மேலும் அறிய

ஜெய் பாலையா...வெளியானது அகண்டா 2 படத்தின் மிரட்டும் டிரைலர்

Akhanda 2: Thaandavam Trailer : காட் ஆஃப் மாஸஸ் நந்தமூரி பாலகிருஷ்ணா நடித்து உருவாகியுள்ள அகண்டா 2: தாண்டவம்  டிரெய்லர் வெளியானது

அகண்டா 2 : தாண்டவம் டிரைலர் 

காட் ஆஃப் மாஸஸ் நந்தமூரி பாலகிருஷ்ணா மற்றும் ப்ளாக்பஸ்டர் இயக்குநர் போயபாடி ஶ்ரீனு  கூட்டணியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும்  மாபெரும் ஆன்மீக-ஆக்சன் அதிரடி திரைப்படமான அகண்டா 2: தாண்டவம், வரும் டிசம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாவதற்குத் தயாராகியுள்ளது. தற்போது இந்த திரைப்படத்திற்காக நாடு முழுவதும் மிக தீவிரமான மற்றும் பரவலான புரமோசன் பணிகள் நடைபெற்று வருகிறது.

ராம் ஆசம்டா மற்றும் கோபி ஆசம்டா தயாரிப்பில், 14 ரீல்ஸ் பிளஸ் பேனரில், M. தேஜஸ்வினி நந்தமூரி வழங்கும் இந்தப் படத்தின் கிளிம்ப்ஸ் மற்றும் பாடல்களால் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இன்று பெங்களூரில் நடைபெற்ற விழாவில், கன்னட நடிகர் சிவ ராஜ்குமார் முன்னிலையில்,  படத்தின் தெலுங்கு மற்றும் தமிழ் டிரெய்லர்கள் வெளியிடப்பட்டது.

டிரெய்லர் ஒரு கடுமையான எச்சரிக்கையுடன் தொடங்குகிறது. இந்தியாவின் ஆன்மீக அடித்தளத்தை அழிக்க, நாட்டின் உள்ளும் வெளியும் செயல்படும் தீயசக்திகள் ஒன்று சேர்கின்றன. இவர்களின் நோக்கம் — சனாதன  ஹைந்தவ தர்மத்தை முழுமையாக அழித்து, தேசத்தை குழப்பமும் பயமும் நிறைந்த நிலைக்கு தள்ளுவது. ஆனால் நம்பிக்கை குலையும் அந்த தருணத்தில் — தெய்வீக தீப்பொறி போல எழும் சக்தி… தான் அகண்டா!புராண வலிமையும் தேசபக்தியும் கலந்த ஒரு அதீத சக்தியாக, தீயதை சுட்டெரிக்க அகண்டா  எழுகின்றார்.

இயக்குநர் போயபாடி ஶ்ரீனு  இந்த முறை மிக விரிவான, எல்லைகளைத் தாண்டும் தொலைநோக்கு பார்வையில் படத்தை உருவாக்கியுள்ளார். ஆன்மீக ஆற்றலும் தேசிய பாதுகாப்பும் ஒன்றிணையும், பெரும் உலகை அகண்டா 2 கட்டியெழுப்புகிறது. கும்பமேளா காட்சி டிரெய்லரின் மிகப்பெரிய ஈர்ப்புகளில் ஒன்றாக அமைந்துள்ளது. நந்தமூரி பாலகிருஷ்ணாவின் கோபம் — தெய்வீகத்தின் வடிவம்.அவரது சக்தி —  நிறுத்த முடியாத புயல்.இரண்டு கதாபாத்திரங்களில் நடித்தாலும், அகண்டா அவதாரம் திரையை  முழுமையாக ஆட்சி செய்கிறது. அவரது நடை, பார்வை, வசனங்கள்,  தெய்வீக பாதுகாவலனின் உருவத்தை நினைவூட்டுகின்றன.

ஆதி பினிசெட்டி வலுவான வில்லனாக வருகிறார். சம்யுக்தா நாயகியாக நடித்துள்ளார். ஹர்ஷாலி மால்ஹோத்ராவின் சிறிய காட்சிகள் கதையின்  உணர்ச்சியை மேலும் ஆழப்படுத்துவதாக அமைந்துள்ளது.  படத்தின் தொழில்நுட்பத் தரம் சிறப்பாக உள்ளது.ஒளிப்பதிவாளர்கள் C. ராம்பிரசாத் மற்றும் சந்தோஷ் D டெடாகே  — ஒவ்வொரு ஃபிரேமிலும் பெரும் பிரம்மாண்டத்தையும், அற்புதமான உலகையும்  உருவாக்குகியுள்ளனர்.இசையமைப்பாளர் தமன் S உடைய  அதிரடி பின்னணி இசை — தெய்வீக தாளம் போல காட்சிகளின் தாக்கத்தை உயர்த்துகிறது. தம்மிராஜுவின் எடிட்டிங் கச்சிதமாகவும்,  A.S. பிரகாஷின் கலை அமைப்பு படத்தை இன்னும் பிரம்மாண்டமாக மாற்றியுள்ளது.

தேசபக்தி, ஆன்மீக வலிமை மற்றும் மாஸ் எலிவேஷன் — இந்த மூன்றையும் இணைத்து, அகண்டா 2 டிரெய்லர் உண்மையான NBK ஸ்டைல், சர்ஜிகல் ஸ்டிரைக் போல தாக்கத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாக சானதான ஹைந்தவ தர்மம் மையமாக இருப்பது, முழு இந்திய ரசிகர்களுக்கும் பெரும் ஈர்ப்பாக அமைந்துள்ளது. அகண்டா 2 - தாண்டவம்  திரைப்படம் வரும்  டிசம்பர் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

தலைப்பு செய்திகள்

Suriya:
Suriya: "20 வயது இடைவெளி மனப்போராட்டமே விஸ்வநாத் அன் சன்ஸ்.." மனம் திறந்த நடிகர் சூர்யா
Karthigai Deepam: ரேவதிக்கு தெரிந்த உண்மை.. அதிர்ச்சியில் உறைந்த சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ரேவதிக்கு தெரிந்த உண்மை.. அதிர்ச்சியில் உறைந்த சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
EV Subsidy: அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
iPhone 18 Pro Max Vs Google Pixel 11 Pro XL: ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ்-ஆ.? கூகுள் பிக்சல் 11 ப்ரோ XL-ஆ.? எது பவர்ஃபுல்லான போன்.? இதோ ஒப்பீடு
ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ்-ஆ.? கூகுள் பிக்சல் 11 ப்ரோ XL-ஆ.? எது பவர்ஃபுல்லான போன்.? இதோ ஒப்பீடு
Mahindra Vision S: வர்றான் டா குட்டி சிங்கம்.! ஆகஸ்ட் 15-ல் விஷன் எஸ்-ஐ வெளியிடும் மஹிந்திரா.? எகிறும் எதிர்பார்ப்பு
வர்றான் டா குட்டி சிங்கம்.! ஆகஸ்ட் 15-ல் விஷன் எஸ்-ஐ வெளியிடும் மஹிந்திரா.? எகிறும் எதிர்பார்ப்பு
Embed widget