MookuthiAmman 2 Review : அம்மன் அவதாரம் கைகொடுத்ததா? சுந்தர் சி மேஜிக் பலித்ததா? மூக்குத்தி அம்மன் 2 விமர்சனம் இதோ
Mookuthi Amman 2 Review : சுந்தர் சி இயக்கத்தில் நயன்தாரா நடித்து இன்று திரையரங்கில் வெளியாகியுள்ள மூக்குத்தி அம்மன் 2 படத்தின் விமர்சனம் இதோ

சுந்தர்.சி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘மூக்குத்தி அம்மன் 2: மகா சக்தி’ திரைப்படம் இன்று தீபாவளியை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. 2020-ல் வெளியான முதல் பாகத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்கிய நிலையில், இரண்டாம் பாகத்தை சுந்தர்.சி இயக்கியுள்ளார். நயன்தாரா அம்மனாக நடிக்கும் இப்படத்தில் ரெஜினா கேசண்ட்ரா, ஊர்வசி, சினேகா, யோகி பாபு, இனியா, அபிநயா, மைனா நந்தினி, துனியா விஜய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் ரௌடி பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார். மூக்குத்தி அம்மன் 2 படத்தின் சிறப்புத் திரையிடலைப் பார்த்த விமர்சகர்கள் படத்தைப் பற்றி என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று பார்க்கலாம்
மூக்குத்தி அம்மன் 2 விமர்சனம்
மூக்குத்தி அம்மன் 2 படத்தைப் பற்றி விமர்சகர் ஒருவர் இப்படி கூறியுள்ளார் " மூக்குத்தி அம்மன் 2 இது ஒரு சுவாரசியமான, நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட பக்தி சார்ந்த கற்பனைத் திரில்லர் திரைப்படம். முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள நயன்தாரா, அம்மன் வேடத்தில் மிகச் சிறப்பாகவும் அசத்தலாகவும் நடித்துள்ளார்! முதல் பாதி விறுவிறுப்பாகவும், சிலிர்ப்பூட்டும் தருணங்கள், மாஸ் காட்சிகள் மற்றும் கதாபாத்திரங்களை உயர்த்தி காட்டும் காட்சிகளுடனும் அமைகிறது. இரண்டாம் பாதியில் வரும் பின்னணிக் கதை சுவாரசியமாக உள்ளது; முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள ரெஜினா கசான்ட்ரா மற்றும் துனியா விஜய் ஆகியோர் மிகச் சிறப்பாக நடித்துள்ளனர். கிராபிக்ஸ் குழுவினருக்கும், ஹிப்ஹாப் தமிழா வின் பின்னணி இசைக்கும் பாராட்டுக்கள். ஒட்டுமொத்தமாக, இது ஒரு பண்டிகை காலத்திற்கு ஏற்ற திரைப்படம். சுந்தர் சி பாணியிலான கிளைமாக்ஸ், பாடல்கள் படமாக்கப்பட்ட விதம் மற்றும் சிறப்புத் தோற்றங்கள் கேமியோஸ் என அனைத்தும் மாஸ் ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமையும்."
மற்றொரு விமர்சகர் " மூக்குத்தி அம்மன் தமிழ் சினிமாவில் நீண்டகாலமாக விடுபட்டிருந்த 90-களின் 'அம்மன்' வகை திரைப்படங்களை மீண்டும் நினைவூட்டுகிறது. இயக்குநர் சுந்தர் சி, படத்தின் முதல் பாதியை மிகவும் விறுவிறுப்பாகவும், இரண்டாம் பாதியை முழுமையான 'அம்மன்' படமாகவும் சிறப்பாகக் கொண்டு வந்துள்ளார்.
நயன்தாரா இந்த கதாபாத்திரத்திற்கு மிகச்சரியாகப் பொருந்துகிறார் முதல் பாதியில் அவர் வரும் பல காட்சிகள், அவருக்கு ஒரு நாயகிக்கான கம்பீரமான பரிமாணத்தை வழங்குகின்றன. பைராவாக நடித்துள்ள ரெஜினா கசாண்ட்ரா, தனது கதாபாத்திரத்தை மிகவும் நேர்மையாகவும் ஈர்க்கும் வகையிலும் கையாண்டுள்ளார்.
ஹிப்ஹாப் தமிழாவின் இசை இப்படத்தின் மிகப்பெரிய பலம். நயன்தாராவின் கதாபாத்திரத்தை முன்னிலைப்படுத்தும் விதத்தில் அவர் அமைத்துள்ள பின்னணி இசை, இதுவரை பார்த்திராத வகையில் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. படத்தின் முதல் பாதியில், அவரது இசை படத்திற்கு ஒரு தனித்துவமான மெருகைக் கூட்டியுள்ளது.
பி மற்றும் சி (B & C) மையப் பகுதி ரசிகர்களைக் கருத்தில் கொண்டு, 'அம்மன்' வகை திரைப்படங்களை விரும்புபவர்களுக்காகவே பிரத்யேகமாக இந்தத் திரைப்படத்தை சுந்தர் சி உருவாக்கியுள்ளார்." என்று படத்தைப் பாராட்டியுள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்























