மேலும் அறிய

Mysskin | பிரபல ஹாலிவுட் படத்திற்கு ரிவ்யூ செய்த இயக்குநர் மிஷ்கின் !

"திரைப்படத்தின் இயக்குநரும், எழுத்தாளருமான ஜான் கிரஸ்ன்ஸ்கி இந்த பத்து வருடத்தில் ஹாலிவுட் சினிமா கண்டு பிடித்த திறமையான படைப்பாளி."

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநருள் ஒருவராக இருப்பவர் மிஷ்கின். இவரது இயக்கத்தில் விரைவில் பிசாசு படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகவுள்ளது. மாறுபட்ட கதைக்களத்துடன் ஆண்ட்ரியா, விஜய் சேதுபதி, பூர்ணா உள்ளிட்டவர்களின் நடிப்பில் இப்படம் உருவாகியுள்ளது. படத்தின் பாடல் ஒன்று சமீபத்தில் வெளியான நிலையில்  டிரைலர் மற்றும் வெளியீட்டு தேதி விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் John Krasinski இயக்கத்தில் வெளியான A Quiet Place Part II திரைப்படத்தை பார்த்த மிஷ்கின் அந்த படத்தை புகழ்ந்து தள்ளியுள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு A Quiet Place என்னும் ஹாரர் திரைப்படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அதன் தொடர்ச்சியாக வெளியான இரண்டாம் பாகத்தை தனது குழுவினருடன் பார்த்த மிஷ்கின் , இயக்குநரை வெகுவாக பாராட்டியுள்ளார்.

 

 இது குறித்து ட்விட்டரில் பதிவிட்ட மிஷ்கின் “இன்று இரவு ஆங்கிலத் திரைப்படம் quiet place - 2வை எனது பிசாசு குழுவினருடன் பார்த்து வியந்தேன். இரண்டு வருடத்திற்கு முன்பு இந்த திரைப்படத்தின் முதல் பாகத்தைப் பார்த்து வியந்திருந்தேன். இரண்டாவது பாகம் வருகிறது என்று அறிவித்த பொழுது முதல் பாகம் அளவிற்குச் சுவராசியமாய் இருக்காது என நினைத்தேன்.ஆனால் இன்று பார்த்தவுடன் எனது கணிப்பு தவறானதென உணர்ந்தேன்.quiet place - 2 நூறு சதவீதம் சுவராசியமாய் இருந்தது.என்னோடு படம் பார்த்த அனைவரும் இருக்கையின் நுனியிலிருந்து பதட்டத்துடன் பார்த்து ரசித்தனர். திரைப்படத்தின் இயக்குநரும், எழுத்தாளருமான ஜான் கிரஸ்ன்ஸ்கி இந்த பத்து வருடத்தில் ஹாலிவுட் சினிமா கண்டு பிடித்த திறமையான படைப்பாளி. வேற்றுக்கிரக வாசிகள் மனித சமூகத்தை வேட்டையாடுவது தான் கதை.இந்த தெலிதான கருவை எடுத்துக் கொண்டு, திரைக்கதையில் மாயம் செய்திருக்கிறார். தாயும் மூன்று குழந்தைகளும் கொண்ட ஒரு குடும்பம்,அதிலும் ஒரு கைக்குழந்தையை வைத்துக் கொண்டு எப்படி வேற்றுக்கிரக வாசிகளைப் போராடி வெல்கிறார்கள் என்பதை ஓர் அறுவை சிகிச்சை நிபுணரின் துல்லியத்தோடு கையாண்டிருக்கிறார் இயக்குநர்.தாயாக நடிக்கும் எமிலி பிளெண்ட் மிக நேர்த்தியாக தன் கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்திருக்கிறார். இரண்டு குழந்தைகளும் தங்கள் பொறுப்பை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். நடிகர் கிலியன் மர்பியும் தனது பாத்திரத்தைச் செம்மையாகச் செய்திருக்கிறார். இதன் இசையமைப்பாளர் மார்கோ பெல்டிரமியின் இசை உள்ளத்தை வருடுகிறது. கூட்டுகிறது, இத் திரைப்படம் ஓர் உணர்ச்சி குவியல்.இந்த திரில்லர் திரைப்படத்தைத் திரையரங்கில் வந்து பார்க்கும் பொழுதுதான் இதன் தொழில் நுட்பத்தையும்,பிரமாண்டத்தையும் உணர்வீர்கள். இந்த கோவிட் வீடடங்கு காலத்தில் நமக்கு quiet place -2 ஒரு திருவிழா தான். ரசிகர்களே திரையரங்கத்திற்கு வந்து இந்த திரைப்படத்தைப் பாருங்கள்.நாமும் வேற்றுக்கிரக வாசிகளுடன் யுத்தம்செய்யலாம்.அன்புடன் மிஷ்கின் “ என தெரிவித்துள்ளார். 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

வள்ளல் சி. கந்தசாமி நாயுடு! வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் பூஜையுடன் தொடங்கியது!
வள்ளல் சி. கந்தசாமி நாயுடு! வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் பூஜையுடன் தொடங்கியது!
குக் வித் கோமாளி குரேஷியின் மனைவியிடம் ரூ.10 லட்சம் மோசடி? காங்கிரஸ் நிர்வாகி மீது புகார்!
குக் வித் கோமாளி குரேஷியின் மனைவியிடம் ரூ.10 லட்சம் மோசடி? காங்கிரஸ் நிர்வாகி மீது புகார்!
Entertainment News : பொங்கல் ரேஸில் இருந்து விலகிய டயங்கரம்..D55 படப்பிடிப்பு அப்டேட்..இன்றைய பொழுதுபோக்கு செய்திகள்
Entertainment News : பொங்கல் ரேஸில் இருந்து விலகிய டயங்கரம்..D55 படப்பிடிப்பு அப்டேட்..இன்றைய பொழுதுபோக்கு செய்திகள்
Albert Theatre : ரஜினி ரசிகர்களின் கோட்டை...முடிவுக்கு வரும் ஆல்பர்ட் திரையரங்கத்தின் சகாப்தம்
Albert Theatre : ரஜினி ரசிகர்களின் கோட்டை...முடிவுக்கு வரும் ஆல்பர்ட் திரையரங்கத்தின் சகாப்தம்

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ-வை விசாரிக்கும் யாருக்கும் அஞ்சாதா 'பெண் சிங்கம்' - ' யார் இந்த சிருஷ்டி சிங் ஐபிஎஸ்?
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ-வை விசாரிக்கும் யாருக்கும் அஞ்சாதா 'பெண் சிங்கம்' - ' யார் இந்த சிருஷ்டி சிங் ஐபிஎஸ்?
"தான்தோன்றித்தனமாக நடந்துகொண்ட தவெக அரசு" - திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அண்ணாமலை கண்டனம்!
தீபத்தூணில் தீபம் ஏற்றவில்லை.. விஜய் அரசுக்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள் – இயக்குநர் மோகன் ஜி ஆவேசம்!
தீபத்தூணில் தீபம் ஏற்றவில்லை.. விஜய் அரசுக்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள் – இயக்குநர் மோகன் ஜி ஆவேசம்!
"சங்கி +கொத்தூஸ் இரண்டுக்கும் ஏமாற்றம்" - தீபவிவகாரம் குறித்து பதிவிட்ட மாணிக்கம் தாகூர்!
பட்டையை கிளப்பிய சூர்யவன்ஷி: 52 பந்துகளில் இரட்டை சதம் எடுத்து அசாத்திய ஆட்டம்!
பட்டையை கிளப்பிய சூர்யவன்ஷி: 52 பந்துகளில் இரட்டை சதம் எடுத்து அசாத்திய ஆட்டம்!
திருப்பரங்குன்றத்தில் உச்சக்கட்ட பரபரப்பு... ஏற்றப்பட்ட தீபம் - எங்கு தெரியுமா?
திருப்பரங்குன்றத்தில் உச்சக்கட்ட பரபரப்பு... ஏற்றப்பட்ட தீபம் - எங்கு தெரியுமா?
விண்ணை முட்டிய அரோகரா கோஷம்! - திருவண்ணாமலையில் ஏற்றப்பட்ட மகா தீபம்! எத்தனை நாட்கள் தீபம் எரியும்? எவ்வளவு தூரம் தெரியும்?
விண்ணை முட்டிய அரோகரா கோஷம்! - திருவண்ணாமலையில் ஏற்றப்பட்ட மகா தீபம்! எத்தனை நாட்கள் தீபம் எரியும்? எவ்வளவு தூரம் தெரியும்?
"கள்ளக்குறிச்சி விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்" - வானதி சீனிவாசன் வலியுறுத்தல்!
Embed widget