படக் குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

தமிழ் சினிமா ரசிகர்கள் எப்போதும் நல்ல படங்களை வரவேற்று கொண்டாடுவார்கள். அவர்களுக்கு இந்த திரைப்படமும் கொண்டாடும் வகையில் இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இந்த திரைப்படத்தை வெற்றி பெறச் செய்த மலையாள ரசிகர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.

இயக்குநர் கிரீஷ் ஏ டி- இயக்கத்தில் உருவாகியுள்ள 'பெத்லகேம் குடும்ப யூனிட்' திரைப்படத்தில் நிவின் பாலி,  மமீதா பைஜூ, சங்கீத் பிரதாப்,  ரோஷன் ஷா நவாஸ் ,ஷியாம் மோகன், சுரேஷ் கிருஷ்ணா, வினய் ஃபோர்ட் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அஜ்மல் ஷபு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு விஷ்ணு விஜய் இசையமைத்திருக்கிறார். ரொமான்டிக் காமெடி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பாவனா ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் பகத் பாசில் & பிரண்ட்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்திருக்கின்றன. இந்த திரைப்படத்தை தமிழில் ப்ரீமார்க் புரொடக்ஷன் மற்றும் பியூச்சர் ரன்னர் அப் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து வழங்குகிகின்றன.

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More
Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: துப்பாக்கியால் சுட்ட சிவனாண்டி.. உயிருக்கு ஆபத்தான நிலையில் சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபத்தில் பதற்றம்
Karthigai Deepam: துப்பாக்கியால் சுட்ட சிவனாண்டி.. உயிருக்கு ஆபத்தான நிலையில் சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபத்தில் பதற்றம்
இந்த வார ஓடிடி ரிலீஸ்: விஜய் சேதுபதியின் ‘பத்தா’ முதல் ஜி.வி. பிரகாஷின் ‘இம்மார்டல்’ வரை.. முழு பட்டியல்!
இந்த வார ஓடிடி ரிலீஸ்: விஜய் சேதுபதியின் ‘பத்தா’ முதல் ஜி.வி. பிரகாஷின் ‘இம்மார்டல்’ வரை.. முழு பட்டியல்!
நடிகர் ரவிமோகன் வெளியிட்ட ‘மணிகண்டா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!
நடிகர் ரவிமோகன் வெளியிட்ட ‘மணிகண்டா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!
ரஜினியின் 6 இண்டஸ்ட்ரி ஹிட் படங்கள்! ‘ஜெயிலர் 2’ முதல் ‘படையப்பா’ வரை.. வசூல் விபரங்கள்
ரஜினியின் 6 இண்டஸ்ட்ரி ஹிட் படங்கள்! ‘ஜெயிலர் 2’ முதல் ‘படையப்பா’ வரை.. வசூல் விபரங்கள்
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
யூனிட் ரூபாய் 41க்கு கொள்முதலா? உதயநிதி குற்றச்சாட்டிற்கு அமைச்சர் நிர்மல்குமார் மறுப்பு
யூனிட் ரூபாய் 41க்கு கொள்முதலா? உதயநிதி குற்றச்சாட்டிற்கு அமைச்சர் நிர்மல்குமார் மறுப்பு
குழந்தைகள் மாயமான விவகாரம்; சட்டம் ஒழுங்கு பற்றி பேச திமுக-விற்கு என்ன உரிமை இருக்கிறது? தரவுகளுடன் தவெக கேள்வி
குழந்தைகள் மாயமான விவகாரம்; சட்டம் ஒழுங்கு பற்றி பேச திமுக-விற்கு என்ன உரிமை இருக்கிறது? தரவுகளுடன் தவெக கேள்வி
இந்தியாவை திரும்பி பார்க்க வைத்த Hyundai Bayon கார்! என்னென்ன வேரியண்ட் என்ன விலை? என்ன ஸ்பெஷல்?
இந்தியாவை திரும்பி பார்க்க வைத்த Hyundai Bayon கார்! என்னென்ன வேரியண்ட் என்ன விலை? என்ன ஸ்பெஷல்?
Tamilnadu Power Cut: தமிழகத்தில் நாளை (28-10-2026) எங்கெல்லாம் முழு நேர மின் தடை ? - மின் வாரியத்தின்  லிஸ்ட் இதோ
தமிழகத்தில் நாளை (28-10-2026) எங்கெல்லாம் முழு நேர மின் தடை ? - மின் வாரியத்தின்  லிஸ்ட் இதோ
முதலமைச்சர் விஜய் பாவம் ! விசாரணை திசை திருப்பும் நாடகம் ! காவல் துறைக்கே மன உளைச்சல் - ஆ.ராசா
முதலமைச்சர் விஜய் பாவம் ! விசாரணை திசை திருப்பும் நாடகம் ! காவல் துறைக்கே மன உளைச்சல் - ஆ.ராசா
Diwali Bonus: முதல்வர் விஜய் கொடுத்த இன்ப அதிர்ச்சி.. வந்தாச்சு தீபாவளி போனஸ்! ... யார்? யாருக்கு? எவ்வளவு தொகை தெரியுமா?
முதல்வர் விஜய் கொடுத்த இன்ப அதிர்ச்சி.. வந்தாச்சு தீபாவளி போனஸ்! ... யார்? யாருக்கு? எவ்வளவு தொகை தெரியுமா?
TVK Alliance: காத்திருக்கும் உள்ளாட்சித் தேர்தல்; கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை இடங்கள்? விஜய்யின் முடிவு இதுதான்
TVK Alliance: காத்திருக்கும் உள்ளாட்சித் தேர்தல்; கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை இடங்கள்? விஜய்யின் முடிவு இதுதான்
Actor Dhanush : ‘சிவனும் சக்தியும் சேர்ந்தா’ அண்ணாமலையுடன் இணையும் தனுஷ்..? அரசியலில் புதுத் திருப்பம்!
‘சிவனும் சக்தியும் சேர்ந்தா’ அண்ணாமலையுடன் இணையும் தனுஷ்..?
Embed widget