மேலும் அறிய

MS Dhoni on Chahar: ’தீபக் சாஹர் அருகில் இருந்தால் இப்படி, இல்லையென்றால் அப்படி..’ ஜாலியாக பேசி முடித்த தோனி..!

LGM Audio Trailer Launch: தீபக் சாஹர் எனக்கு போதை பொருள் போன்றவர் என்று படத்தின் டிரைலர் வெளியீடு மற்றும் ஆடியோ வெளியீட்டு விழாவில் தோனி பேசியுள்ளார்.

மகேந்திர சிங் தோனி என்னும் பெயர் எப்போதும் வெற்றிக்குரிய மந்திரமாகவே பார்க்கப்படுகிறது. ஒரு கிரிக்கெட் வீரராக அறிமுகமாகி தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 5வது முறையாக கோப்பையையும் பெற்று தந்தார். கிரிக்கெட்டை தவிர விவசாயத்திலும் பெரும் லாபம் சம்பாதித்து வரும் தோனி, திரைப்பட தயாரிப்பு துறையில் கால் பதித்துள்ளார். 

தோனியின் மனைவி சாக்‌ஷிக்கு ஒரு சினிமா பிரியர். இவர் 'தோனி எண்டர்டெயின்மெண்ட்ஸ்' என்ற பெயரில் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார். மேலும் இந்த நிறுவனத்தின் முதல் படமாக 'எல்ஜிஎம்' (லெட்ஜ் கெட் மேரீட்) உருவானது. 

இந்த படத்தில் ’பியார் பிரேமா காதல்’ , தாராள பிரபு போன்ற தமிழ்  படங்களில் நடித்த ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடிக்க, ‘லவ் டுடே’ படத்தின் மூலம் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற இவானா ஹீரோயினாக நடிக்கிறார். மேலும், நதியா மற்றும் யோகி பாபு முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்தநிலையில், 'எல்ஜிஎம்' படத்தின் டிரைலர் வெளியீடு மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்காக மகேந்திர சிங் தோனியும், சாக்ஷி சிங்கும் ஒன்றாக சென்னை வந்து பங்கேற்றனர். அப்போது பேசிய தோனி, "என்னுடைய டெஸ்ட் அறிமுகமானது சென்னையில் தான், என்னுடைய அதிக டெஸ்ட் ஸ்கோர் சென்னையில் தான், இப்போது தமிழில் எனது முதல் தயாரிப்பு திரைப்படம் - சென்னை எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது, நான் நீண்ட காலத்திற்கு முன்பே இங்கு தத்தெடுக்கப்பட்டேன். 

நான் என் மனைவிக்கு தமிழ் கெட்ட வார்த்தைகள் எதுவும் கற்பிக்கவில்லை. ஏனென்றால் எனக்கு தமிழ் மொழியில் எந்த கெட்ட வார்த்தைகளும் தெரியாது. ஆனால் எனக்கு மற்ற மொழிகளில் தெரியும்.

எங்களுடைய முதல் தயாரிப்பாக எம்ஜிஎம் படத்தை தமிழ் மொழியில் எடுத்திருக்கிறோம். ஒட்டுமொத்த படக்குழுவும் ஒத்துழைத்ததால்தான் இந்தப் படத்தை மிகக்குறுகிய காலகட்டத்தில் அதிவேகமாக எடுக்க முடிந்தது. இதில் பல சீனியர் நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். பல புதிய முகங்கள் அறிமுகமாகி இருக்கிறார்கள். 

நடிகை நதியா தனது கண்களால் படம் முழுக்க தத்ரூபமாக வெளிப்படுத்தியிருக்கிறார். மாமியாருக்கும் மருமகளுக்கும் இடையேயான கதை. இரண்டு பெண்களுக்கு நடுவே ஹரீஷ் கல்யாண் ரொம்பவே சிக்கி நடித்திருப்பார். 

இந்த படத்தை தொடங்கியது முதலே ஒன்றில் மட்டுமே உறுதியாக இருந்தேன். கிரிக்கெட் விளையாடும்போது நாங்கள் நல்ல உணவைத்தான் எதிர்பார்ப்போம். அதுபோல இங்கேயும் அனைவருக்கும் நல்ல உணவை கொடுக்கச் சொன்னோம். நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் உட்படக் குழுவில் உள்ள அனைவருக்கும் நல்ல உணவைக் கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். எம்ஜிஎம் படம் குழந்தைகளுடன் சென்று பார்க்கக்கூடிய நல்ல பொழுதுபோக்கு படம். திருமணம் ஆனவர்களுக்கு வீட்டில் பாஸ் யார் என்பது உங்களுக்கே தெரியும்” என முடித்தார். 

தொடர்ந்து செய்தியாளர்கள் தீபக் சாஹர் குறித்து தோனியிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “ தீபக் சாஹர் எனக்கு போதை பொருள் போன்றவர். அவர் அருகில் இல்லையென்றால் எங்கே என்று தேடுவோம். அதேநேரத்தில் அருகில் இருந்தால் ஏன் இருக்கிறார் என தோன்றும்” என பேசினார். 

தலைப்பு செய்திகள்

கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
CM Vijay 100 Days: தவெக விஜய் அரசின் 100 நாட்கள் - எதிர்கொண்ட பிரச்னைகளும் & சர்ச்சைகளும் - புதுசா & தினுசா முழு லிஸ்ட்
தவெக விஜய் அரசின் 100 நாட்கள் - எதிர்கொண்ட பிரச்னைகளும் & சர்ச்சைகளும் - புதுசா & தினுசா முழு லிஸ்ட்
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
BJP: டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
Cheap Automatic Cars: 25KM மைலேஜ், 6 ஏர்பேக்குகள், ப்ரீமியம் அம்சங்கள் - நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் கார்கள்
25KM மைலேஜ், 6 ஏர்பேக்குகள், ப்ரீமியம் அம்சங்கள் - நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் கார்கள்
Gold and silver rate today : அடித்து ஆடும் தங்கம் விலை.! வாரத்தின் முதல் நாளே ஷாக்- இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ..
அடித்து ஆடும் தங்கம் விலை.! வாரத்தின் முதல் நாளே ஷாக்- இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ..
Seeman:
Seeman: "கொலை கேஸ் போடுங்க.." தமிழனை வேட்டையாடினால் கேட்பதற்கு நாதி இ்ல்லையா? கொந்தளித்த சீமான்
CM விஜய் ஆவேசம்..! நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை - 3 தமிழர்கள் கொல்லப்பட்ட கொடூரம்
CM விஜய் ஆவேசம்..! நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை - 3 தமிழர்கள் கொல்லப்பட்ட கொடூரம்
Embed widget