மேலும் அறிய

நயனுக்கு ஓரவஞ்சனை; நாக சைதன்யா திருமண ஒளிபரப்பு உரிமையை பலே தொகைக்கு வாங்கிய நெட்பிளிக்ஸ்!

நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலா திருமண வீடியோவை ஒளிபரப்ப நெட்பிளிக்ஸ் நிறுவனம் பல கோடி கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

தமிழ் சினிமாவில் புதிய டிரெண்ட்:

திரையுலகில் முன்னணி நடிகர் - நடிகைகள் கடந்த சில வருடங்களாக,  தங்களின் வீடியோ வீடியோவை ஒளிபரப்பும் உரிமையை ஓடிடி நிறுவனங்களுக்கு விற்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இது போன்ற டிரெண்ட் இப்போது புதிதாக உருவாகி உள்ளது. அதற்கு முக்கிய காரணமே நயன்தாரா தான்.

நெட்பிளிக்ஸ் ரூ.25 கோடி:

நானும் ரௌடி தான் படம் மூலமாக விக்கியை காதலிக்க தொடங்கி, இப்போது இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோர்களான நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தங்களது திருமண வீடியோவை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திற்கு விற்றுள்ளனர். 'நயன்தாரா பியாண்ட் தி ஃபேரி டேல்' என்ற பெயரில் ஆவணப்படமாக இந்த வீடியோ நயன்தாராவின் பிறந்தநாளான நவம்பர் 19- ஆம் தேதி வெளியானது.  இந்த ஆவணப்படத்திற்காக நெட்பிளிக்ஸ் ரூ.25 கோடி பணம் நயன் - விக்கிக்கு கொடுத்தது.

நயனுக்கு ஓரவஞ்சனை; நாக சைதன்யா திருமண ஒளிபரப்பு உரிமையை பலே தொகைக்கு வாங்கிய நெட்பிளிக்ஸ்!

நயன்தாரா  - தனுஷ் மோதல்

இந்த ஆவணப்படத்தால் தான் நயன்தாரா மற்றும் தனுஷிற்கு இடையில் சண்டை உருவானது. தன்னோட தயாரிப்பில் வெளியான படத்தின் காட்சிகளை பயன்படுத்தியதற்காக தனுஷ் ரூ.10 கோடி கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இதற்கு நயன்தாரா 3 பக்க நீளத்திற்கு அறிக்கை வெளியிட்டு சட்ட ரீதியாக எதிர்கொள்வேன் என்று கூறியிருந்தார். நயன்தாரா மீது சட்ட ரீதியாக தனுஷ் வழக்கு தொடரவும் தற்போது நீதி மன்றம் அனுமதி கொடுத்துள்ளது.

நாக சைதன்யா – சோபிதா துலிபாலா திருமணம்:

இந்த நிலையில் தான் இப்போது அதே டிரிக்கை பாலோ பண்ணி தெலுங்கு நடிகரான நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலா ஜோடி தங்களது திருமண வீடியோவை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திற்கு விற்றுள்ளனர். வரும் டிசம்பர் 4 ஆம் தேதி நாக சைதன்யா மற்றும் சோபிதா ஜோடியின் திருமணம் நடைபெற இருக்கிறது. இந்த திருமண நிகழ்ச்சியில் ஒட்டு மொத்த சினிமா உலகமும் கலந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நயனுக்கு ஓரவஞ்சனை; நாக சைதன்யா திருமண ஒளிபரப்பு உரிமையை பலே தொகைக்கு வாங்கிய நெட்பிளிக்ஸ்!

நெட்பிளிக்ஸ் ஒளிபரப்பு ரைட்ஸ்:

இந்த நிலையில் தான் நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலா திருமண நிகழ்ச்சியை ஒளிபரப்பும் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. இதற்காக அந்த நிறுவனம் ரூ.50 கோடி வரை கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதிக தொகை கொடுக்க ஒரு காரணமும் இருக்கிறதாம். அதாவது, தெலுங்கு பாரம்பரிய முறைப்படி 8 மணி நேரம் நடக்கும் திருமணம் என்பதால் இவ்வளவு பெரிய தொகையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

சோபிதா துலிபாலா பொன்னியின் செல்வன் 1 மற்றும் 2ஆம் பாகங்களில் நடித்து பிரபலமானவர். நாக சைதன்யா ஏற்கனவே நடிகை சமந்தாவை திருமணம் செய்து கொண்டு 4 ஆண்டுகள் வாழ்ந்து நிலையில் பின்னர் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

வாய்ப்புக்காக அப்பாவை பயன்படுத்தும் சாந்தனு..பாக்யராஜ் பெயரில் வெளியான அறிக்கையால் சர்ச்சை
வாய்ப்புக்காக அப்பாவை பயன்படுத்தும் சாந்தனு..பாக்யராஜ் பெயரில் வெளியான அறிக்கையால் சர்ச்சை
அப்பா விஜயைப் பற்றி ஜேசன் சஞ்சய் பேசிய வீடியோ வைரல்...தந்தை மகன் மோதலுக்கு முற்றுப்புள்ளி!
அப்பா விஜயைப் பற்றி ஜேசன் சஞ்சய் பேசிய வீடியோ வைரல்...தந்தை மகன் மோதலுக்கு முற்றுப்புள்ளி!
பராசக்தி படத்திற்கு சுதா கொங்காராவுக்கு பேசப்பட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா ?
பராசக்தி படத்திற்கு சுதா கொங்காராவுக்கு பேசப்பட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா ?
Suriya 48 : சூர்யா 48 பட பூஜை ஆல்பம்
Suriya 48 : சூர்யா 48 பட பூஜை ஆல்பம்

வீடியோ

Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை
TVK Reels Viral Video : எம்.எல்.ஏ CHAIR-ல் தவெகவினர்! தொடரும் ரீல்ஸ் அட்டூழியம்.. வைரல் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
SP Velumani: இபிஎஸ்-க்கு டாடா? அண்ணாமலைக்கு தூணாக மாறுகிறாரா எஸ்பி வேலுமணி?
SP Velumani: இபிஎஸ்-க்கு டாடா? அண்ணாமலைக்கு தூணாக மாறுகிறாரா எஸ்பி வேலுமணி?
TVK Government : ’தவெக அரசை கவிழ்க்க திட்டம்’ சதி நடந்தது எப்படி?-பரபரப்பு தகவல்கள்..!
’தவெக அரசை கவிழ்க்க திட்டம்’ சதி நடந்தது எப்படி?
விஜய்க்கு ஸ்டாலின் போட்ட கணக்கு... சவால் விடும் இடதுசாரிகள்! தமிழக அரசியலில் பரபரப்பு!
விஜய்க்கு ஸ்டாலின் போட்ட கணக்கு... சவால் விடும் இடதுசாரிகள்! தமிழக அரசியலில் பரபரப்பு!
Conspiracy against TVK Government : 'தவெக ஆட்சியை கவிழ்க்க செந்தில்பாலாஜி தம்பி சதி’ போலீஸ் பரபரப்பு அறிக்கை..!
Conspiracy against TVK Government : 'தவெக ஆட்சியை கவிழ்க்க செந்தில்பாலாஜி தம்பி சதி’ போலீஸ் பரபரப்பு அறிக்கை..!
Aadi Month Rasi Palan: பண வரவும், திடீர் அதிர்ஷ்டமும் தேடி வரப்போகும் ராசிகள்! 12 ராசிகளுக்கான ஆடி மாத ராசி பலன்
பண வரவும், திடீர் அதிர்ஷ்டமும் தேடி வரப்போகும் ராசிகள்! 12 ராசிகளுக்கான ஆடி மாத ராசி பலன்
வைகோவுடன் சேர்ந்து சிஎம் விஜய் குதிரை பேரம்.! கூட்டுச்சதி செய்திருக்காங்க- ஆளுநருக்கு திமுக பரபரப்பு புகார்
வைகோவுடன் சேர்ந்து சிஎம் விஜய் குதிரை பேரம்.! கூட்டுச்சதி செய்திருக்காங்க- ஆளுநருக்கு திமுக பரபரப்பு புகார்
TNEA Counselling 2026 Date: ஜூலை 13 முதல் பொறியியல் கலந்தாய்வு- பொதுப்பிரிவுக்கு எப்போ? துணை கவுன்சிலிங்? முக்கிய தேதிகள்!
TNEA Counselling 2026 Date: ஜூலை 13 முதல் பொறியியல் கலந்தாய்வு- பொதுப்பிரிவுக்கு எப்போ? துணை கவுன்சிலிங்? முக்கிய தேதிகள்!
Embed widget