மேலும் அறிய

GV Prakash Kumar: விஜய் மீது கடுப்பான ஜி.வி.பிரகாஷ்.. நடிக்க வரும்போன் முன் நடந்த ஷாக் சம்பவம்!

விஜயுடன் இருக்கும்போது ஜாலியாக இருக்கும். நாங்கள் நிறைய நேரம் செலவிட்டுள்ளோம். நான் மீண்டும் விஜயுடன் தெறி படத்தில் வேலைப் பார்த்தேன் என ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் விஜயுடன், தான் பணியாற்ற நினைத்த நிலையில், மிஸ்ஸான படங்கள் குறித்து இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தெரிவித்துள்ளார். 

வெயில் படம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி.பிரகாஷ்குமார். அஜித், ரஜினி, விஜய், சூர்யா, தனுஷ் என தமிழ் சினிமாவின் பல முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கும் இசையமைத்து உச்சத்தில் இருந்தார். அப்படியாக 2015ம் ஆண்டு நடிகராக மாறிய ஜி.வி.பிரகாஷ், மறுபக்கம் இசையையும் திறம்பட கையாண்டு வருகிறார். இப்படியாக அவர் நடிப்பில் அடுத்ததாக கயாடு லோஹருடன் நடித்துள்ள இம்மோர்டல் படம் விரைவில் வெளியாகவுள்ளது. 

இந்த நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய ஜி.வி.பிரகாஷ்குமார், தலைவா படத்தில் விஜயுடன் டான்ஸ் ஆடியது பற்றி பேசியுள்ளார். அதாவது, “நான் அந்த பாடலில் விஜயுடன் ஆடுவதற்கு அவரைப் போலவே ஜீன்ஸ் மற்றும் சட்டை கேட்டேன். ஆனால் எனக்கு விஜய் தான் அந்த குர்தாவை கொடுத்தார். எனக்கு ரொம்ப கடுப்பாக இருந்தது. அந்த நடன அசைவும் கடினமாக இருந்தது. அதையே நான் தனியாக பயிற்சி எடுத்துக் கொண்டிருந்ததை சேர் போட்டு விஜய் பார்த்துக் கொண்டிருந்தார். 

பின்னர் என்னிடம் நீ நல்லா பிராக்டிஸ் பண்ற என சொல்லி பாராட்டினார். விஜயுடன் இருக்கும்போது ஜாலியாக இருக்கும். நாங்கள் நிறைய நேரம் செலவிட்டுள்ளோம். நான் மீண்டும் விஜயுடன் தெறி படத்தில் வேலைப் பார்த்தேன். 

இயக்குநர் அட்லீயை ஷங்கரின் உதவியாளராக இருக்கும்போதே எனக்கு பழக்கம். என்னுடைய மயக்கம் என்ன படத்தின் இசையைக் கேட்டு விட்டு ராஜா ராணி படத்தில் மியூசிக் போட வேண்டும் என கேட்டு வந்தார். அந்த படம் சிறப்பாக வந்தது. இன்று வரை ராஜா ராணி படம் இசை பேசப்பட்டு வருகிறது. அதன்பின் என்னுடைய 50வது படமாக தெறி அமைந்தது. அட்லியுடன் வேலை செய்யவே சூப்பரா இருக்கும். தெறி படத்தின் பாடல்கள், பின்னணி இசை எல்லாமே சிறப்பாக இருந்தது. என்னுடைய மிகப்பெரிய கமர்ஷியல் படமாக தெறி அமைந்தது என கூறினார். 

இதன்பின் எனக்கு விஜயுடன் பணியாற்ற சரியான நேரம் அமையவில்லை. சுதா கொங்காரா அல்லது வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் ஒரு படம் நடிக்க, அதற்கு நான் இசையமைப்பதாக இருந்தது. ஆனால் இருவரும் படத்தின் திரைக்கதையை ஒரு வருடம் தேவை என்ற சூழலில் தான் விஜய் பீஸ்ட் படத்தில் நடிக்க சென்றார்.

சுதா கொங்கரா விஜய்க்கு சொன்ன கதை உண்மையிலேயே சிறந்தது. ஆனால் அதை தொடர முடியாதது துரதிஷ்டவசமானது. அதே கதையில் மகேஷ்பாபு நடிப்பதாக இருந்தது. ஆனால் அதுவும் கைவிடப்பட்டது எனவும் ஜி.வி.பிரகாஷ்குமார் தெரிவித்துள்ளார். 

Advertisement

தலைப்பு செய்திகள்

அனிருத் காவ்யா மாறன் திருமணம்: 4 தனி விமானங்கள்...கிரீஸுக்கு புறப்படும் 4 குடும்பங்கள்
அனிருத் காவ்யா மாறன் திருமணம்: 4 தனி விமானங்கள்...கிரீஸுக்கு புறப்படும் 4 குடும்பங்கள்
ரஜினி முதல் ஹாரிசன் ஃபோர்டு வரை...வயசானாலும் ஸ்டைல் மாறாத நடிகர்கள்
ரஜினி முதல் ஹாரிசன் ஃபோர்டு வரை...வயசானாலும் ஸ்டைல் மாறாத நடிகர்கள்
ஜெயிலர் 2 படத்திற்கு முன் ரஜினி காலில் விஜய் விழும் வீடியோ: முருகன் சினிமாஸ் மன்னிப்பு
ஜெயிலர் 2 படத்திற்கு முன் ரஜினி காலில் விஜய் விழும் வீடியோ: முருகன் சினிமாஸ் மன்னிப்பு
சந்தீப் கிஷன் நடிக்கும் ‘கரிகாலா’ திரைப்படம் பூஜையுடன் தொடங்கியது!
சந்தீப் கிஷன் நடிக்கும் ‘கரிகாலா’ திரைப்படம் பூஜையுடன் தொடங்கியது!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்
Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: தவெக வெற்றி பெற்ற தாராபுரம், மதுராந்தகத்திற்கு சிறப்புத் திட்டங்கள்! முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!
CM Vijay: தவெக வெற்றி பெற்ற தாராபுரம், மதுராந்தகத்திற்கு சிறப்புத் திட்டங்கள்! முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!
Chennai Cooum: துர்நாற்றம் வீசாது..! க்ளீனா டூரிஸ்ட் ஸ்பாட் ஆகும் சென்னை கூவம் - டெண்டர் விட்ட தமிழ்நாடு அரசு
துர்நாற்றம் வீசாது..! க்ளீனா டூரிஸ்ட் ஸ்பாட் ஆகும் சென்னை கூவம் - டெண்டர் விட்ட தமிழ்நாடு அரசு
Trichy TVK Conference : ‘திருச்சியை குறி வைத்த முதல்வர் விஜய்’ விரைவில் பிரம்மாண்ட வெற்றி மாநாடு..!
‘திருச்சியை குறி வைத்த முதல்வர் விஜய்’ விரைவில் பிரம்மாண்ட வெற்றி மாநாடு..!
New Secretariat: சென்னைக்கு நடுவே..! பேருந்து, ரயில், மெட்ரோ வசதியுடன் புதிய தலைமை செயலகம் - 13.22 ஏக்கர் திட்டம்
சென்னைக்கு நடுவே..! பேருந்து, ரயில், மெட்ரோ வசதியுடன் புதிய தலைமை செயலகம் - 13.22 ஏக்கர் திட்டம்
MK Stalin : ‘தொடரும் கொலைகள் – போலீஸ் முதல்வர் விஜய் கட்டுப்பாட்டில் இல்லையா? திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை..!
MK Stalin : ‘தொடரும் கொலைகள் – போலீஸ் முதல்வர் விஜய் கட்டுப்பாட்டில் இல்லையா? திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை..!
Shai Hope: அடிச்ச அடி அப்டி..! ஷாய் ஹோப்பை ஏலத்தில் எடுக்க IPL அணிகள் போட்டா போட்டி!
Shai Hope: அடிச்ச அடி அப்டி..! ஷாய் ஹோப்பை ஏலத்தில் எடுக்க IPL அணிகள் போட்டா போட்டி!
Hyundai Neira: 4 பவர்ட்ரெயின்களில் கெத்தா வரும் ஹுண்டாயின் 7 சீட்டர் - லாஞ்ச் எப்போது? வசதி, விலை எப்படி?
4 பவர்ட்ரெயின்களில் கெத்தா வரும் ஹுண்டாயின் 7 சீட்டர் - லாஞ்ச் எப்போது? வசதி, விலை எப்படி?
Hyundai முதல் Kia வரை... அடுத்தடுத்து களமிறங்கப்போகும் ஹைப்ரிட் கார்கள்! என்னென்ன?
Hyundai முதல் Kia வரை... அடுத்தடுத்து களமிறங்கப்போகும் ஹைப்ரிட் கார்கள்! என்னென்ன?
Embed widget