மேலும் அறிய

Nayanthara: எந்த விழாவுக்கும் போகாத நான்.. “நேசிப்பாயா” பட விழாவில் நயன்தாரா விளக்கம்!

Nayanthara: இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் மறைந்த நடிகர் முரளியின் இளைய மகன் ஆகாஷ் முரளி அறிமுகமாகும் 'நேசிப்பாயா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார் நயன்தாரா.

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமான ஒரு இயக்குநராக திகழ்பவர் விஷ்ணுவர்தன். தமிழில் 2003ஆம் ஆண்டு வெளியான 'குறும்பு' படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்து இருந்தாலும் அவருக்கு நல்ல ஒரு வரவேற்பை பெற்று கொடுத்தது ‘அறிந்தும் அறியாமலும்’ திரைப்படமே. அதைத் தொடர்ந்து பட்டியல், பில்லா, ஆரம்பம் உள்ளிட்ட ஏராளமான படங்களை இயக்கியுள்ளார். 

 

Nayanthara: எந்த விழாவுக்கும் போகாத நான்.. “நேசிப்பாயா” பட விழாவில் நயன்தாரா விளக்கம்!

தற்போது எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர் நிறுவனத்தின் கீழ் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் விஷ்ணுவர்தன் இயக்கியுள்ள திரைப்படம் 'நேசிப்பாயா'. மறைந்த நடிகர் முரளியின் இளைய மகன் ஆகாஷ் முரளி ஹீரோவாக அறிமுகமாகும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கலந்து கொண்டார். 

'நேசிப்பாயா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகை நயன்தாரா பேசுகையில் "நேசிப்பாயா படத்தின் மூலம் அறிமுகமாகும் ஆகாஷ் முரளிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். அதிதி ஷங்கர் மிகவும் திறமையானவர். அவருக்கு வாழ்க்கையில் எல்லாமே சிறப்பாக மட்டுமே நடக்க என்னுடைய வாழ்த்துக்கள். பொதுவாக நான்  எந்த ஒரு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதில்லை. இந்த விழா எனக்கு மிகவும் ஸ்பெஷல். அதற்கு காரணம் இது என்னுடைய டைரக்டர் மற்றும் மிகவும் நெருக்கமான நண்பர்கள் விஷ்ணு மற்றும் அனுவின் படம். இது என்னுடைய குடும்ப விழா போன்றது. இதில் கலந்து கொள்ள முடியாது என என்னால் மறுத்திருக்கவே முடியாது.

 

Nayanthara: எந்த விழாவுக்கும் போகாத நான்.. “நேசிப்பாயா” பட விழாவில் நயன்தாரா விளக்கம்!


விஷ்ணு ஒரு சிறந்த ஃபிலிம் மேக்கர், நல்ல மனிதர். அவரை எனக்கு 15 ஆண்டுகளுக்கு மேலாக தெரியும். ஆகாஷ் முரளியை நீங்கள் இந்தப் படத்தில் அறிமுகம் செய்து வைப்பதில் மிக்க மகிழ்ச்சி. நிச்சயம் அவருக்கு சிறந்ததை தான் கற்றுக் கொடுத்திருப்பீர்கள். நிச்சயம் இப்படம் ஒரு வெற்றிப்படமாக அமைய வாழ்த்துகள். பல நாட்களுக்குப் பிறகு மிகவும் அழகான ஒரு காதல் கதையாக இது இருக்கும் என நினைக்கிறேன். படக்குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்" எனத் தெரிவித்துள்ளார். 

நடிகை நயன்தாரா 'ஐயா' படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தாலும் அவர் சிறு ப்ரேக் எடுத்து கம்பேக் தந்த பின், அவரது திரைப்பயணத்தில் மிக முக்கியமான டர்னிங் பாய்ண்ட் படமாக அமைந்தது விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அவர் நடித்த 'பில்லா' திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கான நன்றியைத் தெரிவிக்கும் வகையில் தான் அவரின் வரவிருக்கும் 'நேசிப்பாயா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் லான்ச் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திறந்து வைத்தார். 

 

தலைப்பு செய்திகள்

கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
மாஸ் காட்டும் மஹிந்திரா BE 6 Sporteq SUV; வெறும் ரூ.11.45 லட்சம் மட்டுமே- விலை குறைவு ரகசியம் என்ன?
மாஸ் காட்டும் மஹிந்திரா BE 6 Sporteq SUV; வெறும் ரூ.11.45 லட்சம் மட்டுமே- விலை குறைவு ரகசியம் என்ன?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
Hyundai SUV: அப்க்ரேடட் க்ரேட்டா, பாலிசேட், EV, ஹைப்ரிட் - புதுசா 6 எஸ்யுவிக்களை இறக்கும் ஹுண்டாய் - முழு விவரம்
அப்க்ரேடட் க்ரேட்டா, பாலிசேட், EV, ஹைப்ரிட் - புதுசா 6 எஸ்யுவிக்களை இறக்கும் ஹுண்டாய் - முழு விவரம்
Online Property Registration : பத்திர பதிவிற்கு இன்று முதல் நேரில் வர வேண்டாம்.! புது ரூல்ஸ்- என்னென்ன ஆவணங்கள் தேவை.? லிஸ்ட் இதோ..
பத்திர பதிவிற்கு இன்று முதல் நேரில் வர வேண்டாம்.! புது ரூல்ஸ்- என்னென்ன ஆவணங்கள் தேவை.? லிஸ்ட் இதோ..
சூப்பர் ப்ளான்.. காலியாக இருக்கும் கோயில் நிலங்கள்.. வருவாயை அதிகரிக்க தவெக அரசு போட்ட ஸ்கெட்ச்!
சூப்பர் ப்ளான்.. காலியாக இருக்கும் கோயில் நிலங்கள்.. வருவாயை அதிகரிக்க தவெக அரசு போட்ட ஸ்கெட்ச்!
Embed widget