Nawazuddin Siddiqui | ‛பாலிவுட்ல கருப்பா இருக்க பெண்ணை ஒதுக்குவாங்க’ - நிறவெறி குறித்து ‘பேட்ட’ பட வில்லன் ஆதங்கம்!
நவசுதீனுக்கு ஆரம்ப காலத்தில் திருடன் , கொள்ளைக்காரன் , பிச்சைக்காரன் போன்ற கதாபாத்திரங்கள்தான் வழங்கப்பட்டதாம், அதற்கு காரணம் அவர் தோற்றம்தான் என கூறப்படுகிறது.
பாலிவுட் சினிமாபில் முன்னணி நடிகருள் ஒருவராக இருப்பவர் நடிகர் நவாசுதீன் சித்திக். தமிழில் ரஜினி நடித்த பேட்ட பட்டத்தில் வில்லனாக நடித்திருந்ததன் மூலம் , தமிழக ரசிகர்களுக்கு பரீட்சியமானார். விளிம்பு நிலையிலிருந்து படிப்படியாக உயர்ந்தவர் நவாசுதீன் சித்திக் என்பது அவரின் ரசிகர்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். நவாசுதீன் ஒரு வெர்சட்டைல் நடிகர் என்பதை தாண்டி தனது கருத்துகளையும் அவ்வபோது ஆணித்தனமாக பதிய வைத்துக்கொண்டிருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், பாலிவுட்டில் நிறவெறி இருக்கிறது என பகிரங்கமாக போட்டுடைத்துள்ளார். அந்த பேட்டியில் “ பாலிவுட்டில் யாரும் ஒருவருக்கொருவர் நட்போடு பழகுவதில்லை.அங்கு நிறத்தின் அடிப்படியிலேயே வாய்ப்புகள் வழங்கப்படுகிறது. அது நடிகராக இருந்தாலும் சரி , இயக்குநராக இருந்தாலும் சரி. ஒரு நடிகை கருப்பாக இருந்தால் ,அவர் இங்கு புறக்கணிக்கப்படுகிறார். நானும் உயரம் காரணமாக ஆரம்பத்தில் புறக்கணிக்கப்பட்டேன் . எனது திறமையால் மட்டுமே தற்போது எனக்கான அங்கீகாரம் கிடைத்துள்ளது.ஒரு படம் நன்றாக உருவாக வேண்டுமானால் , திறமையான நடிகர், நடிகைகளை நடிக்க வைக்க வேண்டும் ஆனால் அந்த நிலை இந்தி சினிமாவில் இல்லை “ என குறிப்பிட்டுள்ளார்.
View this post on Instagram
முன்னதாக பல நடிகர் நடிகைகள் பாலிவுட்டில் நெப்போட்டிசம் என்னும் வாரிசு நடிகர், நடிகைகளுக்குத்தான் மவுசு என்றும் மற்றவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை என்றும் , அப்படியே அவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டாலும் கரன் ஜோகர் போன்ற சில அதிகாரமிக்க நபர்கள் அவர்களை வளரவிடுவதில்லை என குற்றச்சாட்டுகள் அடுக்கடுக்காக முன்வைக்கப்படுகிறது. இந்நிலையில் நவாசுதீன் சித்திக் பேசிய வெளியப்படையான கருத்துகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நவசூதின் சித்திக் சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்தவர். கல்லூரி படிப்பை முடித்த பின்னர் குடும்ப வறுமை காரணமாக சிறிது காலம் பெட்ரோல் பங்கில் வேலை செய்துள்ளார்.அதன் பிறகு சினிமா மீது இருந்த காதல் காரணமாக ஒரு நாடக ட்ரூப்பில் வேலைக்கு சேர்ந்தாராம். அங்கு நடிகர்களுக்கு டீ கொடுப்பது, மேஜை சுத்தம் செய்வது போன்ற வேலைகளை செய்து வந்துள்ளார். கருப்பாகவும் ஒல்லியாகவும் இருப்பதாலேயே பல இன்னல்களை சந்தித்து வந்திருக்கிறார் நவாசுதீன்.
View this post on Instagram
மிகுந்த போராட்டத்திற்கு பிறகு அவ்வபோது படங்கள், விளம்பரங்கள் என கூட்டத்தில் ஒருவராக தலைக்காட்டிய நவசுதீனுக்கு ஆரம்ப காலத்தில் திருடன் , கொள்ளைக்காரன் , பிச்சைக்காரன் போன்ற கதாபாத்திரங்கள்தான் வழங்கப்பட்டதாம், அதற்கு காரணம் அவர் தோற்றம்தான் என கூறப்படுகிறது. சில இயக்குநர்கள் வெளிப்படையாகவே இவன் இது போன்ற கதாபாத்திரத்திற்கு சரியாக பொருந்துவான் என கூறுவார்களாம். அப்போதைய தான் அனுபவத்த நிறவெறியின் அனுபவத்தின் மூலமாகத்தான் , மற்றவர்களின் குரலாய் பேசியிருகிறார் நவாசுதீன்.