மேலும் அறிய

Natchathiram Nagargirathu: வித்தியாசமான போஸ்டர்! வெளியானது பா.ரஞ்சித்தின் அடுத்த பட ஃபர்ஸ்ட் லுக்!

நட்சத்திரம் நகர்கிறது படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியாக உள்ளதாக இயக்குனர் பா.ரஞ்சித் அறிவித்திருந்தார். அதன்படி இன்று மாலை படத்தின் போஸ்டர் வெளியானது

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் பா.ரஞ்சித். சார்பட்டா படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் ஆக்‌ஷன் படத்தில் இறங்குவார் என்று எதிர்பார்த்த நிலையில், பா.ரஞ்சித் அட்டகத்தி பாணியில் அழகிய காதல் கதையை இயக்குவதாக அறிவித்தார். இதன்படி, நட்சத்திரங்கள் நகர்கிறது என்ற காதல் படத்தை தற்போது சத்தமே இல்லாமல் இயக்கி முடித்துள்ளார்.

இந்த நிலையில், இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியாக உள்ளதாக இயக்குனர் பா.ரஞ்சித் அறிவித்திருந்தார். அதன்படி இன்று மாலை படத்தின் போஸ்டர் வெளியானது. படத்தின் போஸ்டர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.ஒரு பெண் தலைவிரிகோலமாய் இருப்பதும், அதில் கதாபாத்திரங்கள் இருப்பதுபோன்றும் போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.  இப்படத்தின் இசையமைப்பாளராக தென்மா பணியாற்றியுள்ளார். ரஞ்சித்தின் இசை கூட்டணியான சந்தோஷ் நாராயணனை இப்படத்தில் பணியாற்றவில்லை என்பது ரசிகர்களிடையே சோகத்தை உண்டாக்கியுள்ளது. 

முன்னதாக பர்ஸ்ட் லுக்குக்கான அப்டேட்டுக்கே ஒரு புகைப்படத்தை பகிர்ந்திருந்தார் ரஞ்சித். கருமை, நீலம் கலந்த வண்ணங்களால் ஆன புகைப்படத்தை பகிர்ந்த ரஞ்சித் “காதல் ஒரு அரசியல்” என்று பதிவிட்டிருந்தார். அந்த போஸ்டர் உருவான வீடியோவையும் அவர் பகிர்ந்திருந்தார்.

நட்சத்திரம் நகர்கிறது திரைப்படத்தில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், கலையரசன், ஹரிகிருஷ்ணன், டான்சிங் ரோஸ் ஷபீர் ஆகியோர் நடித்துள்ளனர். கிஷோர்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். இயக்குனர் பா.ரஞ்சித் சார்பட்டா படத்திற்கு முன்பு பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காக போராடிய பிர்சா முண்டாவின் வாழ்க்கை வரலாற்றையே படமாக்க திட்டமிட்டிருந்தார். ஆனால், சில காரணங்களால் அது தள்ளிப்போனது. சார்பட்டா படத்திற்கு கிடைத்த பிரம்மாண்ட வரவேற்பிற்கு பிறகு மீண்டும் பிர்சா முண்டாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுப்பார் என்று எதிர்பார்த்த நிலையில், ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக காதல் படத்தை எடுத்துள்ளார்.

காட்சி ஊடகத்துறையில் 7 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். சோஷியல் மீடியா இன்சார்ஜ், டிக்கர் இன்சார்ஜ், கன்டண்ட் ரைட்டர், கன்டண்ட் இன் சார்ஜ் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் / பணியாற்றி வருபவர். அனைத்து பிரிவு செய்திகளையும் திறம்பட கையாளக் கூடிய நபர். குறிப்பாக சினிமா ரிவியூ, டெக்னாலஜி, ஆட்டோமொபைல் பிரிவுகளை அதிகம் பின்பற்றி எழுதுபவர். தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கதை, கவிதை, கட்டுரை என தொடர்ந்து எழுதி வருபவர்.
Read More

தலைப்பு செய்திகள்

Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
Hyundai Creta EV On EMI: 475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
iPhone 17 Pro Max Discount: ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
Embed widget