Kavithai Gopal: "அட்ஜஸ்ட்மென்ட் பண்ணு பட வாய்ப்பு தர்றேன்" ஆதாரத்துடன் சிக்கிய கவிதை கோபால்!
திருநெல்வேலியைச் சேர்ந்த இளம்பெண்ணை அட்ஜஸ்ட்மென்ட் செய்ய அழைத்ததாக கவிதை கோபால் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழ்நாட்டில் இணையதளம் மூலமாக மிகவும் பிரபலமானவர்கள் பலரும் உள்ளனர். அப்படி இணையதளம் மூலமாக மிகவும் பிரபலமானவர்களில் ஒருவர் கவிதை கோபால்.
அட்ஜஸ்ட்மென்ட்டிற்கு கூப்பிட்ட கவிதை கோபால்:
யூ டியூப் தொலைக்காட்சி ஒன்றில் கவிதை ஒன்றைக் கூறி இணையத்தில் மீம்ஸ்கள் மூலம் பிரபலமானவர் இவர். மேலும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றிலும் பங்கேற்று மீம் மெட்டிரியலாகவும் உருவெடுத்தவர். இவர் திரைப்பட வாய்ப்பு வழங்குவதாக கூறி இளம்பெண் ஒருவரை படுக்கைக்கு அழைத்ததாக அந்த பெண் குற்றச்சாட்டு எழுப்பியிருப்பது இணையத்தில் பேசுபொருளாக அமைந்துள்ளது.
அந்த பெண் இந்த சம்பவம் தொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ளார். கவிதை கோபால் அந்த பெண்ணுக்கு போன் செய்து, அந்த பெண்ணுக்கு நடிக்க வாய்ப்பு அளிப்பதாகவும், அவ்வாறு தான் பட வாய்ப்பு வழங்க வேண்டும் என்றால் இயக்குனர், ஒளிப்பதிவாளர் மற்றும் அவருடன் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என்று கேட்டதாக குற்றச்சாட்டை அந்த பெண் முன்வைத்துள்ளார்.
ஆதாரத்துடன் வெளியிட்ட பெண்:
மேலும், கவிதை கோபால் தனக்கு தொடர்ச்சியாக போன் செய்ததாகவும், பின்னர் வீடியோ கால் செய்ததாகவும் ஆதாரத்துடன் அந்த பெண் வீடியோ வெளியிட்டுள்ளார். மேலும், கவிதை கோபால் அந்த பெண்ணிடம் பேசிய ஆடியோ ஆதாரத்தையும் அவர் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும், கவிதை கோபால் மீது அந்த பெண் காவல்நிலையத்தில் ஆதாரத்துடன் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக கவிதை கோபாலை பலரும் கடுமையாக விமர்சித்து கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர்.
அந்த பெண் அளித்துள்ள புகாரின் அடிப்படையில் கவிதை கோபால் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க உள்ளனர். மேலும், இந்த விவகாரத்தில் கவிதை கோபால் இயக்குனர் ஒருவர் பெயரையும் கூறியிருப்பதால் அந்த இயக்குனர், ஒளிப்பதிவாளர் ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. மேலும், இவர் இதேபோன்று பல பெண்களிடம் பேசியிருக்கலாம் என்றும் அந்த பெண் சந்தேகம் கிளப்பியுள்ளார். இதுதொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். சாப்பாட்டிற்கே வழியில்லாதது போல வீடியோக்களில் பேசும் கவிதை கோபால் இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபட்டது பலருக்கும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















