மேலும் அறிய

Nayanthara Vignesh Netflix: விக்கி - நயன் காதல்கதையை காட்சிகளாக உருவாக்கும் நெட்ஃப்ளிக்ஸ்! விரைவில் ரிலீஸ்!

Nayanthara Vignesh Shivan Netflix: சென்ற மாதம் திருமணம் செய்து கொண்ட கோலிவுட் ஸ்பெஷல் ஜோடி நயன்தாரா - விக்னேஷ் சிவனின் காதல் கதை குறித்த ஆவணப்படம் கூடிய விரைவில் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.

நானும் ரவுடிதான் படத்தில் துவங்கி நீண்ட ஆண்டுகளாக காதலித்து வந்த தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி, கடந்த ஜூன் 9 ஆம் தேதி சென்னையில் திருமணம் செய்து கொண்டனர். மகாபலிபுரத்தில் அமைந்திருக்கும் ரிசார்ட்டில் அமைக்கப்பட்ட கண்ணாடி மண்டபத்தில் நயன்தாராவை கரம் பிடித்தார் விக்னேஷ் சிவன். திருமணம் நடந்த இடத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த திருமணத்தை ஒளிபரப்பு செய்யும் உரிமத்தை நெட்ஃபிளிக்ஸ் பெற்றுள்ளதாக செய்திகள் தெரிவித்தன. அதனால் எந்த மீடியாவுக்கும் உள்ளே அனுமதி இல்லை என்பதெல்லாம் நாம் திருமணம் நடந்த அன்றே அறிந்த விஷயம்.

பிரமாண்ட திருமணம்

திருமணத்திற்கு வந்தவர்கள் தங்க 5 ஸ்டார் ஹோட்டலின் அனைத்து அறைகளையும் புக் செய்திருந்தார் நயன்தாரா. இந்த திருமணத்தில் 200 விஜபிக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அதேபோல திருமண விருந்தில் பரிமாறப்பட்ட உணவு மெனு, விருந்தினர்களுக்கு சிறப்புப் பரிசு, தங்குவதற்கு அறை, கண்ணாடி மாளிகையில் திருமணம் என நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு கோடி கணக்கில் செலவழிக்கப்பட்டதாகவும் இணையத்தில் தகவல்கள் வந்தன.

View this post on Instagram
 
A post shared by Vignesh Shivan (@wikkiofficial)

நெட்ப்ளிக்ஸ் உடன் கருத்துவேறுபாடா

நயன்தாரா தன் திருமண வீடியோவை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்திற்கு ரூ. 25 கோடிக்கு விற்பனை செய்துவிட்டார் என்றும், திருமண செலவையும் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் தான் ஏற்றுக் கொண்டது என்றும், மும்பையில் இருந்து வந்த மேக்கப் கலைஞர்கள், பவுன்சர்கள் என்று சகலமும் நெட்ஃப்ளிக்ஸ் பாக்கெட்டில் இருந்து தான் செலவு என்றெல்லாம் தகவல்கள் வந்தன. இதற்கிடையே ஒரு பிரச்சனையும் வந்தது. விக்னேஷ் சிவன் விதிகளை மீறிவிட்டதாகவும், நெட்ஃப்ளிக்ஸ் அனுமதி இன்றி போட்டோக்களை வெளியிட்டதாகவும் வதந்திகள் பரவின.

தொடர்புடைய செய்திகள்: கலவரமாக மாறிய சிறுவர்களின் ப்ரீ பையர் கேம்... 5 பேருக்கு வெட்டு.. தேவாலயம் மீது கற்கள் வீச்சு!

வதந்திக்கு முற்றுப்புள்ளி

ஆனால் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்படி, நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. நயன்தாரா விக்னேஷ் சிவன் குறித்த ஆவணப்படம் கூடிய விரைவில் நெட் ஃப்ளிக்ஸ் தளத்தில் ஒளிப்பரப்பாகவுள்ளதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. நயன்தாரா - விக்னேஷ் சிவன் காதல் கதை என பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த ஆவணப்படத்தை விரைவில் நெட் ஃப்ளிக்ஸில் ஒளிப்பரப்ப ஏற்பாடுகள் வேகமாக நடந்து வருகிறதாம். கூடிய விரைவில் ரசிகர்கள் இதை கண்டுக்களிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இதில் நயன்தாராவின் வாழ்க்கை வரலாறும் இடம்பெறும் என்று கூறப்படுகிறது.

View this post on Instagram
 
A post shared by Vignesh Shivan (@wikkiofficial)

விரைவில் வெளியாகும் ஆவணப்படம்

ஏற்கெனவே அறிவித்ததுப்படி திருமண போட்டோக்களை திருமணம் முடிந்து பிற்பகலுக்கு பிறகு சோஷியல் மீடியாவில் விக்னேஷ் சிவன் ஷேர் செய்து இருந்தார். அதனால் எந்த பிரச்சனையும் இல்லை என்று வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த அப்டேட்டை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் வெளியிட்டு இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அதே போல் விக்கி - நயனின் காதல் கதையை இயக்குனர் கெளதம் மேனன் ஆவணப்படமாக இயக்கியுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டது. இது எப்போது எப்படி வெளியாகும் என்பதை விரைவில் நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் அறிவிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
Avaniyapuram Jallikattu 2026: சீறிப்பாயும் காளைகள்.. அவனியாபுரத்தில் ஆர்ப்பரிக்கும் மாடுகளும், மாடுபிடி வீரர்களும் -வீடியோவை பாருங்க!
Avaniyapuram Jallikattu 2026: சீறிப்பாயும் காளைகள்.. அவனியாபுரத்தில் ஆர்ப்பரிக்கும் மாடுகளும், மாடுபிடி வீரர்களும் -வீடியோவை பாருங்க!
விவசாயிகளுக்கு ரூ. 111 கோடி.! வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட்- பொங்கல் பண்டிகையில் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
விவசாயிகளுக்கு ரூ. 111 கோடி.! வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட்- பொங்கல் பண்டிகையில் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
ABP Premium

வீடியோ

”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
Avaniyapuram Jallikattu 2026: சீறிப்பாயும் காளைகள்.. அவனியாபுரத்தில் ஆர்ப்பரிக்கும் மாடுகளும், மாடுபிடி வீரர்களும் -வீடியோவை பாருங்க!
Avaniyapuram Jallikattu 2026: சீறிப்பாயும் காளைகள்.. அவனியாபுரத்தில் ஆர்ப்பரிக்கும் மாடுகளும், மாடுபிடி வீரர்களும் -வீடியோவை பாருங்க!
விவசாயிகளுக்கு ரூ. 111 கோடி.! வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட்- பொங்கல் பண்டிகையில் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
விவசாயிகளுக்கு ரூ. 111 கோடி.! வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட்- பொங்கல் பண்டிகையில் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Hyundai Exter Offer: 1 லட்சம் ரூபாய் தள்ளுபடி.. பட்ஜெட் கார் Hyundai Exter-ஐ ஏன் வாங்க வேண்டும்?
Hyundai Exter Offer: 1 லட்சம் ரூபாய் தள்ளுபடி.. பட்ஜெட் கார் Hyundai Exter-ஐ ஏன் வாங்க வேண்டும்?
TVK Vijay: தை 1ம் தேதி தமிழ் புத்தாண்டா? - பொங்கல் வாழ்த்து சொல்லி வாங்கி கட்டிய விஜய்!
TVK Vijay: தை 1ம் தேதி தமிழ் புத்தாண்டா? - பொங்கல் வாழ்த்து சொல்லி வாங்கி கட்டிய விஜய்!
Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!
Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!
Happy Pongal 2026 Wishes: தைத்திருநாளில் நட்புக்கும் உறவுக்கும் அனுப்ப 10 புதுமையான வாழ்த்துகள் இதோ!
Happy Pongal 2026 Wishes: தைத்திருநாளில் நட்புக்கும் உறவுக்கும் அனுப்ப 10 புதுமையான வாழ்த்துகள் இதோ!
Embed widget