மேலும் அறிய

AR Rahman: ”ஆஹா.. கடைசியா நான் பார்த்துட்டேன்” .. ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்ட வீடியோ!

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மான் அடுத்தடுத்து படங்களுக்கு இசையமைத்து வருகிறார். சமீபத்தில் அவரின் இசையில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்த “லால் சலாம்” படம் வெளியானது.

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ அனைவரையும் கவர்ந்துள்ளது. 

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மான் அடுத்தடுத்து படங்களுக்கு இசையமைத்து வருகிறார். சமீபத்தில் அவரின் இசையில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்த “லால் சலாம்” படம் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. பெரும்பாலான நேரம் வெளிநாடுகளில் இருக்கும் ரஹ்மான் தன்னுடைய படங்களுக்கு இசையமைக்கும் பணியை அங்கிருந்து தான் மேற்கொண்டும் வருகிறார். 

இப்படியான நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது அமெரிக்காவில் உள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டு கடந்த ஆண்டு செப்டம்பரில்  அமெரிக்காவின் நிவாடா மாநிலத்திலுள்ள லாஸ் வேகஸ் நகரில் இசை மற்றும் பொழுதுபோக்கு விஷயங்களுக்கான கோள வடிவ அரங்கம் ஒன்று திறக்கப்பட்டது. இந்த இடத்துக்கு சென்றுள்ள ஏ.ஆர்.ரஹ்மான் அங்கிருந்த ஒரு விஷயத்தை பார்த்து ஆச்சரியப்பட்டுள்ளார். 

View this post on Instagram
 
A post shared by ARR (@arrahman)

ஆம். அந்த அரங்கத்தில் மனிதர்களுடன் உரையாடும் ரோபோ ஒன்று இடம் பெற்றிருந்தது. அதனை வீடியோவாக பதிவிட்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “கடைசியாக மனிதர்களுடன் உரையாடும் ரோபோவை கண்டறிந்தேன்” என தெரிவித்துள்ளார். இந்த வீடியோவின் பின்னணியில் எந்திரன் படத்தில் இடம் பெற்ற “இரும்பிலே ஒரு இருதயம்” பாடல் இடம் பெற்றுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மானின் இந்த பதிவுக்கு பலரும் ஹார்ட்டின்களை பறக்க விட்டுள்ளனர். 

எந்திரன் படம் 

கடந்த 2010 ஆம் ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் “எந்திரன்” படம் வெளியானது. இப்படத்தில் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய், டேனி டென்சோங்பா, சந்தானம், கருணாஸ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். அறிவியலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படம் மிகப்பெரிய பொருட்செலவில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். மனிதர்களின் கண்டுபிடிப்புகளில் ஒன்றாக ரோபோட்களுக்கு உணர்வுகள் வந்தால் எப்படி இருக்கும் என்பதை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டிருந்தது. 

ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்ற எந்திரன் படத்தின் இரண்டாம் பாகம் “2.0” என்ற பெயரில் 2018 ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தையும் ஷங்கர் இயக்கிய நிலையில் ரஜினியே ஹீரோவாக நடித்தார். அதுமட்டுமல்லாமல் ஹீரோயினாக எமி ஜாக்சனும், வில்லனாக அக்‌ஷய் குமாரும் நடித்திருந்தனர். இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்ற நிலையில் ரூ.800 கோடி வசூலை குவித்தது. தமிழ் சினிமாவில் அதிக வசூலை குவித்த படம் என்ற பெருமையும் இன்றுவரை இப்படம் கொண்டுள்ளது. 

தலைப்பு செய்திகள்

குழந்தையுடன் வந்த பல்லவி MLA.. அட்வைஸ் செய்த கார்த்தி சிதம்பரம்.. சண்டைக்கு சென்ற மோகன் ஜி!
குழந்தையுடன் வந்த பல்லவி MLA.. அட்வைஸ் செய்த கார்த்தி சிதம்பரம்.. சண்டைக்கு சென்ற மோகன் ஜி!
Rajinikanth Old Video: இதுவரை பார்க்காத ரஜினியின் வீடியோ.. சூப்பர்ஸ்டார் எவ்ளோ க்யூட்டா இருக்காரு!
Rajinikanth Old Video: இதுவரை பார்க்காத ரஜினியின் வீடியோ.. சூப்பர்ஸ்டார் எவ்ளோ க்யூட்டா இருக்காரு!
திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
SK 27: சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியங்கர்..! அப்போ ப்ளாக்பஸ்டர் கன்ஃபர்மா?
SK 27: சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியங்கர்..! அப்போ ப்ளாக்பஸ்டர் கன்ஃபர்மா?

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
GEM Veeramani: வீரமணி வழக்கு.. 3 மணி நேரம், 80 கேள்விகள்: அருண் IPS-யிடம் கிடுக்குப்பிடி விசாரணை - காவல்துறை தீவிரம்
வீரமணி வழக்கு.. 3 மணி நேரம், 80 கேள்விகள்: அருண் IPS-யிடம் கிடுக்குப்பிடி விசாரணை - காவல்துறை தீவிரம்
நாங்க அடிமை இல்லை.. திருப்பி அடிப்போம்.. உதயநிதி திமுகவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கடும் எச்சரிக்கை!
நாங்க அடிமை இல்லை.. திருப்பி அடிப்போம்.. உதயநிதி திமுகவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கடும் எச்சரிக்கை!
TN Weather News: இன்று உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? - தமிழக வானிலை அறிக்கை
இன்று உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? - தமிழக வானிலை அறிக்கை
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
Rasi Palan Today (13-10-2026): துலாமுக்கு ஏமாற்றம்.. தனுசுக்கு சிரமம்.. அப்ப உங்க ராசிக்கு இன்னைக்கு நல்ல நாளா?
Rasi Palan Today (13-10-2026): துலாமுக்கு ஏமாற்றம்.. தனுசுக்கு சிரமம்.. அப்ப உங்க ராசிக்கு இன்னைக்கு நல்ல நாளா?
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
Embed widget