ரசிகர்களே ரெடியா.! இந்த வாரம் தியேட்டரில் சரவெடியாய் வெடிக்க காத்திருக்கும் படங்கள் இதுதான்..!
இந்த வாரம் வெளியாகவிருக்கும் திரைப்படங்கள் பொன்னியின் செல்வன் 1 , நானே வருவேன் மற்றும் விக்ரம் வேதா.
தமிழ் சினிமா உலகத்தரத்திற்கு உயர்ந்து கொண்டே போகிறது என்பது மறுக்க முடியாத ஒரு உண்மை. அதிலும் சமீபகாலமாக வெளியாகும் படங்களே அதற்கு எடுத்துக்காட்டு. அந்த வகையில் இந்த வாரம் வெளியாகவிருக்கும் திரைப்படங்கள் பொன்னியின் செல்வன்- 1 , நானே வருவேன் மற்றும் விக்ரம் வேதா (ஹிந்தி).
பொன்னியின் செல்வன் 1 - செப்டம்பர் 30 :
இந்த வாரத்தில் சரித்திரத்தில் இடம் பிடிக்க போகும் வரலாற்று திரைப்படம் வெளியாக உள்ளது. அதுதான் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்போடும் ஆவலுடனும் எதிர்நோக்கும் "பொன்னியின் செல்வன்" திரைப்படம். அமரர் கல்கியின் "பொன்னியின் செல்வன்" நாவலை தழுவி அதே பெயரில் திரைப்படமாக்கப்பட்டுள்ள சரித்திர திரைப்படம். இப்படம் செப்டம்பர் 30 ம் தேதி உலகளவில் வெளியாகவுள்ளது. இயக்குநர் மணிரத்னத்தின் கனவு காவியமான இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார், பார்த்திபன், ஜெயராம் மற்றும் பல முன்னணி நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். இதனால் திரை ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த திரையுலகமே இப்படத்திற்காக காத்து இருக்கிறார்கள்.
நானே வருவேன் - செப்டம்பர் 29 :
இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் நடிகர் தனுஷ் நடிப்பில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகி இருக்கும் "நானே வருவேன்" திரைப்படம் வரும் செப்டம்பர் 29ம் தேதி உலகளவில் உள்ள திரையரங்குகளில் வெளியாக தயாராக உள்ளது. இந்த மேஜிக் கூட்டணியில் இதுவரையில் வெளியான அனைத்து திரைப்படங்களுமே சூப்பர் ஹிட் படங்கள் என்பதால் இப்படத்திற்கான எதிர்பார்ப்பும் மிகுந்த அளவில் இருந்து வருகிறது.
#Xclusiv... 'VIKRAM VEDHA' RUN TIME... #VikramVedha certified 'UA' by #CBFC on 26 Sept 2022. Duration: 159.51 min:sec [2 hours, 39 min, 51 sec]. #India
— taran adarsh (@taran_adarsh) September 26, 2022
⭐ Theatrical release date: 30 Sept 2022. pic.twitter.com/EUroiHOP1B
விக்ரம் வேதா - செப்டம்பர் 30 :
இயக்குநர்கள் புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி, மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் 2017 ஆம் ஆண்டு தமிழில் வெளியான திரைப்படம் "விக்ரம் வேதா". இப்படம் ஒரு சூப்பர் ஹிட் பிளாக் பஸ்டர் வெற்றியை கொடுத்தது. உலக அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த "விக்ரம் வேதா" திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு அதே பெயரில் செப்டம்பர் 30ம் திரையிடப்பட உள்ளது. இந்த படத்தில் ஹிருத்திக் ரோஷன் விஜய் சேதுபதி நடித்த வேதா கதாபாத்திரத்திலும், சைஃப் அலி கான் மாதவன் நடித்த விக்ரம் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இவர்களுடன் ராதிகா ஆப்தே, ரோகித் சுரேஷ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். தமிழில் விக்ரம் வேதா படத்திற்கு இசையமைத்த சாம் சி.எஸ் இந்தி ரீமேக்கிற்கு பின்னணி இசை அமைத்துள்ளார்.
ஆகவே இந்த வாரம் திரை ரசிகர்களுக்கு தொடர்ந்து திரை விருந்து தான். அடுத்தடுத்து ஐகான்களின் திரைப்படங்கள் வெளியாவதால் அதை ரசிக்க ரசிகர்கள் தயாராக உள்ளனர்.