மேலும் அறிய

Vikram release date |’விக்ரம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு: tag லைனில் ஹிண்ட் கொடுத்த இயக்குநர்!

சமீபத்தில் மார்ச் 31 ஆம் தேதி படம் வெளியாகும் என செய்திகள் வெளியான நிலையில், லோகேஷ் வெளியிட்ட தகவலின் அடிப்படையில்.....

மாநகரம் படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். அந்தப் படம் அனைவரிடத்திலும் பரவலான பாராட்டை பெற்றது. இதனையடுத்து அவர் கைதி படத்தை இயக்கினார். மன்சூர் அலிகானை மனதில் வைத்து கைதி கதையை லோகேஷ் எழுதியிருந்தாலும் இறுதியாக கார்த்தி அதில் நடித்தார்.
கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான இப்படம் மிகப்பெரும் ஹிட் அடித்தது.அதன் பிறகு கோலிவுட் மாஸ் நடிகர் விஜயை இயக்குவதற்கான வாய்ப்பு லோகேஷ் கனகராஜுக்கு கிடைக்கவே அந்த படத்தில் , ரசிகர்கள் இதுவரையில் பார்க்காத வாத்தியை (மாஸ்டர் ) அறிமுகம் செய்தார். அந்த படமும் வசூல் வேட்டை நடத்தியது. இதனை தொடர்ந்து நடிப்பு ஜாம்பவான்கள் என கொண்டாடப்படும் , மும்மூர்த்திகளை ஒரே திரையில் காட்டும் முயற்சியை   கையில் எடுத்துள்ளார். படத்தில் ஏராளமான நடிகர்கள் களமிறக்கப்பட்டாலும் கமல்ஹாசன் , விஜய் சேதுபதி ஃபஹத் பாசில் உள்ளிட்டோரின் காம்போதான் ஹைலைட்.

விக்ரம் படத்தை கமலுக்கு சொந்தமான ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வருகிறது . அனிருத் படத்திற்கு இசையமைத்து வருகிறார்.படத்தின் ஃபஸ்ட்லுக் பாலிவுட் வரையில் பட்டையை கிளப்பிய நிலையில்,  கமலின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியான முதல் glance  வீடியோவும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.அவ்வபோது தனது ட்விட்டர் பக்கத்தில் படத்தின் அப்டேட்டை வெளியும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். தற்போது கமலுடனான புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். இதில் ஹைலைட் என்னவென்றால் படத்தில் ரிலீஸ் குறித்த அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார் லோகேஷ். அதில் விக்ரம் படம் அடுத்த ஆண்டு கோடை மாதங்களில் வெளியாகும் என தெரிவித்துள்ளார். முன்னதாக படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என லோகேஷ் கனகராஜ் குறிப்பிட்டிருந்ததும் நினைவு கூறத்தக்கது. சமீபத்தில் மார்ச் 31 ஆம் தேதி படம் வெளியாகும் என செய்திகள் வெளியான நிலையில், லோகேஷ் வெளியிட்ட தகவலின் அடிப்படையில் முன்பு குறித்த அதே நாளில்தான் படத்தை வெளியிடுவார்கள் என தெரிகிறது. சண்டைக்காட்சியை படமாக்கும் செட்டில் இருந்து கமலுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை  லோகேஷ் வெளியிட்டுள்ளார் லோகேஷ் . அந்த புகைப்படமும் தற்போது வைரலாகி வருகிறது.

 


விக்ரம் படம் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் உருவாகி வருகிறது. கடந்த ஜூலை மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. கடந்த மாத இறுதியில் தாம்பரத்தில் இப்படத்தின் மூன்றாம் கட்டப்படிப்பு நிறைவடைந்த நிலையில், லநான்காம் கட்டப் படப்பிடிப்பு கடந்த 17ஆம் தேதி முதல் தொடங்கியது. ஒரு மாதம் திட்டமிடப்பட்டிருந்த படப்பிடிப்பு கமலுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் சென்னைக்கு மாற்றப்பட்டதாக தெரிகிறது. தற்போது விக்ரம் படப்பிடிப்புகள் , மும்பையில் உள்ள தாராவி பகுதிகளில் நடைப்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. மீண்டும் கோவையில் விடுபட்ட காட்சிகளை எடுக்க திட்டமிட்டுள்ளாராம் இயக்குநர்.

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: மாட்டிக்கொண்ட மாயா, மகேஷ்.. உஷாரான கார்த்திக்! அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: மாட்டிக்கொண்ட மாயா, மகேஷ்.. உஷாரான கார்த்திக்! அடுத்து நடக்கப்போவது என்ன?
Actress Kasthuri: சகோதரரிடம் பேசுவதை கூட வக்கிரமாகச் சித்தரிப்பதா? - நெட்டிசன்களுக்கு கஸ்தூரி கடும் கண்டனம்!
Actress Kasthuri: சகோதரரிடம் பேசுவதை கூட வக்கிரமாகச் சித்தரிப்பதா? - நெட்டிசன்களுக்கு கஸ்தூரி கடும் கண்டனம்!
காவல் அதிகாரிகளுடன் தள்ளுமுள்ளு...காயங்களை காட்டி ஆமிர் கான் உறவினர் வெளியிட்ட வீடியோ வைரல்
காவல் அதிகாரிகளுடன் தள்ளுமுள்ளு...காயங்களை காட்டி ஆமிர் கான் உறவினர் வெளியிட்ட வீடியோ வைரல்
கற்பனை, ஹாரர், நகைச்சுவை கலந்த ‘டிரோன்ஸ்’ – அக்டோபர் 16-ம் தேதி வெளியீடு!
கற்பனை, ஹாரர், நகைச்சுவை கலந்த ‘டிரோன்ஸ்’ – அக்டோபர் 16-ம் தேதி வெளியீடு!

வீடியோ

Abhijeet Dipke : ”பாட்டி இறந்ததை சொல்லலயா?”பொய் சொன்னாரா அபிஜீத் திப்கேவீடியோ ஆதாரத்துடன் வந்த போலீஸ்
Car bike accident : மொத்தமாக பறந்த பைக்! நூலிழையில் தப்பிய இளைஞர்! பகீர் சிசிடிவி காட்சி
Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
’சத்துணவிற்கான கொண்டக்கடலை, பச்சை பயிறு கொள்முதலில் சுணக்கம்’ கேக் வாங்க டெண்டர் விட்ட தவெக அரசு..!
’சத்துணவிற்கான கொண்டக்கடலை கொள்முதலில் சுணக்கம்’ கேக் டெண்டருக்கு துரிதம்..!
திமுக தோத்ததுக்கு SIR காரணமில்ல.. ஸ்டாலினே சொல்லிட்டாரு.. வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
திமுக தோத்ததுக்கு SIR காரணமில்ல.. ஸ்டாலினே சொல்லிட்டாரு.. வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
‘பத்தா’ படத்திற்கு கேரளாவில் அமோக வரவேற்பு! விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பதிவு!
‘பத்தா’ படத்திற்கு கேரளாவில் அமோக வரவேற்பு! விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பதிவு!
13 வருடங்களில் ஒருமுறை கூட இதை செய்யாத பிரதமர் மோடி: பீட்டர் அல்போன்ஸ் சரமாரி தாக்குதல்!
13 வருடங்களில் ஒருமுறை கூட இதை செய்யாத பிரதமர் மோடி: பீட்டர் அல்போன்ஸ் சரமாரி தாக்குதல்!
Kerala Accident: 3 பேரை காரில் இடித்துக் கொன்ற இளைஞன்..! “இந்த விஷயத்தை அப்பா பார்த்துக்கொள்வார்” என பஞ்ச்
3 பேரை காரில் இடித்துக் கொன்ற இளைஞன்..! “இந்த விஷயத்தை அப்பா பார்த்துக்கொள்வார்” என பஞ்ச்
CNG Vehicles: சென்னையில் கிடுகிடுவென உயரும் சிஎன்ஜி வாகனங்கள்..! REFILL நிலையங்கள் பற்றாக்குறை - தீர்வு?
சென்னையில் கிடுகிடுவென உயரும் சிஎன்ஜி வாகனங்கள்..! REFILL நிலையங்கள் பற்றாக்குறை - தீர்வு?
TVK Vs EPS: ”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
Embed widget