மேலும் அறிய

சரத் வீட்டில் சாப்பாடு.. நிஷா, கிருத்திகா கலாய்... யூடியூப் வீடியோ வைரல்!

விஜய் டிவி ஷோவில் நடித்துவிட்டால் போதும் பெயரும் புகழும் பின்னாடியே வந்து சேரும்.

விஜய் டிவி ஷோவில் நடித்துவிட்டால் போதும் பெயரும் புகழும் பின்னாடியே வந்து சேரும். சிவகார்த்திகேயன் தொடங்கி அறந்தாங்கி நிஷா வரை குக் வித் கோமாளி புகழ், பாலா எனப் பலரும் விஜய் டிவி கொடுத்த வெளிச்சத்தால் இன்று வெள்ளித்திரை வரை வளர்ந்துள்ளனர்.

அதனாலேயே விஜய் டிவியையும், ரியாலிட்டி ஷோக்களையும் பிரிக்க முடியாது என்றளவுக்கு அவற்றிற்கு மவுசு உள்ளது.  சமீப காலமாக விஜய் டிவியின் எல்லா நிகழ்ச்சிகளிலும் காமெடிதான் அடிநாதமாகிவிட்டது.

விஜய் டிவியின் பலமே அந்த சேனலில் பணியாற்றும் காமெடியன்கள் தான். மற்ற டிவி சேனல்களுடன் ஒப்பிடுகையில் விஜய் டிவியில் வரும் காமெடியன்கள் மிகவும் திறமையானவர்களாக இருக்கின்றனர். இன்னும் சொல்ல போனால், மற்ற சேனல்களும், அவர்களை வைத்துதான் பல ஷோக்களை நடத்துகின்றனர்.

காமெடி ஷோக்களில் வருபவர்களை விஜய் டிவி ஒரே நிகழ்ச்சியுடன் விட்டுவிடுவதில்லை. சீரியல், ரியாலிட்டி ஷோ என தாங்கள் ஒளிபரப்பும் எல்லா நிகழ்ச்சிகளிலும் அவர்களுக்கான வாய்ப்பை வாரி வழங்குகிறது.
அண்மைக்காலத்தில் தனது திறமையால் சினிமாவில் கால்பதித்து கோளோச்சி வருபவர் அறந்தாங்கி நிஷா. அறந்தாங்கி நிஷா கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் விஜய் டிவிக்குள் அடியெடுத்து வைத்தார். அந்த நிகழ்ச்சி மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே அவர் உருவாக்கினார்.

அவரைப் போலத்தான் சரத். நிஷா போட்டியளாராக பங்கேற்ற அதே சீசனில் தான் சரத்தும் கலந்து கொண்டார். அதில் சரத்தும், தீனாவும் சேர்ந்து செய்த காமெடி அலப்பறை ரகம். தீனா பட வாய்ப்புகள் கிடைத்து வெள்ளித்திரைக்கு சென்றுவிட்டார். இருந்தாலும் அவ்வப்போது விஜய் டிவி நிகழ்ச்சிகளில் தோன்றுவார். விஜய் டிவியில் சமீபத்தில் நடந்த மிஸ்டர் அண்ட் மிசஸ் சின்னத்திரை சீசன் 3- நிகழ்ச்சியில் சரத் மற்றும் அவரது மனைவி கிருத்திகா கலந்து கொண்டனர். அதில், இந்த ஜோடி அனைத்து டாஸ்க்குகளிலும் அசத்தி, பட்டத்தை வென்றது.

இந்நிலையில் நிஷா, சரத் வீட்டுக்கு மதியம் சாப்பாட்டுக்குச் சென்றார். அப்போது அவர் செய்த அமர்க்களங்களை கிருத்திகா வீடியோவாக எடுத்து, சரத் உடைய யூடியூப் சேனலில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தான் இப்போது யூடியூபில் கலகல வீடியோவாக ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது.

ஓருமுறை நிஷா, கிருத்திகாவை தனது வீட்டுக்கு அழைத்தார். அப்போது அங்கு நடந்த அலப்பறைகளை வீடியோவாக எடுத்து நிஷா வெளியிட கிருத்திகா கலாய்க்கப்பட்டார். அதற்கு பதிலடியாக காமெடி ரிவெஞ்சாக கிருத்திகா இந்த வீடியோவை சரத் யூடியூப் சேனலில் பகிர்ந்துள்ளார் எனக் கூறப்படுகிறது.

வீடியோவில், ரசம், மாங்காய் பச்சடி, உருளைக்கிழங்கு கூட்டு, மண்சட்டி குழம்பு என சகல விருந்துகளுடன் கிருத்திகா உபசரிக்க, நிஷா முருங்கைக்காயை, ஏதோ நல்லி எலும்பு ரேஞ்சுக்கு உறிஞ்சு சாப்பிடுகிறார்.

சாப்பிட்டுக் கொண்டே நிஷா நான் முதல் தடவை வந்தபோது, சரத் கடையில் இருந்து குழம்பு வாங்கி வந்தான். அதனால் உனக்கு சமைக்க தெரியாது என நினைத்தேன் என்று சொல்ல, அதற்கு கிருத்திகா, சமைச்சுக் கொடுத்தா அப்புறம் இங்கேயே வந்துருவாங்க; அதனாலதான் குழம்பு மட்டும் வெளியே வாங்கிட்டு வர சொன்னேன் என்று கிருத்திகா கூறுகிறார். இது ஒரு சாம்பிள் தான். இதுபோல் ஆயிரம் கலாய்கள் இந்த சிறு வீடியோவில் இருக்கிறது. பார்த்து ரசியுங்கள்.

தலைப்பு செய்திகள்

Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வித்யா ராமராஜை நேரில் சந்தித்து வாழ்த்தி ரஜினி
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வித்யா ராமராஜை நேரில் சந்தித்து வாழ்த்தி ரஜினி
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
முதன்முறையாக.. இந்தியாவில் வரும் 27ம் தேதி K Pop இசை நிகழ்ச்சி! எங்கே தெரியுமா?
முதன்முறையாக.. இந்தியாவில் வரும் 27ம் தேதி K Pop இசை நிகழ்ச்சி! எங்கே தெரியுமா?

வீடியோ

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK:
TVK vs DMK: "ஊழல் இல்லாத ஆட்சிக்கு டம்மி டாடி ஸ்டிக்கர் ஒட்ட முடியுமா?" திமுக-விற்கு தவெக கேள்வி
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
​
​"2 நிமிட 'ரீல்ஸ்' எடுக்க தான் சட்டமன்றமா ?" – மேடையில் ஆவேசப்பட்ட கனிமொழி
VS Babu Health Update: தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலை எப்படி இருக்கு? அமைச்சர் அருண்ராஜ் முக்கிய அப்டேட்!
VS Babu Health Update: தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலை எப்படி இருக்கு? அமைச்சர் அருண்ராஜ் முக்கிய அப்டேட்!
Sugarcane Farmers : கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! வங்கி கணக்கில் பணம் டெபாசிட்- தேதி குறித்த தமிழக அரசு
கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! வங்கி கணக்கில் பணம் டெபாசிட்- தேதி குறித்த தமிழக அரசு
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
Embed widget