`ஜெய் பீம்’ தொடர்பான நடிகர் சந்தானத்தின் கருத்து.. அடித்து விளையாடும் நெட்டிசன்கள்!
`ஜெய் பீம்’ படத்தின் சர்ச்சை தொடர்பாக நடிகர் சந்தானம் முன்வைத்த கருத்துகள் ட்விட்டரில் வைரலாகி வருகின்றன. மேலும் அவரின் கருத்து ட்விட்டரில் கடும் பின்னடைவைச் சந்தித்து வருகிறது.
`ஜெய் பீம்’ படத்தின் சர்ச்சை தொடர்பாக நடிகர் சந்தானம் முன்வைத்த கருத்துகள் ட்விட்டரில் வைரலாகி வருகின்றன. ஏற்கனவே #WeStandWithSurya என்று நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாகப் பெரும்பான்மையான நெட்டிசன்கள் டிரெண்டிங் செய்து கொண்டிருக்கையில், நடிகர் சந்தானத்தின் கருத்து ட்விட்டரில் கடும் பின்னடைவைச் சந்தித்து வருகிறது.
`சபாபதி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சந்தானத்திடம் `ஜெய் பீம்’ படம் தொடர்பான சர்ச்சைகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. `எதைப் பற்றி வேண்டுமானாலும் உயர்த்திப் பேசுங்கள், ஆனால் யாரையும் தாழ்த்திப் பேசாதீர்கள். மக்கள் அனைவரும் சாதி, மதம், இனம், மொழி என அனைத்தையும் மறந்து திரையரங்கத்திற்கு வருவது, தங்கள் கவலைகளை மறந்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்குத் தான். இனி வரும் தலைமுறை இயக்குநர்கள் மக்களுக்கு நல்ல படங்களைத் தர வேண்டும். ஒரு குறிப்பிட்ட சமுதாயம், மதம் ஆகியவற்றைத் தாழ்த்தி அவர்களின் மனதைக் காயப்படுத்த வேண்டாம்’ என்று கூறியிருந்தார்.
ஏற்கனவே பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸுடன் சந்தானம் புகைப்படம் எடுத்துக் கொண்டது, அவர் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டது, சமீபத்திய `டிக்கிலோனா’ படம் தொடர்பான உருவக்கேலி, மாற்றுத் திறனாளிகளைக் கேலி செய்தது முதலான சர்ச்சைகள் எனப் பல விவகாரங்களையும் நடிகர் சந்தானத்தின் சமீபத்திய கருத்துடன் இணைந்து அவரைக் கடுமையாக வசைபாடி வருகின்றனர் நெட்டிசன்கள்.
Avar padathat avar neraiya paathutar pola.... #santhanam #JaiBhim #WeStandWithSuriya pic.twitter.com/6Kt8juAKJf
— Veera (@_Mr_Wick) November 16, 2021
சூர்யாவுக்கு மாண்புமிகு.சந்தானம் ஐயா தந்துள்ள அறிவுரை. pic.twitter.com/QcLaLNrJ7q
— Blue Sattai Maran (@tamiltalkies) November 16, 2021
கொஞ்சம் இழுத்தா அவுந்துரும் அதுக்கு பேரு சுதந்திரம்...
— Karuppu Poonai (@KaruppuPoonai) November 16, 2021
சைடு ஸ்டேண்டு...
இந்த மாதிரி வசனம் எல்லாம் கல்வெட்டுகள் அல்லவா பொறிக்கப்படனும்...#santhanam #Jaibhim #VanniyarSangam pic.twitter.com/dlZsLhZhCD
நகைச்சுவை அப்படின்னு சொல்லிட்டு கவுண்டமணி மாதிரி எல்லாரையும் தரக்குறைவா சினிமால பேசிட்டு இப்போ உயர்வு தாழ்வு பற்றி பாடம் வேற , என்னமோ bro@iamsanthanam
— TSK :) (@TSK_Offcl) November 16, 2021
கொஞ்சம் பாத்துக்கோங்க. அடிப்படை அரசியல் தெரியும் னு நெனைக்கிறேன் உங்களுக்கு. சாதி பெருமையும் திமிரும் அடக்கப்பட வேண்டிய ஒன்று.
என்ன பெரிய தாழ்த்தி பேசுறது??
— மெட்ராஸ்காரன் ™ (@advocateARULDEV) November 16, 2021
சந்தானம் காமெடி பாத்துருக்கியா நீ?? #Santhanam #Suriya #WeStandWithSuriya#பணம்_பறிக்கும்_பாமக pic.twitter.com/WzNmaR5oi2
நியாயம் பேசும் ஆளை பாருங்க,பெண்களை மட்டமாக பேசும் போது தெரியவில்லை நியாயம்.இப்போ தெரியுதா.எல்லாம் நேரம்டா. #santhanam #WeStandWithSuriya#WeStandWithSuriyaAnna
— Name cannot be blank (@malathiiii) November 16, 2021
Dhraupathi & Ruthrathandavam padamla varappo koma la irundhingala @iamsanthanam
— jack chandru.S (@jackchandru07) November 16, 2021
#Santhanam #JaiBhim #JaiBheem #சாதிவெறியன்_சந்தானம் #Tamil #TamilNadu pic.twitter.com/BHuLlruqB6
#Santhanam talks about degrading people. Unfortunately we don't have a Sangam to object about body shaming and demeaning people in the name of humour #JaiBhim
— Nirmal (@nirmalche) November 16, 2021
திரைப்படங்களில் யாரையும் தாழ்த்துவது போல் காட்சி வைப்பது சரியல்ல - சந்தானம்!
— நாட்டுப்புறத்தான் (@naatupurathan) November 16, 2021
வாக்கிங் ஸ்டிக்கை பயன்படுத்தி நடக்கும் ஒரு மாற்றுத்திறனாளியை,
Side Stand னு கிண்டல் பண்ணி படம் எடுத்த சல்லிப்பய தானேடே நீ... pic.twitter.com/VC3SACckdf
With all due respect this is the biggest joke of the year when it is coming from #Santhanam whose comedies are majorly by putting others down, body shaming or name calling. #JaiBhim https://t.co/kmBImsFoIB
— Karthik Vijayan (@iamkarthikvjn) November 16, 2021
#Santhanam in Kollywood
— கற்றது Cinema (@katradhucinema) November 16, 2021
1. Body Shaming
2. Humiliate
3. Womeniser pic.twitter.com/ckq95CqMZv