மேலும் அறிய
Advertisement
விதவிதமான போஸ்கள்... தாகம் தீர்க்கும் நயன் - விக்கி ஸ்டிக்கர்ஸ்! பலத்த பாதுகாப்பில் திருமண மண்டபம்!
இன்னும் சற்று நேரத்தில் நயன்தாரா திருமணம் நடைபெற உள்ளது
நடிகை நயன்தாராவும், டைரக்டர் விக்னேஷ் சிவனும் 6 வருடங்களாக காதலித்து வருகிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு இவர்களின் நிச்சயதார்த்தம் நடந்தது. திருப்பதியில் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும், திருமண மண்டபத்தை நேரில் சென்று பார்த்து வந்ததாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில் நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் மாமல்லபுரத்தில் இன்று (9-ந் தேதி) நடக்கிறது.
நானும் ரவுடி தான் மூலம் காதல் வயப்பட்ட இருவரும் தற்போது திருமண பந்தத்தில் இணையவுள்ளனர். இவர்களது திருமணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சமீபத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பில் இயக்குனர் விக்னேஷ் சிவன் அறிவித்தார். திருமணத்திற்கு பிறகு வருகிற ஜூன் 11-ந் தேதி நயன்தாரா உடன் வந்து பத்திரிக்கையாளர்களை சந்திக்க உள்ளதாகவும் விக்னேஷ் சிவன் கூறி இருந்தார்.
பாதுகாப்பு ஏற்பாடுகள்
சுமார் 250 பேர் வரை மட்டுமே நயன்தாராவின் திருமணத்திற்கு அடைக்கப்பட்டுள்ளார்கள். நயன்தாராவின் திருமணத்திற்கு வருபவர்கள், பாரம்பரிய உடை அணிந்து வரவேண்டும், ஓட்டலுக்குள் வருவதற்கு என குறிப்பிட்ட பாஸ்வேர்ட் என முழு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதேபோல ஓட்டலில் உள்ள 240 க்கும் மேற்பட்ட அறைகள் அனைத்தும், இரண்டு நாளுக்கு முழுமையாக புக் செய்யப்பட்டுள்ளது. ஹோட்டலுக்குள் நுழையும்போது ஒவ்வொருவரும் முழு சோதனைக்கு பின்பே அனுமதிக்கப்படுகிறார்கள்.
மொபைல் போன் நோ என்ட்ரி
ஓட்டலில் பணிபுரியும் பணியாளர்கள் மூலம் திருமண புகைபடங்கள் உள்ளிட்டவை வெளியாகக் கூடாது என்பதால், ஹோட்டலில் பணிபுரியும் பணியாளர்கள் யாரும் மொபைல் போன் கொண்டு வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக, நயன்தாராவின் திருமணத்தை வீடியோவாக வெளியிட ஒரு OTT அடித்தளம் ஒப்பந்தம் செய்து இருப்பதால் இந்த முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலந்து கொள்பவர்கள் யார்
மகாபலிபுரத்தில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலான ஷெரட்டன் பார்க்கில் இன்று நடைபெற உள்ள நயன்தாரா திருமணத்தில் குறிப்பிட்ட விஐபிக்கள் மட்டுமே கலந்து கொள்ள உள்ளனர். பாலிவுட் நடிகர் ஷாருக்கான், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், விஜய், அஜித் , சூர்யா மற்றும் டைரக்டர்கள் என பிரபலங்களின் பட்டாளமே பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தயார் நிலையில் காவல்துறையினர்
தற்பொழுது தமிழ் நடிகைகளில் அதிக அளவு ரசிகர் பட்டாளங்கள் கொண்ட நடிகையாக நயன்தாரா விளங்கி வருகிறார். லேடிஸ் சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் நயன்தாராவின் திருமணம் என்பதால், ரசிகர்கள் ஓட்டல் நுழைவாயில் உருவாவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர்
ஸ்டிக்கர்ஸ்
இதனிடையே நயன் - விக்கி ஜோடியின் விதவிதமான புகைப்பட ஸ்டிக்கர்கள் ஒட்டிய வாட்டர் பாட்டில் மணடபத்தில் அனைவருக்கும் வழங்கப்பட்டு வருகிறது.
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
உலகம்
விளையாட்டு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion