மேலும் அறிய

Next Week Movie Release: அடுத்த வாரம் என்னென்ன படம் ரிலீஸ்..? ஒரே நாளில் இவ்வளவு படங்களா...?

பிப்ரவரி 3ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் திரைப்படங்களின் பட்டியல் வெளியாகி உள்ளது.

ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாவது வழக்கம். அந்த வகையில் அடுத்த வாரம் பிப்ரவரி 3ம் தேதி என்னென்ன திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்ற தகவல் இதோ உங்களுக்காக:

1.மைக்கேல்

புரியாத புதிர், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் திரைப்படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமான இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் 'மைக்கேல்'.  மாநகரம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பாராட்டுகளை குவித்த சந்தீப் கிஷன் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தை தயாரிக்கிறார் ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஸ்ரீனிவாஸ். 

மைக்கேல் திரைப்படத்தில் மிரட்டலான வில்லனாக கெத்தாக நடித்துள்ளார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. பான் இந்திய திரைப்பமாக உருவாகியுள்ள இப்படத்தில் திவ்யன்ஷா கௌசிக்,  வரலக்ஷ்மி சரத்குமார், கௌதம் வாசுதேவ் மேனன், அனுசுயா பரத்வாஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கிரண் கௌசிக் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் சாம் சி.எஸ். இந்த திரைப்படம் பிப்ரவரி 3ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.

2. பொம்மை நாயகி

பா.ரஞ்சித் தயாரிப்பில் வெளியாக உள்ள படம் தான் பொம்பை நாயகி. நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் யாழி ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் படம் பொம்மை நாயகி. இப்படத்தில் சிறுமி ஸ்ரீமதி, யோகி பாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படத்தை இயக்கியவர் அறிமுக இயக்குநர் ஷான்.கே.எஸ்.சுந்தரமூர்த்தி.

இந்த படமானது தந்தைக்கும் மகளுக்கும் இடையிலான பாசத்தை அழுத்தமாக பேச முயற்சிப்பதை உணர்த்துகிறது. யோகி பாபுவை நகைச்சுவை கதாபாத்திரங்களில் பார்த்து பழங்கிய ரசிகர்களுக்கு இது நிச்சயம் ஒரு புதிய அனுபவத்தை கொடுக்கும். இப்படம் பிப்ரவரி 3ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.

3.நான் கடவுள் இல்லை

நடிகர் சமுத்திரக்கனி, சாக்ஷி அகர்வால், சரவணம், இனியா உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் நான் கடவுள் இல்லை. இந்த படத்தை இயக்கியவர் எஸ்.ஏ.சந்திரசேகர். நீண்டு காலங்களுக்கு பிறகு இந்த படத்தின் மூலம் மீண்டும் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். சித்தார்த் விபின் இசையமைத்துள்ள இப்படத்தை ஸ்டோர் மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படத்தில் சி.பி.சி.ஐ.டி. அதிகாரியாக சமுத்திரக்கனி நடித்துள்ளார். படத்தில் இமான் அண்ணாச்சியும் காமெடி களத்தில் இறங்கியுள்ளார். குழந்தைகளை மையமாக வைத்து இயக்கப்பட்ட இந்த படம் பிப்ரவரி 3ம் திரையரங்களில் வெளியாக உள்ளது. நீண்ட காலங்களுக்கு பின், இயக்குநராக அவதாரம் எடுத்த எஸ்.ஏ.சந்திரசேகர் இப்படத்தை இயக்கியுள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

4.குற்றப் பின்னணி

பிரண்ட்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியாக உள்ள படம் தான் குற்றப் பின்னணி. இந்த படத்தில் ராட்சசன் படத்தில் கிறிஸ்டோபர் கேரக்டரில் நடித்த சரவணன் கதாநாயகனாக நடித்துள்ளார். என்.பி.இஸ்மாயில் இயக்கிய இந்த படத்தில் தீபாளி, தாட்சாயிணி, சிவா, ஹனிபா என பலரும் நடித்துள்ளனர்.

பெண்கள் சார்ந்த குற்றங்களை பின்புலமாக கொண்டு உருவாக்கப்பட்ட கதை தான் குற்றப் பின்னணி. நடிகர் சரவணனை திரில்லர் படத்தில் பார்த்த ரசிகர்களுக்கு இந்த படம் ஒரு புதிய அனுபவத்தை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் பிப்ரவரி 3ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

5.தலைக்கூத்தல்

லென்ஸ் என்ற படத்தை இயக்கி கவனம் பெற்ற ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியாக உள்ள படம் தலைக்கூத்தல்.  ஓய்நாட் ஸ்டூடியோ சசிகாந்த் தயாரித்துள்ள இப்படத்தில் சமுத்திரகனி, வசுந்தரா, கதிர், வையாபுரி, முருகதாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும், இப்படமானது தென் தமிழகத்தில் அதிகமாக நடக்கும் வயது முதியவர்களை சொந்த குடும்பத்தினரை கருணை கொலை செய்வதை மையமாக கொண்டு இயக்கப்பட படம் தலைக்கூத்தல். இந்த படம் பிப்ரவரி 3ஆம் தேதி திரையரங்களில் வெளியாக  உள்ளது.

6.ரன் பேபி ரன்

ஆர்.கே.பாலாஜி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியாக உள்ள படம் ரன் பேபி ரன். இந்த படத்தை அறிமுக இயக்குநர் ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கியுள்ளார். ப்ரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் ஸ்ருதி வெங்கட், விவேக் பிரசன்னா, ராதிகா சரத்குமார், பகவதி பெருமாள் என ஏராளமானோர் நடித்துள்ளனர். த்ரில்லர் கதையாக இருக்கு இந்த படத்தில் ஆர்.கே.பாலாஜி நடித்துள்ளது ரசிகர்களிடையே மிகவும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. ஒரு பெண்ணின் கொலையைச் பற்றி உருவாக்கப்பட்ட இந்த படம் பிப்ரவரி 3ல் வெளியாகிறது.

7.தி கிரேட் இந்தியன் கிச்சன்

நிமிஷா சஜயன் நடிப்பில் மலையாளத்தில் வெளியாகி பலரின் கவனத்தை பெற்று சமூக வலைதளங்களில் பெரிதும் விவாதிக்கப்பட திரைப்படம் ' தி கிரேட் இந்தியன் கிச்சன் '. பெண்களின் இல்லற வாழ்வில் சுதந்திரம் கொடுக்கப்படுகிறது என ஆண்கள் நினைத்துக் கொண்டு அடிமைப்படுத்தும் அவலத்தையும், பெண்களது நிலைமையை புரிந்து கொள்ளாது ஆண்கள் வக்கிரமாக நடந்து கொள்வதையும் இத்திரைப்படம் பேசியது.

தமிழில் இந்தப் படத்தை, ஜெயம்கொண்டான், கண்டேன் காதலை உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆர். கண்ணன் இந்த படத்தை ரீமேக் செய்துள்ளார். நிமிஷா கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். அவரோடு பாடகி சின்மயி கணவர் ராகுல் ரவீந்திரன், யோகிபாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஜெர்ரிசில்வஸ்டர் வின்சென்ட் இசையமைக்கும்  இந்த படம் பிப்ரவரி 3ஆம் தேதி வெளியாகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Mahua Moitra: பாஜக ஒன்றும் செய்ய முடியாது: நாடாளுமன்றத்தில் அனல் பறக்க உரையாற்றிய திரிணாமுல் எம்.பி
Mahua Moitra: பாஜக ஒன்றும் செய்ய முடியாது: நாடாளுமன்றத்தில் அனல் பறக்க உரையாற்றிய திரிணாமுல் எம்.பி
"பாஜகவினர் உண்மையான இந்துக்கள் அல்ல" பிரதமர், உள்துறை அமைச்சரை அதிரவிட்ட ராகுல் காந்தி!
Breaking News LIVE: அவசர நிலை பிரகடனத்தை பற்றி பேச பாஜகவுக்கு அருகதை இல்லை - ஆ. ராசா
Breaking News LIVE: அவசர நிலை பிரகடனத்தை பற்றி பேச பாஜகவுக்கு அருகதை இல்லை - ஆ. ராசா
Gold Smuggling: 2 மாதம், 267 கிலோ, 167  கோடி.. சென்னை ஏர்போர்ட்டில் கடை வாடகைக்கு எடுத்து தங்கம் கடத்திய யூடியூபர்!
Gold Smuggling: 2 மாதம், 267 கிலோ, 167 கோடி.. சென்னை ஏர்போர்ட்டில் கடை வாடகைக்கு எடுத்து தங்கம் கடத்திய யூடியூபர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

MK Stalin Vs Vijay | திமுக அடி மடியிலேயே.. சவால் விடும் விஜய்..! BEAST MODE ஆரம்பம்Rahul Gandhi | ”அய்யோ பாவம் ராகுல் இது நியாயமா பிர்லா?” சபையில் நடந்தது என்ன?Chennai's Amirtha | அடுத்த கட்ட பாய்ச்சலில் பிரபல கல்வி குழுமம்..பிராண்ட் அம்பாசிடராக ஸ்ரீலீலாJagan Mohan Reddy  vs Chandra Babu Naidu | ஜெகனுக்கு END CARD!அதிரடி காட்டும் சந்திரபாபு..

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mahua Moitra: பாஜக ஒன்றும் செய்ய முடியாது: நாடாளுமன்றத்தில் அனல் பறக்க உரையாற்றிய திரிணாமுல் எம்.பி
Mahua Moitra: பாஜக ஒன்றும் செய்ய முடியாது: நாடாளுமன்றத்தில் அனல் பறக்க உரையாற்றிய திரிணாமுல் எம்.பி
"பாஜகவினர் உண்மையான இந்துக்கள் அல்ல" பிரதமர், உள்துறை அமைச்சரை அதிரவிட்ட ராகுல் காந்தி!
Breaking News LIVE: அவசர நிலை பிரகடனத்தை பற்றி பேச பாஜகவுக்கு அருகதை இல்லை - ஆ. ராசா
Breaking News LIVE: அவசர நிலை பிரகடனத்தை பற்றி பேச பாஜகவுக்கு அருகதை இல்லை - ஆ. ராசா
Gold Smuggling: 2 மாதம், 267 கிலோ, 167  கோடி.. சென்னை ஏர்போர்ட்டில் கடை வாடகைக்கு எடுத்து தங்கம் கடத்திய யூடியூபர்!
Gold Smuggling: 2 மாதம், 267 கிலோ, 167 கோடி.. சென்னை ஏர்போர்ட்டில் கடை வாடகைக்கு எடுத்து தங்கம் கடத்திய யூடியூபர்!
Visu Birthday : குடும்ப சித்திரங்களின் ஏகலைவன் விசுவின் பிறந்தநாள் இன்று !
Visu Birthday : குடும்ப சித்திரங்களின் ஏகலைவன் விசுவின் பிறந்தநாள் இன்று !
அதிரடி! மக்கள் நல்வாழ்வு, வனத்துறை உள்ளிட்ட முக்கிய துறைகளுக்கு புதிய செயலாளர்கள்  - முழு விவரம்
அதிரடி! மக்கள் நல்வாழ்வு, வனத்துறை உள்ளிட்ட முக்கிய துறைகளுக்கு புதிய செயலாளர்கள் - முழு விவரம்
முதல்வர், துணை முதல்வர் இடையே மோதல்! நீயா, நானா போட்டியில் கர்நாடக காங்கிரஸ்!
முதல்வர், துணை முதல்வர் இடையே மோதல்! நீயா, நானா போட்டியில் கர்நாடக காங்கிரஸ்!
செப்டம்பர் 17-ல் மதுவிலக்கு மாநாடு பெண்கள் தலைமையில் நடத்தப்படும் - விசிக தலைவர் திருமாவளவன்
செப்டம்பர் 17-ல் மதுவிலக்கு மாநாடு பெண்கள் தலைமையில் நடத்தப்படும் - விசிக தலைவர் திருமாவளவன்
Embed widget